உளுந்தூர்பேட்டை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞர் பலி

மணிராஜ் (வயது 19). இவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மணிராஜ் பரிதாபமாக இறந்தார்
உளுந்தூர்பேட்டை அருகே  அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞர் பலி
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை விருத்தாச்சலம் ரோடு உ.கீரனூரில் வசித்து வருபவர் மணிராஜ் (வயது 19). இவர் செங்குறிச்சி சுங்கச்சாவடி பால் பண்ணை அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த மணிராஜ், உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மணிராஜ் பரிதாபமாக இறந்தார். இந்த தகவல் அறிந்து உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் வழக்கு பதிவு செய்து அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com