என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • ராமலிங்கம் (வயது 62). இவரும் சந்திரசேகர் என்பவரும் மோட்டார் சைக்கிளில் சொந்த வேலையின் காரணமாக சென்றனர்,
    • பணிகளை முடித்துதிரும்பும்போது,அவருக்கு பின்னால் வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது,..

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நயினார் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 62). இவரும் அதே பகுதியை சேர்ந்த சந்திரசேகர் என்பவரும் மோட்டார் சைக்கிளில் நைனார்பாளையத்திலிருந்து கிருஷ்ணாபுரம் கிராமத்திற்கு சொந்த வேலையின் காரணமாக சென்றனர். அங்கு பணிகளை முடித்துக் கொண்டு மீண்டும் நயினார் பாளையம் வரும் போது கிருஷ்ணாபுரம் கிராம எல்லை சேலம் - விருத்தாசலம் நெடுஞ்சாலையில் உள்ள ஓட்டல் எதிரே சென்றபோது அதே திசையில் அவருக்கு பின்னால் வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் படுகாயம் அடைந்த ராமலிங்கம், சந்திரசேகர் ஆகியோரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சின்னசேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனனின்றி ராமலிங்கம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தியாகதுருகத்தில் இருந்து சின்னமாம்பட்டு செல்லும் வழியில் சடையன்குளம் அய்யனார் கோவில் அருகே மின் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
    • மின்மாற்றி பொருத்தப்பட்டிருந்த 2 மின்கம்பங்களும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிமெண்ட் காரைகள் பெயர்ந்து முற்றிலும் சேதமடைந்தன.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகத்தில் இருந்து சின்னமாம்பட்டு செல்லும் வழியில் சடையன்குளம் அய்யனார் கோவில் அருகே மின் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்மாற்றி பொருத்தப்பட்டிருந்த 2 மின்கம்பங்களும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிமெண்ட் காரைகள் பெயர்ந்து முற்றிலும் சேதமடைந்தன. இதனைத் தொடர்ந்து மின்சார வாரிய அதிகாரிகள் கம்பங்களுக்கு அருகே சிமென்ட் மேடை அமைத்து அதில் தற்காலிகமாக மின்மாற்றியை பொருத்தினர். 

    இந்நிலையில் தற்போது மின் கம்பங்களில் கம்பிகள் மட்டுமே தெரியும் அளவிற்கு முற்றிலும் சேதம் அடைந்து எப்போது வேண்டுமானாலும் விழும் என்கின்ற நிலையில் உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மின்சார வாரிய அதிகாரிடம் பலமுறை தகவல் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து மின்கம்பங்கள் உடைந்து விழுந்து விபத்து ஏற்படுவதற்கு முன் உடனடியாக மின்கம்பங்களை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மணிமேகலை என்பவருக்கு சொந்தமான கன்று குட்டி முருகேசன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் தவறி விழுந்தது
    • சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கன்று குட்டியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் காந்தி நகர் பகுதியை சேர்ந்த மணிமேகலை என்பவருக்கு சொந்தமான கன்று குட்டி முருகேசன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் தவறி விழுந்தது. பின்னர் இது பற்றி சின்னசேலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கன்று குட்டியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    அப்பொழுது அஜித் என்ற தீயணைப்பு வீரர் கிணற்றில் கயிறு கட்டி இறக்கினர்.அப்பொழுது 2 பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பிறகு 2 பாம்பை உயிருடன் பிடித்து சாக்கு பையில் போட்டு பாதுகாப்பாக கட்டினர்.பிறகு கிணற்றுக்குள் இறங்கி கன்று குட்டியை உயிருடன் மீட்டனர். இந்த மீட்பு போராட்டத்தில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக போராடி கன்றுகுட்டியை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்களை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர். சாக்கு பையில் இருந்த பாம்பை வனப்பகுதியில் விட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • குமார் (வயது 48). இவருக்கும் மணிவேல் என்பவருக்கும் நிலம் சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது.
    • இந்நிலையில் சம்பவத்தன்று 2 தரப்பி னரும் ஒருவரை ஒருவர் திட்டி தாக்கிக் கொண்டனர்

