என் மலர்
கள்ளக்குறிச்சி
- யுவராஜ் (வயது 29). கள்ளக்குறிச்சி மாவட்ட ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார்.
- இவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக அவரது மனைவி கல்கியிடம் விவாகரத்து கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மூரார்பாளையம் கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன். இவரது மகன் யுவராஜ் (வயது 29). கள்ளக்குறிச்சி மாவட்ட ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். இவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக அவரது மனைவி கல்கியிடம் விவாகரத்து கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்தார். சம்பவத்தன்று இது தொடர்பாக கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அதை தட்டிக் கேட்ட கல்கியின் அண்ணன் யுவராஜ் சர்மா, அதே பகுதியை சேர்ந்த முருகன் ஆகிய 2 பேரையும் யுவராஜ் அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் 2 ேபரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இது குறித்த புகாரின் பேரில் யுவராஜ் மீது சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் ஆயுதப்படை போலீசார் யுவராஜை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
- விஜயராமின் மனைவி சண்டை போட்டுக்கொண்டு அம்மா வீட்டுக்கு சென்று விட்டார்
- வாக்குவாதத்தில் வீட்டில் இருந்த அருவா மனையால் தந்தை பாலுச்சாமியை விஜயராம் வெட்டினார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலுசாமி (வயது 60) விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது மனைவி வெள்ளையம்மாள். இவர்களது மகன் விஜயராம் (36). இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. விஜயராமின் மனைவி சண்டை போட்டுக்கொண்டு அம்மா வீட்டுக்கு சென்று விட்டார். மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க அவருடைய அப்பா பாலுச்சாமி, அம்மா வெள்ளையம்மாளிடம் வலியுறுத்தினார்.
இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் வீட்டில் இருந்த அருவா மனையால் தந்தை பாலுச்சாமியை விஜயராம் வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே பாலுசாமி இறந்துவிட்டார். மேலும், இவரது தாயார் வெள்ளையம்மாள் தலையில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது இதில் தந்தையை கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும், தாயாரை தலையில் அடித்து காயம் ஏற்படுத்தியதற்காக 3 ஆண்டு சிறையும் ரூ.1000 அபராதமும் விதித்து நீீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து விஜய்ராமனை உளுந்தூர்பேட்டை போலீசார் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பைரவி (வயது 17) பிளஸ் -2வகுப்பு தேர்வு எழுதியுள்ள நிலையில்தற்போது மாணவி நீட் பயிற்சி பெற்று வருகிறார்
- வீட்டிலிருந்து வந்த மாணவி பைரவி திடீரென மாயமாகியுள்ளார்
கள்ளக்குறிச்சி:
சின்னசேலம் அருகே உள்ள எரவார் கிராமத்தை சேர்ந்த ரவி மகள் பைரவி (வயது 17) இவர் அருகிலுள்ள பெரிய சிறுவத்தூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் -2வகுப்பு தேர்வு எழுதியுள்ள நிலையில்தற்போது மாணவி நீட் பயிற்சி பெற்று வருகிறார் எனகூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டிலிருந்து வந்த மாணவி பைரவி திடீரென மாயமாகியுள்ளார். இது சம்பந்தமாக அவரது பெற்றோர் மாணவியை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காத பட்சத்தில் இது சம்பந்தமாக மாணவியின் தந்தை ரவி சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்அடிப்படையில் சின்ன சேலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அரசு (வயது33). இவருக்கும், அருள்(50) இடப்பிரச்சினை சம்மந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
- விவேக்(26) ஆகியோர் அரசுவை ஆபாசமாக திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் மணலூர் பகுதியை சேர்ந்தவர் அரசு (வயது33). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அருள்(50) என்பவருக்கும் இடப்பிரச்சினை சம்மந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று அருள், அவரது மகன் ஸ்டாலின் மற்றும் ராமசாமி மகன் விவேக்(26) ஆகியோர் அரசுவை ஆபாசமாக திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்குப்பதிவு செய்து அருள், ஸ்டாலின் ஆகிய இருவரையும் கைது செய்தார். மேலும் தலைமறைவாக உள்ள விவேக்கை தேடி வருகிறார்.
- கல்வராயன் மலை, கரியாலூர் போலீசார் கள்ளச்சாராய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
- அங்கு 200 லிட்டர் பிடிக்கக்கூடிய 8 பிளாஸ்டிக் பேரல்களில் 1600 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் இருந்ததை போலீசார் கண்டனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள தாழ்மொழிபட்டு கிராமத்தின் அருகில் கல்வராயன் மலை, கரியாலூர் போலீசார் கள்ளச்சாராய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு 200 லிட்டர் பிடிக்கக்கூடிய 8 பிளாஸ்டிக் பேரல்களில் 1600 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் இருந்ததை போலீசார் கண்டனர். இதனை போலீசார் சம்பவ இடத்திலேயே கொட்டி அழித்தனர்.
