என் மலர்
கள்ளக்குறிச்சி
- அன்பு ஜோதி ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளில் 15-பேர் விழுப்புரம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை அனுமதிக்கப்பட்டனர்.
- இவர்கள் 15 பேரும் மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
கள்ளக்குறிச்சி:
விழுப்புரம் மாவட்டம் குண்டலிப்புலியூரில் அனுமதி இன்றி இயங்கி வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளில் 15-பேர் விழுப்புரம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை அனுமதிக்கப்பட்டனர். அங்கிருந்து கடந்த பிப்ரவரி 14-ந்தேதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் 15 பேரும் மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இதில் மாற்றுத்திறனாளி சுப்பிரமணி அண்ணி மாது (வயது 29) மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் கடந்த 16-ந் தேதி கழிவறையின் உள் பகுதியில் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு ஜன்னல் மற்றும் மரப்பலகைகளை உடைத்து விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. மேலும் அவரை எங்கு தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் உஷா கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய சுப்பிரமணி அண்ணி மாதுவை வலைவீசி தேடி வருகின்றனர்.
- புதிய பஸ் நிலையத்தில் டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது.
- பாம்பைப்பார்த்த மது பிரியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப் பாளையம் புதிய பஸ் நிலையத்தில் டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது மேலும் இந்த பஸ் நிலையத்தில் வாரம் தோறும் புதன்கிழமை வாரசந்தை நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று புதன்கிழமை என்பதால் கச்சிராய பாளையத்தை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பெண்கள் காய்கறி வாங்குவதற்காக அதிக அளவில் வார சந்தையில் கூடியிருந்தனர். வாரச் சந்தை நடக்கும் இடம் அருகே டாஸ்மாக் மதுபான கடையும் உள்ளது
.இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் மதுபானம் வாங்குவதற்காக மதிப்பிரியர்கள் கடை முன்பு வரிசையில் நின்று கொண்டி ருந்தனர். அபோது மதுபான கடைக்குள் இருந்து பாம்பு ஒன்று வெளிய வந்தது. இதை பார்த்த மது பிரியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மதுப் பிரியர்கள் ஓடுவதை பார்த்து விட்டு சந்தையில் காய்கறி வாங்க வந்த பெண்களும் ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து மது வாங்க வந்த ஒருவர் பாம்பை பிடித்து அருகில் உள்ள குன்று பகுதியில் விட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- அன்பழகன் உள்ளிட்ட சிலர் பிட் காயினில் பணம் முதலீடு செய்தால் அடுத்த 100 நாட்களில் இரட்டிப்பு பணம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறினார்கள்.
- அதனை கேட்டு நாங்கள் சுமார் ரூ.60 லட்சம், பிட் காயின் உள்ளிட்ட பல்வேறு திட்டத்தில் முதலீடு செய்தோம்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், கல்வராயன் மலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 15-க்கும் மேற்பட்டோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியுள்ளதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ஊராங்காணி கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் மற்றும் சங்கராபுரம் அருகே அத்தியூர் கிராமத்தைத் சேர்ந்த அன்பழகன் உள்ளிட்ட சிலர் பிட் காயினில் பணம் முதலீடு செய்தால் அடுத்த 100 நாட்களில் இரட்டிப்பு பணம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறினார்கள். அதனை கேட்டு நாங்கள் சுமார் ரூ.60 லட்சம், பிட் காயின் உள்ளிட்ட பல்வேறு திட்டத்தில் முதலீடு செய்தோம் ஆனால் நாட்கள் ஓடியும் மீண்டும் பணம் தரவில்லை. இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது உங்களால் முடிந்ததை செய்து கொள்ளுங்கள் என கூறுகின்றனர். எனவே பிட் காயின் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்கள் பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
- மதுப்பிரியர்கள் ஓடுவதை பார்த்துவிட்டு சந்தையில் காய்கறி வாங்க வந்த பெண்களும் ஓட்டம் பிடித்தனர்.
- மது வாங்க வந்த ஒருவர் பாம்பை பிடித்து அருகில் உள்ள குன்று பகுதியில் விட்டார்.
கச்சிராயப்பாளையம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் புதிய பஸ் நிலையத்தில் டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது.
மேலும் இந்த பஸ் நிலையத்தில் வாரம் தோறும் புதன்கிழமை வார சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று புதன்கிழமை என்பதால் கச்சிராயப்பாளையத்தை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பெண்கள் காய்கறி வாங்குவதற்காக அதிக அளவில் வார சந்தையில் கூடியிருந்தனர். வாரச்சந்தை நடக்கும் இடம் அருகே டாஸ்மாக் மதுபான கடையும் உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் மதுபானம் வாங்குவதற்காக மதுப்பிரியர்கள் கடை முன்பு வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அபோது மதுபான கடைக்குள் இருந்து பாம்பு ஒன்று வெளிய வந்தது.
இதை பார்த்த மது பிரியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மதுப்பிரியர்கள் ஓடுவதை பார்த்துவிட்டு சந்தையில் காய்கறி வாங்க வந்த பெண்களும் ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து மது வாங்க வந்த ஒருவர் பாம்பை பிடித்து அருகில் உள்ள குன்று பகுதியில் விட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- நகராட்சி பகுதியில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகள் விற்பனை குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
- சுமார் 247 கிலோ அளவிலான பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் கலந்து தயாரித்த குச்சிப்பை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
தமிழ்நாடு முழுவதும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையர் குமரன், நகராட்சி பகுதியில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகள் விற்பனை குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிலையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் ராம்குமார், துப்புரவு ஆய்வாளர் சையத் காதர் ஆகியோர் அடங்கிய நகராட்சி குழுவினர் கள்ளக்குறிச்சி பஸ் நிலையம், துருகம் சாலை, குளத்து மேட்டு தெரு ஆகிய பகுதியில் உள்ள மளிகைக் கடைகள், உணவகம், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடை உள்ளிட்ட 129 கடைகளில் ஆய்வு செய்தனர்.
இதில் சுமார் 247 கிலோ அளவிலான பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் கலந்து தயாரித்த குச்சிப்பை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவ்வாறு பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்த 13 கடை உரிமையாளர்களுக்கு ரூ.14 ஆயிரத்து 400 அபராதம் விதித்தனர். தொடர்ந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை கடைகளில் பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ கூடாது எனவும் வரும் காலங்களில் மீண்டும் பயன்படுத்தினால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் கடை உரிமையாளர்களை எச்சரித்தனர். அப்போது தூய்மை இந்தியா திட்டப் பரப்புரையாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள் மற்றும் பணியாளர்கள் பலரும் உடன் இருந்தனர்.
- அதிர்ச்சியடைந்த சுப்பிரமணியம் பதறி அடித்துக் கொண்டு கிராமத்திற்கு சென்றார்.
- தியாகதுருகம் போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
உளுந்தூர்பேட்டை:
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நெடுமானுர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 65). கூலிதொழிலாளி. இவருக்கு கவுண்டமணி (30), செந்தில் (28) என 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
வீட்டில் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக சுப்பிரமணி கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. தந்தை காணாமல் போன நிலையில் கடந்த 3 நாட்களாக கவுண்டமணி, செந்தில் ஆகியோர் சுப்பிரமணியை பல இடங்களில் தேடி உள்ளனர்.
சுப்பிரமணியின் மனைவி மற்றும் அவரது மகள் ஆகியோர் புதுச்சேரியில் உள்ள உறவினர்கள் வீடுகளுக்கு சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் அவரை தேடிச் சென்றனர்.
இதற்கிடையே கள்ளக் குறிச்சி மாவட்டம் தியாக துருகம் அருகே உள்ள காட்டுப் பகுதியில் முதியவர் பிணம் ஒன்று அழுகிய நிலையில் கிடப்பதை பார்த்த ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் இது குறித்து தியாகதுருகம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் அங்கு வந்த தியாகதுருகம் வனத்துறையினர் மற்றும் போலீசார் உயிரிழந்த முதியவரின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு அடையாளம் காண முயற்சி செய்தனர். கிட்டத்தட்ட காணாமல் போன சுப்பிரமணியின் உருவமும் உயிரிழந்து கிடந்த முதியவரின் உடல் அமைப்பும் ஒரே மாதிரி இருந்ததால் தியாகதுருகம் வனப்பகுதியில் கிடந்த பிணம், தனது தந்தை தான் என முடிவு செய்த கவுண்டமணி, செந்தில் ஆகியோர் பிணத்தை காட்டுப்பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் எடுத்துக் கொண்டு எலவனாசூர்கோட்டை அருகே உள்ள நெடுமானுர் கிராமத்திற்கு கொண்டு வந்தனர்.
தந்தை உயிரிழந்துவிட்டார் என உறவினர்களுக்கு அவர்கள் தகவல் சொல்லவே, இறுதி சடங்கிற்கான வேலைகளை தொடங்கினார்கள்.
தொடர்ந்து கவுண்டமணி, செந்தில் ஆகியோர் பிணத்தை எடுத்துக்கொண்டு சுடுகாட்டிற்கு சென்ற நிலையில், அவர்களது உறவினர் ஒருவர் சுப்பிரமணியன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மாலை வாங்க எலவனா சூர்கோட்டைக்கு சென்றார்.
அப்போது கடைவீதியில் முதியவர் சுப்பிரமணி நடந்து வந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணியின் உறவினர் நீ இறந்துவிட்டதாக கூறி உனது மகன்கள் அங்கே பிணத்தை வைத்துக் கொண்டு இறுதி சடங்கு செய்து கொண்டிருக்கிறார்கள் என கூறினார்.
இதில் அதிர்ச்சியடைந்த சுப்பிரமணியம் பதறி அடித்துக் கொண்டு கிராமத்திற்கு சென்றார். கதையில் மிகப்பெரிய திருப்பமாக சுப்பிரமணி மீண்டும் உயிரோடு வந்ததை பார்த்து கவுண்டமணி, செந்தில் அதிர்ச்சி அடைந்த னர். இந்த தகவல் கிடைத்த சிறிது நேரத்தில் அங்கு வந்த தியாகதுருகம் போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- துப்புரவு பணியாளர்களுக்கு மாதம் தோறும் வழங்கக்கூடிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காததை கண்டித்து பேரூராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- உடனடியாக துப்புரவு பணியாளருக்கு உபகரணம் வழங்கவில்லை என்றால் விரைவில் பெரிய போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்து கலைந்து சென்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 18 வார்டுகளில் பணி செய்யும் சுமார் 100-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு மாதம் தோறும் வழங்கக்கூடிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காததை கண்டித்து பேரூராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் துப்புரவு பணி செய்யும் பொழுது அணிந்து கொள்ளும் மாஸ்க், கிளவுஸ், கிருமி நாசினி ஆகியவை பேரூராட்சி நிர்வாகம் வழங்காததால் துப்புரவு பணியாளர்கள் பாதுகாப்பின்றி பல மாதங்களாக பணி செய்து வருவதாக கூறப்படுகிறது.
தூய்மை பணியின் போது எந்த உபகரணமும் இல்லாமல் பணி செய்வதால் உயிருக்கு பாதுகாப்பு இல்லை எனவும் பணி செய்யும்போது உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.இந்தப் போராட்டத்தால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக துப்புரவு பணி பாதிக்கப்பட்டது. உடனடியாக துப்புரவு பணியாளருக்கு உபகரணம் வழங்கவில்லை என்றால் விரைவில் பெரிய போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்து கலைந்து சென்றனர். கொரோனா மீண்டும் வேகமாக பரவி வரும் நிலையில் பேரூராட்சி நிர்வாகத்தின் இந்த செயல் கண்டனத்திற்குறியது என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் தெரிவித்தனர்.
- பிளஸ்-2 மாணவி. இவர் இரவு வழக்கம் போல் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றார். அதிகாலை 5 மணி அளவில் பார்த்த பொழுது அரிதா இல்லாததை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
- பின்னர் அக்கம் பக்கம் தெரிந்த இடங்கள் என எங்கு தேடியும் கிடைக்காததால் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் மாணவியின் தந்தை புகார் அளித்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி அரசுப் பள்ளியில் படித்து வந்தார். இவர் கடந்த 24-ந்தேதி இரவு வழக்கம் போல் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றார். அதிகாலை 5 மணி அளவில் பார்த்த பொழுது அரிதா இல்லாததை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அக்கம் பக்கம் தெரிந்த இடங்கள் என எங்கு தேடியும் கிடைக்காததால் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் மாணவியின் தந்தை புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பிளஸ்-2 மாணவியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
- முனியப்பிள்ளை மகன் மூர்த்தி (வயது 17). கோவையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். உறவினர் வீட்டு விசேஷத்திற்காக சொந்த ஊருக்கு வந்தார்.
- முனியப்பிள் ளைக்கும், அவரது மகன் மூர்த்திக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த பூட்டை கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பிள்ளை மகன் மூர்த்தி (வயது 17). கோவையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். உறவினர் வீட்டு விசேஷத்திற்காக சொந்த ஊருக்கு வந்தார் இந்நிலையில் இவரது தந்தை முனியப்பிள்ளை (60) வீட்டின் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்தபோது துணி விலகி இருந்ததாக தெரிகிறது. இதை பார்த்த அங்கிருந்த வர்கள் அவர் மீது துணியை போட்டுள்ளனர் இதனால் முனியப்பிள் ளைக்கும், அவரது மகன் மூர்த்திக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திர மடைந்த முனியப்பிள்ளை அருகில் இருந்த அரிவாளை எடுத்து மகன் என்றும் பாராமல் மூர்த்தியை வெட்டினார் இதில் காயமடைந்த மூர்த்தி கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியப்பிள்ளையை கைது செய்தனர்.