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே வீரசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (வயது 48). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சன்னியாசி மகன் மணிவேல் என்பவருக்கும் நிலம் சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று 2 தரப்பி னரும் ஒருவரை ஒருவர் திட்டி தாக்கிக் கொண்டனர். இதில் காயமடைந்த குமார் மற்றும் மணிவேல் ஆகியோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து குமார் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வீரசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்த சன்னியாசி மகன்கள் செல்வம், மணிவேல், ஏழுமலை, முத்துப்பாண்டி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    இதே போல் மணிவேல் கொடுத்த புகாரின் பேரில் விஜி, குமார், பூங்கொடி, பவுன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். 8 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் ஏழுமலை என்பவரை கைது செய்தனர்.

    • திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூர் ஒட்டம்பட்டு ஏரி பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக தகவல் கிடைத்தது.
    • சுந்தரமூர்த்தி (வயது 30) என்பவர் சாராயம் காய்ச்சுவதை தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்..

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூர் போலீஸ் சரகம் ஒட்டம்பட்டு ஏரி பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் விரைந்து சென்ற அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு அதே கிராமத்தைச் சேர்ந்த தில்லை கோவிந்தன் மகன் சுந்தரமூர்த்தி (வயது 30) என்பவர் சாராயம் காய்ச்சுவதை தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அத்துடன் விற்பனைக்கு வைத்திருந்த 20 லிட்டர் சாராயமும் 300 லிட்டர் சாராய ஊரலையும் கைப்பற்றி அழித்தனர். கைது செய்யப்பட்ட சுந்தரமூர்த்தி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருக்கோவிலூர் அருகே உள்ள தேவியகரம் கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி.
    • இவர் திருக்கோவிலூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அருகே உள்ள தேவியகரம் கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் திருக்கோவிலூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று முன்தினம் 3-ந்தேதி பிளஸ் 2 கடைசி தேர்வு எழுதச் சென்ற மாணவி, தேர்வு எழுதிவிட்ட பள்ளியிலிருந்து வெளியே வந்துள்ளார்.

    ஆனால் வீட்டிற்கு வரவில்லை. இவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மாணவியின் தாய் திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை வழக்கு பதிவு செய்து காணாமல் போன பிளஸ் - 2 மாணவியை தேடி வருகின்றனர். ஒருவேளை மாணவியை யாராவது கடத்திச் சென்று இருக்கலாமா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருக்கோவிலூரில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

    • திருக்கோவிலூர் சந்தப்பேட்டை ஜீவா நகர் பகுதியில் மது பாட்டில்கள் விற்பதாக தகவல் வந்தது.
    • மது பாட்டில்கள் விற்றுக் கொண்டிருந்த ரத்தினம் (வயது 43) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 26 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர் மற்றும் சேகர் (53) என்பவர் மது பாட்டில்கள் விற்பனை செய்த போது கைது செய்யப்பட்டார்.

     கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் சந்தப்பேட்டை ஜீவா நகர் பகுதியில் மது பாட்டில்கள் விற்பதாக கிடைத்த தகவலின் பெயரில் விரைந்து சென்ற சப் -இன்ஸ்பெக்டர் சதீஷ் நடத்திய அதிரடி வேட்டையில் அங்கு மது பாட்டில்கள் விற்றுக் கொண்டிருந்த ரத்தினம் (வயது 43) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 26 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அதேபோல் பல்லவாடி கிராமத்தில் சப்- இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் போலீசார் நடத்திய சோதனையில் சேகர் (53) என்பவர் மது பாட்டில்கள் விற்பனை செய்த போது கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 8 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 2 பேர் மீதும் திருக்கோவிலூர் போலீசார் தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சங்கராபுரம் சப்- இன்ஸ்பெக்டர் சூரியா தலைமையிலான போலீ சார் இளையனார்குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • கணபதி(26) மற்றும் ஏழுமலை மனைவி தேவகி (44) ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து 30 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சப்- இன்ஸ்பெக்டர் சூரியா தலைமையிலான போலீ சார் இளையனார்குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த நாட்டான் மகன் கணபதி(26) மற்றும் ஏழுமலை மனைவி தேவகி (44) ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து 30 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • கார்த்திக்( வயது 30) விவசாயி. இவரது மனைவி வேண்டாமலை(24). இவர்களுக்கு 2 ஆண் குழந்தை உள்ளது.
    • ஆண் குழந்தைக்கு முதல் பிறந்தநாள் வருவதால் அன்று பிரியாணி சமைத்து அனைவருக்கும் கொடுக்கும்படி கார்த்திக்கிடம் கேட்டுள்ளார்.

