என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருக்கோவிலூர் அருகே பிளஸ் - 2 மாணவி மாயம்
- திருக்கோவிலூர் அருகே உள்ள தேவியகரம் கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி.
- இவர் திருக்கோவிலூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
கள்ளக்குறிச்சி:
திருக்கோவிலூர் அருகே உள்ள தேவியகரம் கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் திருக்கோவிலூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று முன்தினம் 3-ந்தேதி பிளஸ் 2 கடைசி தேர்வு எழுதச் சென்ற மாணவி, தேர்வு எழுதிவிட்ட பள்ளியிலிருந்து வெளியே வந்துள்ளார்.
ஆனால் வீட்டிற்கு வரவில்லை. இவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மாணவியின் தாய் திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை வழக்கு பதிவு செய்து காணாமல் போன பிளஸ் - 2 மாணவியை தேடி வருகின்றனர். ஒருவேளை மாணவியை யாராவது கடத்திச் சென்று இருக்கலாமா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருக்கோவிலூரில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
Next Story






