கள்ளக்குறிச்சியில் வயது முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு உதவித்தொகை

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயற்படுத்தப்பட்டு வருகிறது.2023-ம் ஆண்டிற்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது
கள்ளக்குறிச்சியில்  வயது முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு உதவித்தொகை
Published on

கள்ளக்குறிச்சி::

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2022-2023-ம் ஆண்டிற்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி 58 வயது நிறைவடைந்து இருக்க வேண்டும்.

மேலும் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்க்குள் இருக்க வேண்டும். வட்டாட்சியர் அலுவ லகத்தில் இணையவழியில் பெறப்பட்ட வருமானச் சான்று, தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதாராங்கள் மற்றும் தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதிநிலைச் சான்று தமிழறிஞர்கள் 2 பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவம் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்திலோ இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் மாவட்டத் தமிழ் உதவி இயக்குநர் அலுவலகத்தில் அளிக்க வேண்டும். நேரடியாக தமிழ் வளர்ச்சி இயக்கத்தில் அளிக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்று க்கொள்ள ப்படமாட்டாது. இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படுபவருக்கு மாதந்தோறும் உதவி த்தொகையாக ரூ.3 ஆயிரத்து 500, மருத்துவப்படி ரூ.500 ஆக மொத்தம் ரூ.4 ஆயிரம் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com