அதேபோல் கல்வராயன் மலை சிறுகலூர் கிராம தெற்கு ஓடையில் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் தாரனேஸ்வரி தலைமையில் தனி படை போலீசார் கல்வராயன்மலை சிறுகலூர் கிராம தெற்கு ஓடை அருகில் கள்ள சாராயம் சம்பந்தமான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போது, அங்கு 2000 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் மற்றும் லாரி டியூப்பில் 260 லிட்டர் கள்ளச்சாராயம் இருந்ததை கண்டுபிடித்தனர். இதனையும் சம்பவ இடத்திலேயே போலீசார் கொட்டி அழித்தனர். இதில் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவாகியுள்ள சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- போலீசார் மூலக்காடு பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ஒருவர் தப்பி ஓடி விட்டார். மற்றொருவர் பிடிபட்டார்
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராயப்பன் மற்றும் போலீசார் மூலக்காடு பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ஒருவர் தப்பி ஓடி விட்டார். மற்றொருவர் பிடிபட்டார். பின்னர் அவர் வந்த மோட்டார் சைக்கிளை சோதனை செய்த போது 2 லாரி டியூப்களில் சாராயம் இருந்ததை கண்டுபிடித்தனர்.
விசாரனையில் தும்பராம்பட்டு பகுதியை சேர்ந்த தம்பிதுரை (வயது 22) என்பதும், தப்பி ஓடியவர் செல்வராஜ் என்பதும், 2 பேரும் விற்பனைக்காக சாராயத்தை கடத்தி வந்தபோது போலீசாரிடம் சிக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து தம்பிதுரையை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளையும், 110 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய செல்வராஜை வலைவீசி தேடி வருகின்றனர்.
- போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- பிரபு (வயது 31), ரங்கப்பனூரை சேர்ந்த கோவிந்தன் (50) ஆகிய 2 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 85 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்த சின்னபுளியங்கோட்டை பகுதியை சேர்ந்த பிரபு (வயது 31), ரங்கப்பனூரை சேர்ந்த கோவிந்தன் (50) ஆகிய 2 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 85 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
- கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் 5 ஊராட்சிகளுக்கு டிராக்டர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- மன்ற குழு உறுப்பினருமான ஆஜெ. மணிகண்ணன் தலைமை தாங்கி ஊராட்சி மன்ற தலைவர்களிடம் டிராக்டர்களை வழங்கினார்.
கள்ளக்கறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் எலவனாசூர்கோட்டை, இறையூர், குன்னத்தூர், கிளியூர், காட்டுயடியார் உள்ளிட்ட 5 ஊராட்சிகளுக்கு டிராக்டர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகங்களில் ஆட்சி மன்ற குழு உறுப்பினருமான ஆஜெ. மணிகண்ணன் தலைமை தாங்கி ஊராட்சி மன்ற தலைவர்களிடம் டிராக்டர்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவரும் மேற்கு ஒன்றிய செயலாளருமான ப. ராஜவேல், உளுந்தூர்பேட்டை நகராட்சி துணைத்தலைவரும் கிழக்கு ஒன்றிய செயலாளருமான யூ.எஸ். வைத்தியநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயராமன், ராஜேந்திரன், மேலாளர் சாந்தி, மாவட்ட கவுன்சிலர் பிரியா பாண்டியன், வழக்கறிஞர் சிவசங்கரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் நந்தகுமார், சிவா, பாலசிங்கம், அனுசியா ஆரோக்கியராஜ், துணைத்தலைவர் டேவிட் உள்பட பலர் கலந்து கொண்டனர்
- திருக்கோவிலூர் நகரத்தில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நகர செயலாளர் ஆர்.கோபி தலைமையில் நடைபெற்றது.
- சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி:
திருக்கோவிலூர் நகரத்தில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நகர செயலாளர் ஆர்.கோபி தலைமையில் நடைபெற்றது. நகர மன்ற தலைவர் டி.என்.முருகன், ஒன்றிய செயலாளர்கள் தங்கம், ரவிச்சந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் டி.செல்வராஜ், நகர இளைஞர் அணி அமைப்பாளர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர அவைத்தலைவர் டி.குணா வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தார். காமில் கலந்து கொண்ட விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் புகழேந்தி எம்.எல்.ஏ., உறுப்பினர் சேர்க்கை மேலிட பார்வையாளர் முன்னாள் மத்திய மந்திரி வேங்கடபதி, மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் டாக்டர். எ.வ.வே. கம்பன் ஆகியோர் கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கை எவ்வாறு நடைபெற வேண்டும் என்பதை விளக்கமாக கூறினார்கள்.
நிகழ்ச்சியில் நகர வர்த்தக சங்கத் தலைவர் கே.ஏ.ராஜா, நகராட்சி கவுன்சிலர்கள் ஐ.ஆர்.கோவிந்தராஜன், எல்.தங்கராஜ், அண்ணாதுரை, ஜல்லிபிரகாஷ், மகாலிங்கம், துரைராஜன், பிரமிளாராகவன், சண்முக வள்ளி ஜெகன், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர்கள் வெங்கட், லதா சரவணன், தொ.மு.ச. நிர்வாகி டி.கே.சரவணன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் வி.சந்திரசேகரன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், நகர நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதியின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் நிர்வாகி என்.கே.வி.ஆதிநாராயணமூர்த்தி நன்றி கூறினார்.
- விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சிறப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
- இந்த பேரணி யில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகத்தில் உள்ள சமுதாய கூடத்தில் ஒன்றிய, நகர விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சிறப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் கலையமுதன் தலைமை தாங்கினார். வடக்கு ஒன்றிய செயலாளர் சேகர், ஒன்றிய பொருளாளர் சின்னதுரை, நகர செயலாளர் சீனு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்டமன்றத் தொகுதி செயலாளர் மதியழகன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழ்மாறன் கலந்து கொண்டு வருகிற ஏப்ரல் 14- ந் தேதி புரட்சியாளர் அம்பேத்கரின் 132-வது பிறந்தநாள் அன்று கள்ளக்குறிச்சி மாவட்ட தலைநகரில் மத்திய அரசை கண்டித்து ஜனநாயகம் காப்போம் என்பதை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் அணிவகுப்பு பேரணி நடைபெற உள்ளது. இதில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என ஆலோசனை வழங்கினார். அப்போது மாநில இளைஞரணி செயலாளர் சங்கத்தமிழன், மாநில தொண்டரணி செயலாளர் கூத்தக்குடி பாலு, மாநில இளைஞர் அணி துணை செயலாளர் பொன்னிவளவன், மாவட்டத் துணைச் செயலாளர் ராமமூர்த்தி, மாவட்ட செய்தி தொடர்பாளர் அனிச்சமலரவன், இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாநில துணை செயலாளர் மக்கா கலீல் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, முகம் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் கிளை செயலாளர் ஆதிகர்ணன் நன்றி கூறினார்.
- தியாகதுருகத்தில் இருந்து உதயாமாம்பட்டு செல்லும் தார்ச்சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது,
- பொதுமக்கள் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமாரிடம் தகவல் தெரிவித்தனர்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகத்தில் இருந்து உதயாமாம்பட்டு செல்லும் தார்ச்சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளதாக பொதுமக்கள் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமாரிடம் தகவல் தெரிவித்தனர். இதையொட்டி அவர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்தப் பகுதியில் வசிக்கும் பொது மக்கள் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலை போடப்பட்டது. தற்பொழுது குண்டும், குழியுமாக உள்ளதால் மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களில் வந்து செல்வது மிகவும் சிரமமாக உள்ளது. சாலை மிகவும் மோசமாக உள்ளதால் அவசரத்திற்கு ஆட்டோக்கள் கூட சவாரிக்கு வர மறுப்பதாகவும் ஆதங்கத்துடன் எம்.எல்.ஏ விடம் கூறினர். இதனை தொடர்ந்து செந்தில்குமார் எம்.எல்.ஏ. தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலரை தொலைபேசி தொடர்பு கொண்டு பேசினார். அப்போது ஏன் இவ்வளவு நாட்களாக புதிய தார்ச்சாலை அமைக்கவில்லை? புதிய தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என கேட்டார். அதற்கு முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் 3.5 கி. மீ தூரத்திற்கு ரூ. 2 கோடியே 24 லட்சம் நிதி கேட்டு முன்மொழிவு அனுப்பப்பட்டு ள்ளதாகவும், விரைவில் அதற்கான ஆணை பெறப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என அதிகாரி கூறினார். இதனை தொடர்ந்து புதிய தார்ச்சாலை அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரியிடம் அறிவுறுத்தினார். அப்போது அ.தி.மு.க. நகர செயலாளர் ஷியாம் சுந்தர், கிழக்கு ஒன்றிய செயலாளர் நாகலூர் கிருஷ்ணமூர்த்தி, நகர துணை செயலாளர் கிருஷ்ணராஜ், ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் வேல் நம்பி, மாவட்ட பிரதிநிதி வேலுமணி, நிர்வாகிகள் காமராஜ் ஏழுமலை, சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- நல்லதங்காள் கோவில் அருகே உள்ள மின் மாற்றியில் பீஸ் போட ஏறியதாக கூறப்படுகிறது.
- சப் -இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே உள்ள வானவரெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை மகன் பார்த்திபன் (வயது 28) விவசாயி, சம்பவத்தன்று இவரது மின் மோட்டாருக்கு மின்சாரம் வரவில்லை. இதனால் அதே கிராமத்தில் நல்லதங்காள் கோவில் அருகே உள்ள மின் மாற்றியில் பீஸ் போட ஏறியதாக கூறப்படுகிறது. அப்போது மின் கம்பியில் தவறுதலாக கைபட்டது. இதில் மின்சாரம் தாக்கி பார்த்திபன் தூக்கி வீசப்பட்டார். படுகாயமடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பார்த்தீபன் இறந்து போனார். இது குறித்து அவரது மனைவி பரமேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