    கள்ளக்கறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா அத்திப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக்( வயது 30) விவசாயி. இவரது மனைவி வேண்டாமலை(24). இவர்களுக்கு 2 ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று வேண்டாமலை அவரது 2 -வது ஆண் குழந்தைக்கு முதல் பிறந்தநாள் வருவதால் அன்று பிரியாணி சமைத்து அனைவருக்கும் கொடுக்கும்படி கார்த்திக்கிடம் கேட்டுள்ளார். அதற்கு கார்த்திக் குடும்ப சூழ்நிலை சரியில்லை என்றும் இந்த வருடம் செய்ய வேண்டாம் என்றும் கூறி மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த கார்த்திக்கின் மனைவி வேண்டாமலை வீட்டில் விவசாய நிலத்திற்கு வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்ததாக கூறப்படுகிறது. மயக்க நிலையில் கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்துள்ள அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து வேண்டாமலையின் தந்தை லோகநாதன் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கொடுத்த புகாரின் பேரில் திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கூத்தக்குடி, ஒகையூர், பீளமேடு, வடதொரசலூர், பிரிதிவிமங்கலம், கொங்கராயபாளையம், திம்மலை உள்ளிட்ட 12 ஊராட்சிகளுக்கு 15-வது மானிய நிதி குழு திட்டத்தின் கீழ் தூய்மை பணிக்காக டிராக்டர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கூத்தக்குடி, ஒகையூர், பீளமேடு, வடதொரசலூர், பிரிதிவிமங்கலம், கொங்கராயபாளையம், திம்மலை உள்ளிட்ட 12 ஊராட்சிகளுக்கு 15-வது மானிய நிதி குழு திட்டத்தின் கீழ் தூய்மை பணிக்காக டிராக்டர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் தாமோதரன் தலைமை தாங்கினார்,

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கூத்தக்குடி, ஒகையூர், பீளமேடு, வடதொரசலூர், பிரிதிவிமங்கலம், கொங்கராயபாளையம், திம்மலை உள்ளிட்ட 12 ஊராட்சிகளுக்கு 15-வது மானிய நிதி குழு திட்டத்தின் கீழ் தூய்மை பணிக்காக டிராக்டர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் தாமோதரன் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு துணை தலைவர் நெடுஞ்செழியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில் முருகன், சீனிவாசன், தி.முக. தெற்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சி குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள் கலந்து கொண்டு தலா ரூ.6 லட்சத்து 15 ஆயிரத்து 162 மதிப்பில் மொத்தம் ரூ. 73 லட்சத்து 81 ஆயிரத்து 944 மதிப்பீட்டிலான 12 டிராக்டர்களின் சாவியை ஊராட்சி மன்ற தலைவர்களிடம் வழங்கினார். அப்போது தலைமை செயற்குழு உறுப்பினர் எத்திராஜ், மாவட்ட பிரதிநிதி மடம் பெருமாள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தயாபரன், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மணி என்ற சுப்ரமணியன் (வயது 42) இவர் கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பகுதியில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
    • சம்பவத்தன்று ரியல் எஸ்டேட் அலுவலகத்திற்கு வந்த மர்ம நபர்கள் அலுவலக கண்ணாடி மற்றும் மின் சாதனங்களை உடைத்து சேதப்படுத்தினர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே பொரசக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி என்ற சுப்ரமணியன் (வயது 42) இவர் கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பகுதியில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று ரியல் எஸ்டேட் அலுவலகத்திற்கு வந்த மர்ம நபர்கள் அலுவலக கண்ணாடி மற்றும் மின் சாதனங்களை உடைத்து சேதப்படுத்தினர். இதனை கண்காணிப்பு கேமரா மூலம் பார்த்த சுப்ரமணியன் சம்பந்தப்பட்ட நபர்களான கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் அய்யப்பன் (38), ராமச்சந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் (40) ஆகியோரை நேரில் சென்று ஏன் எனது அலுவலக கண்ணாடியை உடைத்தீர்கள் என கேட்டுள்ளார். அப்பொழுது அய்யப்பன் மற்றும் கிருஷ்ணகுமார் ஆகியோர் அவரை திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து சுப்ரமணியன் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் வழக்கு பதிவு செய்து அய்யப்பனை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கிருஷ்ணகுமாரை தேடி வருகின்றனர்.

