என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Student cheating"

    • இலக்கியா (வயது 21). இவர் வேளாண் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார்.
    • பல்வேறு இடங்களில் மகளைத் தேடினார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை

    கடலூர்:

    சேலம் அருகே உள்ள தலைவாசல் சீனிவாசன் நகரை சேர்ந்தவர் ராஜராஜன். அவரது மகள் இலக்கியா (வயது 21). இவர் சிதம்பரம் அருகே வடக்கிருப்பு கிராமத்தில் வீடு எடுத்து தங்கி அண்ணாமலை பல்கலைகழக வேளாண் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார்.              இவர் விடுமுறையில் சொந்த ஊருக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் ஊருக்கு செல்லவில்லை. இது பற்றி அறிந்த ராஜராஜன் தனது மகளை உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை.  அதிர்ச்சி அடைந்த ராஜராஜன் இதுபற்றி அண்ணாமலை நகர் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குபதிந்து இலக்கியாவை தேடி வருகிறார்கள்.   சிதம்பரம் அருகே உள்ள திருக்கழிபாளையத்தை சேர்ந்தவர் பாலதண்டாயுதம். தச்சு தொழிலாளி. இவர் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை. பதறி போன அவரது மனைவி ராணி இதுபற்றி அண்ணாமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் பாலதண்டாயுதத்தை தேடி வருகிறார்கள். 

    • பிளஸ்-2 மாணவி. இவர் இரவு வழக்கம் போல் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றார். அதிகாலை 5 மணி அளவில் பார்த்த பொழுது அரிதா இல்லாததை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
    • பின்னர் அக்கம் பக்கம் தெரிந்த இடங்கள் என எங்கு தேடியும் கிடைக்காததால் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் மாணவியின் தந்தை புகார் அளித்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி அரசுப் பள்ளியில் படித்து வந்தார். இவர் கடந்த 24-ந்தேதி இரவு வழக்கம் போல் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றார். அதிகாலை 5 மணி அளவில் பார்த்த பொழுது அரிதா இல்லாததை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் அக்கம் பக்கம் தெரிந்த இடங்கள் என எங்கு தேடியும் கிடைக்காததால் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் மாணவியின் தந்தை புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பிளஸ்-2 மாணவியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ×