என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • விபத்தில் சிக்கிய 2 வாகனங்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்திய போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர்.
    • சாலையோரம் நின்று கொண்டிருந்த மினி லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் உளுந்தூர்பேட்டையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    உளுந்தூர்பேட்டை:

    உளுந்தூர்பேட்டை அருகே மேட்டத்தூரில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரம் மினி லாரி நின்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை இந்த நெடுஞ்சாலையில் வந்த கார் இந்த மினி லாரி மீது மோதியது. இதில் காரில் வந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 2 பேர் ஆபத்தான நிலையில் துடிதுடித்துக் கொண்டிருந்தனர்.

    இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருநாவலூர் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தினர். இதில் இறந்து போனவர்களில் ஒருவர் கார் டிரைவர் என்பதும், மற்றொருவர் கோவையைச் சேர்ந்த விவேகானந்தன் என்பதும் தெரியவந்தது. மேலும், பலத்த காயம் அடைந்தவர்கள் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த சரவணன், மகாலிங்கம் என்பதும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து திருநாவலூர் போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காகவும், உயிரிழந்த 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து விபத்தில் சிக்கிய 2 வாகனங்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்திய போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். அதிகாலையில் சாலையோரம் நின்று கொண்டிருந்த மினி லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் உளுந்தூர்பேட்டையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயற்படுத்தப்பட்டு வருகிறது.
    • 2023-ம் ஆண்டிற்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது

    கள்ளக்குறிச்சி::

    தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2022-2023-ம் ஆண்டிற்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி 58 வயது நிறைவடைந்து இருக்க வேண்டும்.

    மேலும் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்க்குள் இருக்க வேண்டும். வட்டாட்சியர் அலுவ லகத்தில் இணையவழியில் பெறப்பட்ட வருமானச் சான்று, தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதாராங்கள் மற்றும் தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதிநிலைச் சான்று தமிழறிஞர்கள் 2 பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவம் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்திலோ இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் மாவட்டத் தமிழ் உதவி இயக்குநர் அலுவலகத்தில் அளிக்க வேண்டும். நேரடியாக தமிழ் வளர்ச்சி இயக்கத்தில் அளிக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்று க்கொள்ள ப்படமாட்டாது. இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படுபவருக்கு மாதந்தோறும் உதவி த்தொகையாக ரூ.3 ஆயிரத்து 500, மருத்துவப்படி ரூ.500 ஆக மொத்தம் ரூ.4 ஆயிரம் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

    • ரமேஷ் (வயது 29) தனியார் பஸ் டிரைவர். இவர் பகண்டை கூட்டுரோட்டில் உள்ள தனது அக்காள் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்
    • திருவண்ணாமலை பகுதியில் இருந்து வந்த நெல் அறுவடை எந்திரம் ரமேஷ் மீது மோதியது

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே மூங்கில்துறைப்பட்டு பழையூர் காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 29) தனியார் பஸ் டிரைவர். இவர் பகண்டை கூட்டுரோட்டில் உள்ள தனது அக்காள் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அங்கி ருந்து ஊருக்கு புறப்பட்டார். வடபொன்பரப்பி அடுத்த புதூர் ஏரிக்கரை அருகே உள்ள ஒரு வளைவு பகுதி யில் வந்து கொண்டிருந்த போது திருவண்ணாமலை பகுதியில் இருந்து வந்த நெல் அறுவடை எந்திரம் ரமேஷ் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்த வடபொன்பரப்பி போலீ சார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரணை நடத்தி னர். பின்னர் விபத்தில் பலியான ரமேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 8 கடைகளில் ஷட்டரின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்குள்ள கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
    • அதில் கிடைத்த வீடியோவை வைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டையில் திருக்கோவிலூர் சாலையில் உள்ள எலக்ட்ரிக்கல் பெயிண்ட் கடை, உணவகம், செருப்பு கடை, டீக்கடை உள்ளிட்ட 8 கடைகளில் ஷட்டரின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்குள்ள கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திருட்டு சம்பவம் சம்பந்தமாக சி.சி.டி.வி. காட்சி ஏதேனும் பதிவாகியுள்ளதா என ஆய்வு செய்தனர். அதில் கிடைத்த வீடியோவை வைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்