    • சின்னசேலம் பழைய பஸ் நிலையம் அருகே வசிப்பவர் த ங்கராசு( வயது 80 )ஓய்வு பெற்ற ஆசிரியர்.
    • வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் உள்ளே இருந்த பீரோ உடைந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பழைய பஸ் நிலையம் அருகே வசிப்பவர் த ங்கராசு( வயது 80 )ஓய்வு பெற்ற ஆசிரியர்.

    இவருக்கு குமார், அரவிந்தன் என்ற இரு மகன்கள் உள்ளனர். இளைய மகன் அரவிந்தன் பழைய பஸ் நிலையத்தில் உள்ள சக்தி அரிசி ஆலைக்கு செல்லும் வழியில் வசித்து வருகிறார். எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார் பெங்களூரில் வசிக்கும் மூத்த மகளை பார்ப்பதற்கு நேற்று மாலை அரவிந்தன் மற்றும் அவரது மனைவி ரமணி மற்றும் இளைய மகள் ஆகியோர் குடும்பத்துடன் பெங்களூ ருக்கு சென்றுள்ளனர்.  இந்நிலையில் இன்று காலை அரவிந்தன் வசிக்கும் வீட்டிற்கு சென்று தங்கராசு பார்த்துள்ளார் அப்பொழுது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் உள்ளே இருந்த பீரோ உடைந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து சின்னசேலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் 65 ஆயிரம் பணம் திருட்டு போய் உள்ளது என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் வெளியூருக்கு சென்ற வீட்டின் உரிமையாளர்கள் வந்த பிறகே முழு விவரம் தெரியும் என போலீசார் தெரிவித்துள்ளனர் சின்னசேலம் பகுதியில் தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டிருப்பதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.மாவட்டம் சின்னசேலம் பழைய பஸ் நிலையம் அருகே வசிப்பவர் த ங்கராசு( வயது 80 )ஓய்வு பெற்ற ஆசிரியர்.  இவருக்கு குமார், அரவிந்தன் என்ற இரு மகன்கள் உள்ளனர். இளைய மகன் அரவிந்தன் பழைய பஸ் நிலையத்தில் உள்ள சக்தி அரிசி ஆலைக்கு செல்லும் வழியில் வசித்து வருகிறார். எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார் பெங்களூரில் வசிக்கும் மூத்த மகளை பார்ப்பதற்கு நேற்று மாலை அரவிந்தன் மற்றும் அவரது மனைவி ரமணி மற்றும் இளைய மகள் ஆகியோர் குடும்பத்துடன் பெங்களூ ருக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று காலை அரவிந்தன் வசிக்கும் வீட்டிற்கு சென்று தங்கராசு பார்த்துள்ளார் அப்பொழுது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் உள்ளே இருந்த பீரோ உடைந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்    இது குறித்து சின்னசேலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் 65 ஆயிரம் பணம் திருட்டு போய் உள்ளது என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் வெளியூருக்கு சென்ற வீட்டின் உரிமையாளர்கள் வந்த பிறகே முழு விவரம் தெரியும் என போலீசார் தெரிவித்துள்ளனர் சின்னசேலம் பகுதியில் தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டிருப்பதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.உரிமையாளர்உரிமையாளர்

    ×