என் மலர்
உள்ளூர் செய்திகள்

சின்னசேலம் அருகே சாலை விபத்தில் அரசு ஊழியர் பலி
- போலீசார் வெற்றிச்செல்வனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்ய அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- விபத்து குறித்து சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சின்னசேலம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை கிராமத்தைச் சேர்ந்த வெற்றிச்செல்வன் (வயது 34). இவர் கல்வராயன் மலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார இயக்க மேலாளராக பணிபுரிந்து வந்தார்.
தலைவாசலில் உள்ள நண்பனை சந்திக்க மோட்டார் சைக்கிளில் நேற்று மாலை சென்றார், அவரை பார்த்து விட்டு இரவு வீடு திரும்பினார். அப்போது வி.கூட்ரோடில் உள்ள சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த ஆட்டோ மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வெற்றிச்செல்வனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்.
அவ்வழியே சென்றவர்கள் இது குறித்து சின்னசேலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்து வந்த போலீசார் வெற்றிச்செல்வனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்ய அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