    • அன்பு ஜோதி ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளில் 15-பேர் விழுப்புரம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை அனுமதிக்கப்பட்டனர்.
    • இவர்கள் 15 பேரும் மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    விழுப்புரம் மாவட்டம் குண்டலிப்புலியூரில் அனுமதி இன்றி இயங்கி வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளில் 15-பேர் விழுப்புரம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை அனுமதிக்கப்பட்டனர். அங்கிருந்து கடந்த பிப்ரவரி 14-ந்தேதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் 15 பேரும் மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

    இதில் மாற்றுத்திறனாளி சுப்பிரமணி அண்ணி மாது (வயது 29) மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் கடந்த 16-ந் தேதி கழிவறையின் உள் பகுதியில் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு ஜன்னல் மற்றும் மரப்பலகைகளை உடைத்து விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. மேலும் அவரை எங்கு தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் உஷா கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய சுப்பிரமணி அண்ணி மாதுவை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • புதிய பஸ் நிலையத்தில் டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது.
    • பாம்பைப்பார்த்த மது பிரியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப் பாளையம் புதிய பஸ் நிலையத்தில் டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது   மேலும் இந்த பஸ் நிலையத்தில் வாரம் தோறும் புதன்கிழமை வாரசந்தை நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று புதன்கிழமை என்பதால் கச்சிராய பாளையத்தை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பெண்கள் காய்கறி வாங்குவதற்காக அதிக அளவில் வார சந்தையில் கூடியிருந்தனர். வாரச் சந்தை நடக்கும் இடம் அருகே டாஸ்மாக் மதுபான கடையும் உள்ளது

    .இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் மதுபானம் வாங்குவதற்காக மதிப்பிரியர்கள் கடை முன்பு வரிசையில் நின்று கொண்டி ருந்தனர். அபோது மதுபான கடைக்குள் இருந்து பாம்பு ஒன்று வெளிய வந்தது. இதை பார்த்த மது பிரியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மதுப் பிரியர்கள் ஓடுவதை பார்த்து விட்டு சந்தையில் காய்கறி வாங்க வந்த பெண்களும் ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து மது வாங்க வந்த ஒருவர் பாம்பை பிடித்து அருகில் உள்ள குன்று பகுதியில் விட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • அன்பழகன் உள்ளிட்ட சிலர் பிட் காயினில் பணம் முதலீடு செய்தால் அடுத்த 100 நாட்களில் இரட்டிப்பு பணம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறினார்கள்.
    • அதனை கேட்டு நாங்கள் சுமார் ரூ.60 லட்சம், பிட் காயின் உள்ளிட்ட பல்வேறு திட்டத்தில் முதலீடு செய்தோம்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், கல்வராயன் மலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 15-க்கும் மேற்பட்டோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியுள்ளதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ஊராங்காணி கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் மற்றும் சங்கராபுரம் அருகே அத்தியூர் கிராமத்தைத் சேர்ந்த அன்பழகன் உள்ளிட்ட சிலர் பிட் காயினில் பணம் முதலீடு செய்தால் அடுத்த 100 நாட்களில் இரட்டிப்பு பணம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறினார்கள். அதனை கேட்டு நாங்கள் சுமார் ரூ.60 லட்சம், பிட் காயின் உள்ளிட்ட பல்வேறு திட்டத்தில் முதலீடு செய்தோம் ஆனால் நாட்கள் ஓடியும் மீண்டும் பணம் தரவில்லை. இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது உங்களால் முடிந்ததை செய்து கொள்ளுங்கள் என கூறுகின்றனர். எனவே பிட் காயின் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்கள் பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • மதுப்பிரியர்கள் ஓடுவதை பார்த்துவிட்டு சந்தையில் காய்கறி வாங்க வந்த பெண்களும் ஓட்டம் பிடித்தனர்.
    • மது வாங்க வந்த ஒருவர் பாம்பை பிடித்து அருகில் உள்ள குன்று பகுதியில் விட்டார்.

    கச்சிராயப்பாளையம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் புதிய பஸ் நிலையத்தில் டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது.

