search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் நவீன பொது வசதி மையம்
    X

    கலை அழகுடன் கூடிய மரச்சிற்பத்தை படத்தில் காணலாம்.

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் நவீன பொது வசதி மையம்

    • ஆந்திரா, கர்நாடகா, டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் இணை யதளம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
    • கடந்த 2021-ம் ஆண்டு தமிழக அரசு புவிசார் குறியீடு வழங்கியது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்கு றிச்சி, தென்கீரனூர், ஜே.ஜே நகர், சின்னசேலம், நைனார்பாளையம், தகடி, கூத்தனூர், திருக்கோவிலூர் ஆகிய பகுதிகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 50 ஆண்டு காலமாக மரச் சிற்பங்களை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு மரத்தாலான சாமி சிற்பங்கள், பூஜை அறைக்கு தேவையான சிற்பங்கள், கோவில் மற்றும் பூஜை அறை கதவு, கோவில் தேர் உள்ளிட்ட கலை அழகு மிகுந்த மரச் சிற்பங்கள் செய்யப்படுகிறது. இந்த மரச்சிற்பங்களை தமிழகத்தைச் சேர்ந்த பலரும் வாங்கிச் செல்கின்றனர். அது மட்டும் இன்றி ஆந்திரா, கர்நாடகா, டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் இணை யதளம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சில வெளிநாட்டவர்களும் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இந்த மரச்சிற்ப தொழிலுக்கு கடந்த 2021-ம் ஆண்டு தமிழக அரசு புவிசார் குறியீடு வழங்கியது.

    இந்நிலையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் குறுங்குழும மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மர சிற்பம் செதுக்கும் கலைஞர்களுக்கு அவர்களின் செயல்திறனை அதிகரிக்கும் வகையில் ரூ.50 லட்சம் திட்ட மதிப்பீட்டில் அரசு மானியத்துடன் நவீன தொழில்நுட்ப எந்திரங்களைக் கொண்ட ஒரு பொது வசதி மையம் அமைக்கப்படும் எனக் கூறியுள்ளார். இதனால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மரச் சிற்ப தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து கள்ளக்குறிச்சி மரச் சிற்பம் தயாரிப்பு கைவினைத் தொழிலாளர்கள் தொழில் கூட்டுறவு சங்க தலைவர் சக்திவேல் கூறியதாவது,

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மரச் சிற்பம் செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இங்கு தயாரிக்கப்படும் மரச் சிற்பங்கள் மிகவும் நேர்த்தியாக, கலைவண்ணம் மிகுந்து காணப்படும். இதனால் மரச்சிற்பத்திற்கு தமிழக அரசின் புவிசார் குறியீடை பெற்றுள்ளோம். இங்கு தயாரிக்கப்படும் மரச்சிற்பங்கள் ரூ. 3 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில் தமிழக அரசு மர சிற்ப தொழிலாளிகள் பயனடையும் வகையில் ரூ. 50 லட்சம் மதிப்பில் தொழில்நுட்ப எந்திரங்களை கொண்ட வசதி மையம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளது. இதனால் தொழிலாளர்கள் பயனடைவார்கள் அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும். எனவே இந்த அறிவிப்பு மரச்சிற்ப தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என கூறினார்.

    Next Story
    ×