சங்கராபுரம் அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

சங்கராபுரம் அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலியானார்.பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சங்கராபுரம் அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த தியாகராஜபுரத்தை சேர்ந்தவர் அசலன்(55) கூலி தொழிலாளி. இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் இருந்த புளியம் மரத்தில் புளியம்பழம் பறிக்க ஏறினார். அப்போது மரக்கிளை மீது நின்று கொண்டிருந்த அவர் எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அசலன் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் சப்- இன்ஸ்ெபக்டர்லோகேஸ்வரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com