    மேலும் இந்த பஸ் நிலையத்தில் வாரம் தோறும் புதன்கிழமை வார சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று புதன்கிழமை என்பதால் கச்சிராயப்பாளையத்தை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பெண்கள் காய்கறி வாங்குவதற்காக அதிக அளவில் வார சந்தையில் கூடியிருந்தனர். வாரச்சந்தை நடக்கும் இடம் அருகே டாஸ்மாக் மதுபான கடையும் உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் மதுபானம் வாங்குவதற்காக மதுப்பிரியர்கள் கடை முன்பு வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அபோது மதுபான கடைக்குள் இருந்து பாம்பு ஒன்று வெளிய வந்தது.

    இதை பார்த்த மது பிரியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மதுப்பிரியர்கள் ஓடுவதை பார்த்துவிட்டு சந்தையில் காய்கறி வாங்க வந்த பெண்களும் ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து மது வாங்க வந்த ஒருவர் பாம்பை பிடித்து அருகில் உள்ள குன்று பகுதியில் விட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • நகராட்சி பகுதியில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகள் விற்பனை குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
    • சுமார் 247 கிலோ அளவிலான பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் கலந்து தயாரித்த குச்சிப்பை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    தமிழ்நாடு முழுவதும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையர் குமரன், நகராட்சி பகுதியில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகள் விற்பனை குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    இந்நிலையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் ராம்குமார், துப்புரவு ஆய்வாளர் சையத் காதர் ஆகியோர் அடங்கிய நகராட்சி குழுவினர் கள்ளக்குறிச்சி பஸ் நிலையம், துருகம் சாலை, குளத்து மேட்டு தெரு ஆகிய பகுதியில் உள்ள மளிகைக் கடைகள், உணவகம், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடை உள்ளிட்ட 129 கடைகளில் ஆய்வு செய்தனர்.

    இதில் சுமார் 247 கிலோ அளவிலான பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் கலந்து தயாரித்த குச்சிப்பை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவ்வாறு பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்த 13 கடை உரிமையாளர்களுக்கு ரூ.14 ஆயிரத்து 400 அபராதம் விதித்தனர். தொடர்ந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை கடைகளில் பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ கூடாது எனவும் வரும் காலங்களில் மீண்டும் பயன்படுத்தினால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் கடை உரிமையாளர்களை எச்சரித்தனர். அப்போது தூய்மை இந்தியா திட்டப் பரப்புரையாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள் மற்றும் பணியாளர்கள் பலரும் உடன் இருந்தனர்.

    • அதிர்ச்சியடைந்த சுப்பிரமணியம் பதறி அடித்துக் கொண்டு கிராமத்திற்கு சென்றார்.
    • தியாகதுருகம் போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    உளுந்தூர்பேட்டை:

    உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நெடுமானுர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 65). கூலிதொழிலாளி. இவருக்கு கவுண்டமணி (30), செந்தில் (28) என 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

    வீட்டில் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக சுப்பிரமணி கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. தந்தை காணாமல் போன நிலையில் கடந்த 3 நாட்களாக கவுண்டமணி, செந்தில் ஆகியோர் சுப்பிரமணியை பல இடங்களில் தேடி உள்ளனர்.

    சுப்பிரமணியின் மனைவி மற்றும் அவரது மகள் ஆகியோர் புதுச்சேரியில் உள்ள உறவினர்கள் வீடுகளுக்கு சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் அவரை தேடிச் சென்றனர்.

    இதற்கிடையே கள்ளக் குறிச்சி மாவட்டம் தியாக துருகம் அருகே உள்ள காட்டுப் பகுதியில் முதியவர் பிணம் ஒன்று அழுகிய நிலையில் கிடப்பதை பார்த்த ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் இது குறித்து தியாகதுருகம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    பின்னர் அங்கு வந்த தியாகதுருகம் வனத்துறையினர் மற்றும் போலீசார் உயிரிழந்த முதியவரின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு அடையாளம் காண முயற்சி செய்தனர். கிட்டத்தட்ட காணாமல் போன சுப்பிரமணியின் உருவமும் உயிரிழந்து கிடந்த முதியவரின் உடல் அமைப்பும் ஒரே மாதிரி இருந்ததால் தியாகதுருகம் வனப்பகுதியில் கிடந்த பிணம், தனது தந்தை தான் என முடிவு செய்த கவுண்டமணி, செந்தில் ஆகியோர் பிணத்தை காட்டுப்பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் எடுத்துக் கொண்டு எலவனாசூர்கோட்டை அருகே உள்ள நெடுமானுர் கிராமத்திற்கு கொண்டு வந்தனர்.

