search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருக்கோவிலூரில்  தினமும் 10 முதல் 20 தடவை அறிவிக்கப்படாத மின்தடை:கோடை வெப்பத்தில் பொது மக்கள் அவதி
    X

    திருக்கோவிலூரில் தினமும் 10 முதல் 20 தடவை அறிவிக்கப்படாத மின்தடை:கோடை வெப்பத்தில் பொது மக்கள் அவதி

    • திருக்கோவிலூர் பகுதியில் வெயில் கொடுரமாக இருப்பதால், இங்கு மின்சாரம் இல்லாமல் பொது மக்களால் வாழவே முடியாது என்ற சூழல் நிலவுகிறது.
    • நாள் ஒன்றுக்கு 10 முதல் 20 தடவை திடீர் திடீர் என மின்வெட்டு ஏற்படுகிறது.

    கள்ளக்கறிச்சி:

    தமிழ்நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக கோடை வெயிலின் கோரத்தாண்டவம் பொது மக்களை வாட்டி வதைக்கின்றது. குறிப்பாக திருக்கோவிலூர் பகுதியில் வெயில் கொடுரமாக அடிக்கிறது. இதனால் இங்கு மின்சாரம் இல்லாமல் பொது மக்களால் வாழவே முடியாது என்ற சூழல் நிலவுகிறது. ஆனால், திருக்கோவிலூர் மின்வாரய ஊழியர்களின் செயல்பாடு சுட்டெரிக்கும் சூரியனே தேவலாம் என்ற அளவில் இருக்கிறது. நாள் ஒன்றுக்கு 10 முதல் 20 தடவை திடீர் திடீர் என மின்வெட்டு ஏற்படுகிறது. அவ்வாறு மின்வெட்டு ஏற்பட்டு மீண்டும் மின்சாரம் வரும்போது கூடுதலான மின்னழுத்தத்துடன் வருகிறது. இதனால் மின்சாதன பொருட்கள் ஆங்காங்கே பழுதடைவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் இதுகுறித்து மின்வாரியத்திடம் கேட்டால் பதில் ஏதும் இல்லை கோடை காலம் தொடங்கியதால் மின் பற்றாக்குறையால் இந்த மின்தடை ஏற்படுவதாக வைத்துக் கொண்டால் கூட நாள் ஒன்றுக்கு எத்தனை மணி நேரம் மின்தடை ஏற்படும் என அறிவித்துவிட்டு மின்சாரத்தை நிறுத்தலாம். அதை விடுத்து திடீர் திடீரென மின்சாரம் நிறுத்தப்படுவதும் பின்னர் உயர் மின்னழுத்தத்தில் மின்விநியோகம் நடைபெறுவதும் பொதுமக்களை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது.மேலும் 24 மணி நேரத்தில் எத்தனை மணி நேரம் மின்தடை ஏற்படும் என்பதை உடனடியாக பட்டியலிட்டு திருக்கோவிலூர் மின்வாரியம் அறிவிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    Next Story
    ×