- மணி (வயது59) போலீஸ் சப்- இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வந்தார். இவர் தியாக துருகத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கல்மீது மோட்டார் சைக்கிள் மோதி நிலை தடு மாறி மணி கீழே விழுந்ததில் இவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது
- சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மணி இறந்து போனார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி எம்.ஆர்.என். நகர் பகுதியை சேர்ந்தவர் மணி (வயது59). தியாகதுருகம் போலீஸ் நிலை யத்தில்வர் நேற்று புகார் மனு சம்மந்த மான விசாரணைக் காக தியாக துருகத்தில் இருந்து பானை யங்கால் கிராமத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது வி.புதூர் பிரிவு சாலை அருகே சென்ற போது சாலையில் நெல் குவித்து மூடப்பட்டு அதன் அருகே கருங்கல் வைக்கப்பட்டிருந்தது.
அந்த கல்மீது மோட்டார் சைக்கிள் மோதி நிலை தடு மாறி மணி கீழே விழுந்ததில் இவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்த னர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மணி இறந்து போனார். அவரது உடல் பிரேத பரிசோ தனை க்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தியாகதுருகம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மணி ஓய்வு பெற இன்னும் ஒரு சில மாதங்கள் உள்ள நிலையில் மனு விசாரணை க்காக சென்றபோது தவறி விழுந்து இறந்து போன சம்பவம் போலீசாரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மெ க்கானிக்கல் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 25-ந்தே தி கூத்தக்–குடி காப்புக்காட்டில் ஜெகன்ஸ்ரீ கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டு கிடந்தார்.
- 4 பேரையும் போலீசார் கைது செய்து கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதி–மன்ற நீதி–பதி கண்–ணன் முன்பு ஆஜர்–ப–டுத்தினர்
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகருகம் அருகே கூத்தக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவருடைய மனைவி செந்தமிழ் செல்வி. இவர் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக உள்ளார். இவர்களுடைய மகன் ஜெகன் ஸ்ரீ (வயது 19) இவர் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கழுதூரில் உள்ள தனியார் பாலிடெ க்னிக் கல்லூரியில் மெ க்கானிக்கல் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 25-ந்தே தி கூத்கக்குடி காப்புக்காட்டில் ஜெகன்ஸ்ரீ கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டு கிடந்தார். இதையடுத்து துணை போலீஸ் சூப்ரண்டு ரமேஷ் மற்றும் தாசில்தார் சத்தியநா ராயணன்ஆகியோர் முன்னிலையில் ஜெகன்ஸ்ரீ உடல் தோண்டி எடுக்கப்ட்டு பிரேத பரிசோதக்காக கள்ளக் குறிச்சி அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், முன்விரோதம் காரணமாக ஜெகன் ஸ்ரீயை அதே ஊரை சேர்ந்த அங்கமுத்து மகன் அய்யப்பன் (32), மணிகண்டன் மகன் ஆகாஷ் (20), ரவிச்ந்திரன் மகன் அபிலரசன் (27), 17 வயது சிறுவன் ஆகியோர் மது பாட்டிலால் தாக்கியும், கத்தியால் கழுத்தை அறுத்–தும் கொலை செய்தது தெரியவந்தது.
இதையத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கண்ணன் முன்பு ஆஜர்படுத்தினர். அய்யப்பன், ஆகாஷ், அபிலரசன் ஆகிய 3 பேரையும் 15 நாள் கடலூர் மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன் பேரில் அய்–யப்பன் உள்பட 3 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்
மேலும் 17 வயது சிறுவன், கடலூர் சாவடி பகுதியில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான்.
- திருக்கோவிலூர் அருகே உள்ளமுருக்கம்பாடி கிராமத்தின் வனப் பகுதியில் காசு வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது சூதாடி கொண்டிருந்த 6 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். அதே சமயம் சூதாடியவர்களில் ஒருவரான திருவண்ணாமலை மாவட்டம் பெருமணம் கிராமத்தைச் சேர்ந்த வடிவேல் மகன் மணிகண்டன் (வயது 26) என்பவர் மட்டும் போலீசில் சிக்கினார்.
- 6 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்,அதில் மணிகண்டன் (வயது 26) என்பவர் மட்டும் போலீசில் சிக்கினார்.
கள்ளக்குறிச்சி:
திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை அடுத்த முருக்கம்பாடி கிராமத்தின் வனப் பகுதியில் காசு வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் விரைந்து சென்ற மணலூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் மதன்மோகன் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்
அப்போது போலீஸ் வருவதை கண்ட சூதாடி கொண்டிருந்த 6 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். அதே சமயம் சூதாடியவர்களில் ஒருவரான திருவண்ணாமலை மாவட்டம் பெருமணம் கிராமத்தைச் சேர்ந்த வடிவேல் மகன் மணிகண்டன் (வயது 26) என்பவர் மட்டும் போலீசில் சிக்கினார். அவரை கைது செய்த போலீசார் அங்கு சூதாடிய 7 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் சூதாடிய இடத்தில் இருந்து ரூ.150 பணமும் 6 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.