    தந்தை உயிரிழந்துவிட்டார் என உறவினர்களுக்கு அவர்கள் தகவல் சொல்லவே, இறுதி சடங்கிற்கான வேலைகளை தொடங்கினார்கள்.

    தொடர்ந்து கவுண்டமணி, செந்தில் ஆகியோர் பிணத்தை எடுத்துக்கொண்டு சுடுகாட்டிற்கு சென்ற நிலையில், அவர்களது உறவினர் ஒருவர் சுப்பிரமணியன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மாலை வாங்க எலவனா சூர்கோட்டைக்கு சென்றார்.

    அப்போது கடைவீதியில் முதியவர் சுப்பிரமணி நடந்து வந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணியின் உறவினர் நீ இறந்துவிட்டதாக கூறி உனது மகன்கள் அங்கே பிணத்தை வைத்துக் கொண்டு இறுதி சடங்கு செய்து கொண்டிருக்கிறார்கள் என கூறினார்.

    இதில் அதிர்ச்சியடைந்த சுப்பிரமணியம் பதறி அடித்துக் கொண்டு கிராமத்திற்கு சென்றார். கதையில் மிகப்பெரிய திருப்பமாக சுப்பிரமணி மீண்டும் உயிரோடு வந்ததை பார்த்து கவுண்டமணி, செந்தில் அதிர்ச்சி அடைந்த னர். இந்த தகவல் கிடைத்த சிறிது நேரத்தில் அங்கு வந்த தியாகதுருகம் போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

    • துப்புரவு பணியாளர்களுக்கு மாதம் தோறும் வழங்கக்கூடிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காததை கண்டித்து பேரூராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • உடனடியாக துப்புரவு பணியாளருக்கு உபகரணம் வழங்கவில்லை என்றால் விரைவில் பெரிய போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்து கலைந்து சென்றனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 18 வார்டுகளில் பணி செய்யும் சுமார் 100-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு மாதம் தோறும் வழங்கக்கூடிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காததை கண்டித்து பேரூராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்  துப்புரவு பணி செய்யும் பொழுது அணிந்து கொள்ளும் மாஸ்க், கிளவுஸ், கிருமி நாசினி ஆகியவை பேரூராட்சி நிர்வாகம் வழங்காததால் துப்புரவு பணியாளர்கள் பாதுகாப்பின்றி பல மாதங்களாக பணி செய்து வருவதாக கூறப்படுகிறது.

    தூய்மை பணியின் போது எந்த உபகரணமும் இல்லாமல் பணி செய்வதால் உயிருக்கு பாதுகாப்பு இல்லை எனவும் பணி செய்யும்போது உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.இந்தப் போராட்டத்தால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக துப்புரவு பணி பாதிக்கப்பட்டது. உடனடியாக துப்புரவு பணியாளருக்கு உபகரணம் வழங்கவில்லை என்றால் விரைவில் பெரிய போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்து கலைந்து சென்றனர். கொரோனா மீண்டும் வேகமாக பரவி வரும் நிலையில் பேரூராட்சி நிர்வாகத்தின் இந்த செயல் கண்டனத்திற்குறியது என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் தெரிவித்தனர்.

    • பிளஸ்-2 மாணவி. இவர் இரவு வழக்கம் போல் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றார். அதிகாலை 5 மணி அளவில் பார்த்த பொழுது அரிதா இல்லாததை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
    • பின்னர் அக்கம் பக்கம் தெரிந்த இடங்கள் என எங்கு தேடியும் கிடைக்காததால் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் மாணவியின் தந்தை புகார் அளித்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி அரசுப் பள்ளியில் படித்து வந்தார். இவர் கடந்த 24-ந்தேதி இரவு வழக்கம் போல் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றார். அதிகாலை 5 மணி அளவில் பார்த்த பொழுது அரிதா இல்லாததை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் அக்கம் பக்கம் தெரிந்த இடங்கள் என எங்கு தேடியும் கிடைக்காததால் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் மாணவியின் தந்தை புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பிளஸ்-2 மாணவியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ×