என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நாகக்குப்பம் தகரை கிராமத்தில் சாராயம் விற்பனை செய்து வருவதாக சின்னசேலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது
    • நாககுப்பம் கிழக்கு காட்டுக்கொட்டாய் பகுதியில் செல்வி (வயது 36) கஜேந்திரன் (45), சித்ரா (42), சுதாகர் (55) ஆகியோர் அவர்களது வீட்டில் சாராயம் விற்று வந்தது தெரியவந்தது. அங்கு

     கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவ ட்டம் சின்னசேலம் அருகே உள்ள நாகக்குப்பம் தகரை கிராமத்தில் சாராயம் விற்பனை செய்து வருவதாக சின்னசேலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி, மணிகண்டன் தலைமையிலான போலீசார் நாககுப்பம் மற்றும் தகரை கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நாககுப்பம் கிழக்கு காட்டுக்கொட்டாய் பகுதியில் செல்வி (வயது 36) கஜேந்திரன் (45), சித்ரா (42), சுதாகர் (55) ஆகியோர் அவர்களது வீட்டில் சாராயம் விற்று வந்தது தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார் மடக்கிப் பிடிக்க முயற்சித்தனர். இதில் கஜேந்திரன் மற்றும் சுதாகர் அங்கிருந்து தப்பி சென்றனர்.

    அதேபோல் தகரை கிராமத்தில் மூணாங்கண்ணி குட்டை அருகே கலா (42), சுரேஷ் (32) ஆகியோர் சாராயம் விற்பனை செய்து வந்தவரை போலீசார் மடிக்கி பிடித்தனர். அப்போது சுதாகர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதில் பிடிபட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பிச்சென்ற கஜேந்திரன், சுதாகர், சுரேஷ் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதி எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பாக சயீத் சாஹிப் ஓர் சகாப்தம் நினைவு தின உறுதியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • தொகுதி தலைவர் ஷா நாவஸ்கான் தலைமை தாங்கினார். செயலாளர் பாபு வரவேற்புரை நிகழ்த்தினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதி எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பாக சயீத் சாஹிப் ஓர் சகாப்தம் நினைவு தின உறுதியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது தொகுதி தலைவர் ஷா நாவஸ்கான் தலைமை தாங்கினார். செயலாளர் பாபு வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட பொருளாளர் தாஹிர் அலி முன்னிலை வகித்தார்.

    கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் முகமத் ரபி கலந்து கொண்டு முன்னாள் தேசிய தலைவர் மறைந்த சயீத் சாஹிப் தியாகங்களையும், ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மக்களின் உரிமைக்கான போராட்ட களத்தில் முன்னின்று செயல்பட்ட துணிச்சலையும் நினைவுப் படுத்தி அவர் வழியில் மக்கள் உரிமைக்காக முன்னின்று போராட உறுதி ஏற்க வேண்டும் என எடுத்துரைத்தார். மூரார்பாது கிளை தலைவர் சிராஜ், பொருளாளர் பஷீர், சமூக ஆர்வலர் கண்ணன், அன்சர் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். தொகுதி பொருளாளர் ரகமத்துல்லா நன்றி கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மளிகை கடை ஒன்றில் வாலிபர் ஒருவர் டைரி மில்க் என சொல்லப்படும் விலை உயர்ந்த சாக்லேட் ஒன்றை வாங்கியுள்ளார்.
    • ஆசையாக வாங்கி அந்த சாக்லேட்டை பிரித்து பார்க்கும்போது அதில் புழுக்கள் இருந்துள்ளன.

    உளுந்தூர்பேட்டை:

    உளுந்தூர்பேட்டை அருகே மளிகை கடை ஒன்றில் வாலிபர் ஒருவர் டைரி மில்க் என சொல்லப்படும் விலை உயர்ந்த சாக்லேட் ஒன்றை வாங்கியுள்ளார். ஆசையாக வாங்கி அந்த சாக்லேட்டை பிரித்து பார்க்கும்போது அதில் புழுக்கள் இருந்துள்ளன. காலாவதி தேதி செப்டம்பர் மாதம் வரை உள்ள நிலையில் எப்படி புழுக்கள் வந்தது என தெரியாமல் புலம்பிய அந்த வாலிபர் இது குறித்து வீடியோக்கள் மற்றும் படங்களை எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

    தற்போது இந்த வீடியோக்கள் மற்றும் போட்டோ அடிப்படையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். டைரி மில்க் சாக்லேட் உலக அளவில் மிகவும் பிரபலமானது என்கிற நிலையில், காலாவதி தேதிக்கு முன்னரே இதில் புழுக்கள் எப்படி வந்தது என்பது மிகப்பெரும் கேள்வியாக உள்ளது.

    • சங்கரன்கோவிலில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் பழனிச்சாமி மீது மோதியது.
    • திருநாவலூர் போலீசார் பழனிச்சாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    உளுந்தூர்பேட்டை:

    சென்னை முடிச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (வயது 53). இவர் தனது குடும்பத்துடன் மதுரையில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் கலந்து கொண்டு மீண்டும் தனியார் பஸ்சில் சென்னைக்கு திரும்பினார். உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாதூர் காந்தி நகர் பகுதியில் உள்ள டீக்கடையில் அனைவரும் டீ குடிப்பதற்காக பஸ் நிறுத்தப்பட்டது.

    அப்போது பழனிச்சாமி சிறுநீர் கழிப்பதற்காக சாலையை கடந்துள்ளார். அப்போது சங்கரன்கோவிலில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் பழனிச்சாமி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பழனிச்சாமி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த திருநாவலூர் போலீசார் பழனிச்சாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

    • சஞ்சனாதேவி (3) என்ற மகளும் கிஷோர் (2) என்கிற மகனும் உள்ளனர்.
    • இந்த வழக்கை வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பி வைத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அருகே உள்ள ஜி.அரியூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை மனைவி தீபா (வயது 22). இவர்களுக்கு திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆகின்றது. சஞ்சனாதேவி (3) என்ற மகளும் கிஷோர் (2) என்கிற மகனும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு தீபா தூக்கு போட்டு கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார். அப்போது தீபாவின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தூக்கில் தொங்கிய தீபாவை காப்பாற்றி 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்து பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இருந்தும் சிகிச்சை பலனின்றி தீபா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த திருக்கோவிலூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருவதுடன் தீபாவுக்கு திருமணம் ஆகி 5 வருடங்கள் மட்டுமே ஆவதால் தற்கொலைக்கு காரணம் வரதட்சணை கொடுமையாக இருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார் இந்த வழக்கை வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியரின் விசாரணை நடைபெற்று வருகிறது.

    • வெளியே சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
    • போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை போலீஸ் சரகம் மேலந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் தினேஷ் (வயது 18). இவர் திருவண்ணாமலையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் சம்பவத்தன்று அவருடைய மோட்டார் சைக்கிளில் மாலை 6.30 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    இதனால் சந்தேகமடைந்த அவர்கள் குடும்பத்தினர் தினேஷை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே ஊரில் அய்யனார் கோவில் அருகில் சாலை ஓரத்தில் மோட்டார் சைக்கிள் உடன் அடிபட்டு கீழே மயங்கி நிலையில் கிடந்தது கண்டு உடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி கல்லூரி மாணவர் தினேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து மணலூர்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று இவர் மோதியது.
    • அரசு மருத்து வக்கல்லூரி மருத்து வமனையில் அனும தித்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அருகே உள்ள கோட்டமருதூர் கிராமம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் பத்தியநாதன் மனைவி சம்மனசுமேரி (வயது 57). இவர் தனது சொந்த ஊரிலிருந்து வேளாங்கண்ணிக்கு நடை பயணமாக வீட்டில் இருந்து புறப்பட்டு சென்று இருக்கிறார். திருக்கோவிலூர் செவலை ரோட்டின் வழியாக வீரட்டகரம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டி ருந்தபோது எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று இவர் மோதியது.

    இதில் சம்மன சுமேரிக்கு பின் தலையில் அடிபட்டது. உடன் அவரை திருக்கோ விலூர் அரசு மருத்துவ மனையில் சேர்த்து பின்னர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பா க்கத்தில் உள்ள அரசு மருத்து வக்கல்லூரி மருத்து வமனையில் அனும தித்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த திருக்கோவிலூர் போலீசார் விரைந்து சென்று விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தியாகதுருகம் அருகே புதுஉச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 43). ஆசாரி வேலை பார்த்து வருகிறார்.
    • சம்பவத்தன்று கடைக்குச் சென்ற பேபி ஷாலினி மீண்டும் வீடு திரும்பவில்லை.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே புதுஉச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 43). ஆசாரி வேலை பார்த்து வருகிறார். இவர் கூத்தக்குடி மெயின் ரோடு பஸ் நிறுத்தம் அருகே மளிகை கடை வைத்துள்ளார். இந்த மளிகை கடையை இவரது மனைவி பேபி ஷாலினி (41) நடத்தி வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று கடைக்குச் சென்ற பேபி ஷாலினி மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரை அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கணேசன் கொடுத்த புகாரின் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து பேபி ஷாலினியை தேடி வருகின்றனர்.

    • இந்த குரங்குகள் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகளை துரத்துவதும், கடை தெருவில் தின்பண்டங்கள் வாங்கிச் செல்லும் சிறார்களை விரட்டு வதுமாக அட்டகாசம் செய்து வந்தது.
    • பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் குரங்கு பிடிக்கும் தொழிலாளர்கள் உதவியுடன் ஏராளமான குரங்குகள் பிடிக்கப்பட்டு அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டன,

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூரை அடுத்த அரகண்டநல்லூர் பேரூராட்சி பகுதிகளில் குரங்குகளின் அட்டகாசம் அளவுக்கு அதிகமாக இருந்தது. இந்த குரங்குகள் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகளை துரத்துவதும், கடை தெருவில் தின்பண்டங்கள் வாங்கிச் செல்லும் சிறார்களை விரட்டு வதுமாக அட்டகாசம் செய்து வந்தது.

    அரகண்டநல்லூர் பேரூராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராயல் எஸ்.அன்பு உத்தரவின் பேரில் செயல் அலுவலர் அருள்குமார் முன்னிலையில் பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் குரங்கு பிடிக்கும் தொழிலாளர்கள் உதவியுடன் ஏராளமான குரங்குகள் பிடிக்கப்பட்டு அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டன. அரகண்டநல்லூர் பேரூ ராட்சி நிர்வாகத்தின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பொதுமக்களும் வியாபாரிகளும் குறிப்பாக பெண்களும் பள்ளி செல்லும் குழந்தைகளும் பாராட்டு தெரிவித்தனர்.

    • தியாகதுருகம் அருகே வாழவந்தான்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணதாசன் மனைவி சீத்தாலட்சுமி (வயது 45).
    • இவர் சம்பவத்தன்று தியாகதுருகம் பஸ் நிலையத்தில் இருந்து திருப்பதி செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே வாழவந்தான்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணதாசன் மனைவி சீத்தாலட்சுமி (வயது 45). இவர் சம்பவத்தன்று தியாகதுருகம் பஸ் நிலையத்தில் இருந்து திருப்பதி செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரை அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து கண்ணதாசன் மகன் ஆனந்தராஜ் (23) கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    • யாகதுருகம் அருகே புதுஉச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 43). ஆசாரி வேலை பார்த்து வருகிறார்
    • இந்நிலையில் சம்பவத்தன்று கடைக்குச் சென்ற பேபி ஷாலினி மீண்டும் வீடு திரும்பவில்லை.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே புதுஉச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 43). ஆசாரி வேலை பார்த்து வருகிறார். இவர் கூத்தக்குடி மெயின் ரோடு பஸ் நிறுத்தம் அருகே மளிகை கடை வைத்துள்ளார். இந்த மளிகை கடையை இவரது மனைவி பேபி ஷாலினி (41) நடத்தி வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று கடைக்குச் சென்ற பேபி ஷாலினி மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரை அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கணேசன் கொடுத்த புகாரின் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து பேபி ஷாலினியை தேடி வருகின்றனர்.

    • உளுந்தூர்பேட்டை அருகே மேட்டத்தூரில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரம் மினி லாரி நின்று கொண்டிருந்தது.
    • இன்று அதிகாலை இந்த நெடுஞ்சாலையில் வந்த கார் இந்த மினி லாரி மீது மோதியது.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை அருகே மேட்டத்தூரில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரம் மினி லாரி நின்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை இந்த நெடுஞ்சாலையில் வந்த கார் இந்த மினி லாரி மீது மோதியது. இதில் காரில் வந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 2 பேர் ஆபத்தான நிலையில் துடிதுடித்துக் கொண்டிருந்தனர்.  இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருநாவலூர் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தினர். இதில் இறந்து போனவர்களில் ஒருவர் கார் டிரைவர் என்பதும், மற்றொருவர் கோவையைச் சேர்ந்த விவேகானந்தன் என்பதும் தெரியவந்தது. மேலும், பலத்த காயம் அடைந்தவர்கள் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த சரவணன், மகாலிங்கம் என்பதும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.  இதனைத் தொடர்ந்து திருநாவலூர் போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காகவும், உயிரிழந்த 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதனைத் தொடர்ந்து விபத்தில் சிக்கிய 2 வாகனங்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்திய போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். அதிகாலையில் சாலையோரம் நின்று கொண்டிருந்த மினி லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் உளுந்தூர்பேட்டையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×