என் மலர்
கள்ளக்குறிச்சி
- கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் பள்ளி கலவர சம்பவத்தில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலை ப்பள்ளியில் நடந்த கலவரம் தொட ர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கண்கா ணிப்பு கேமராக்கள் மூலம் பதிவான காட்சி களைக் கொண்டு சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர். அதன்படி பள்ளி சொத்துக்களை சேதப்படுத்தியதாக சின்ன சேலம் தாலுக்கா வடக்கனந்தல் பகுதியைச் சேர்ந்த பிரபு (வயது 37) அக்கராபாளையத்தைச் சேர்ந்த மாயவன் (29) மற்றும் போலீஸ் பஸ்சுக்கு தீ வைத்து எரித்த மூங்கி ல்பாடி கிராமத்தைச் சேர்ந்த திருஞானம் (42) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- தாகம் தீர்த்தபுரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.
- மாணவ மாணவிகள் 64 பேருக்கு விலையில்லா சைக்கிள்களை சின்னசேலம் யூனியன் தலைவர் சத்தியமூர்த்தி வழங்கினார்.
கள்ளக்குறிச்சி:
சின்னசேலம் அருகே உள்ள தாகம் தீர்த்தபுரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. மாணவ மாணவிகள் 64 பேருக்கு ள்களை சின்னசேலம் யூனியன் தலைவர் சத்தியமூர்த்தி வழங்கினார். இதில் தலைமை ஆசிரியர் இளமுருகன், மாவட்ட கவுன்சிலர் கலையரசி சந்திரசேகர், ஆசிரியர் குழு தலைவர் ஆறுமுகம், பாபு, ஆதி மூலம், ரமேஷ், வெங்கடேஷ், மற்றும் ஊராட்சி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- நேற்று காலை பிரியங்காவுக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் விஜயசேகர் என்பவர் குடும்பத்திற்கும் தகராறு ஏற்பட்டது.
- பிரியங்காவின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே பிரியங்கா இறந்து விட்ட தாக தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி:
சின்ன சேலம் அருகே உள்ள மரவாநத்தம் மேற்கு காட்டுக்கொட்டாய் பகுதி யை சேர்ந்தவர் மோகன், அவரது மகள் பிரியங்கா (வயது 14). இவர் சின்ன சேலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை பிரியங்கா வுக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் விஜயசேகர் என்பவர் குடும்பத்திற்கும் தகராறு ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த பிரியங்கா அவரது வீட்டிற்குள் சென்று தூக்கு போட்டார். இதை பார்த்த பிரியங்காவின் தாய் யுவராணி சத்தம் போட்டு கத்தியுள்ளார்.
உடனே பிரியங்காவின் தந்தை வந்து பிரியங்காவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சின்னசேலத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கள்ள–க்குறிச்சியில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பிரியங்காவின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே பிரியங்கா இறந்து விட்ட தாக தெரிவித்தார். பிரியங்காவின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்ப டையில் வழக்கை பதிவு செய்து சின்னசேலம் காவல் நிலையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- திருநாவலூர் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
- நீண்ட நாட்களாக வயிற்று வலி இருந்து வந்ததாக தெரிகிறது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா பரவநந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி (வயது 64). விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் மனைவி மகன், மகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு நீண்ட நாட்களாக வயிற்று வலி இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் சம்பவத்தன்று தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு மன உளைச்சலில் இருந்த சுப்பிரமணி வீட்டிலிருந்த விவசாய நிலத்திற்கு அடிக்க வைத்திருக்கும் பூச்சி மருந்தை எடுத்து குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
இதை வீட்டில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து சுப்பிரமணியை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி இறந்தார். இது குறித்து சுப்பிரமணியின் மகன் நாகராஜ் திருநாவலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் திருநாவலூர் சப்-இன்ஸ்பெக்டர் மணிமேகலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற–னர்.
- சின்னசேலம் அருகே ஏரியில் மணல் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
- 2 யூனிட் ஏரி மண்ணை எவ்வித அரசு அனுமதியோ உத்தரவோ இல்லாமல் திருட்டுதனமாக ஏற்றி வந்தார்.
கள்ளக்குறிச்சி:
சின்னசேலம் அருகே உள்ள இந்திலி ஏரியில் மணல் திருடுவதாக ரகசிய தகவல் போலீசாருக்கு கிடைத்தது. இதனால் உடனடியாக இந்திலி ஏரிக்குச் சென்ற போலீசார் மணல் திருடிய ரமேஷ் த/பெ கருப்பன் தெற்கு காட்டுக்கொட்டாய் பொறப்படாக்குறிச்சி சேர்ந்தவரை மடக்கிப்பிடித்து போலீசார் கைது செய்தனர். இதில் டிப்பர் லாரி 2 யூனிட் ஏரி மண்ணை எவ்வித அரசு அனுமதியோ உத்தரவோ இல்லாமல் திருட்டுதனமாக ஏற்றி வந்த குற்றத்திற்காக போலீசார் கைது செய்து வாகனத்தை கைப்பற்றினார்கள்.
- உளுந்தூர்பேட்டை அருகே ரெயில்வே ஊழியர் மோட்டார் சைக்கிள் மோதி பலியானார்.
- கதிர்வேலை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா பாண்டூர் பகுதியை சேர்ந்த வர் கதிர்வேல் (வயது 65) இவர் உளுந்தூர்பேட்டை ரெயில்வே நிலையத்தில் ஊழிய ராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று கதிர்வேல் பாண்டூ ரிலிருந்து அரளி செல்லும் சாலை ஓரமாக நடந்து அந்த பகுதி யில் உள்ள தனது வயல்வெளிக்கு சென்றார். அப்போது அவ ருக்கு பின்னால் வேக மாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி படுகாயம் அடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்த கதிர்வேலை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சை க்காக சென்னை ராஜீவ் காந்தி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு அவ ருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். மேலும் இது குறித்து தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து இந்த விபத்து ஏற்படுத்திவிட்டு மோட்டார் சைக்கிளை போட்டு தப்பி ஓடிய நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
- சங்கராபுரம் அருகே விவசாயியை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- நிலப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம்அருகே ரிஷிவந்தியம் ஒன்றியம் நூரோலை கிராமத்தை சேர்ந்தவர் சின்னகண்ணு மகன் கமலகண்ணன்(45). விவசாயியான இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த வரதராஜன் மகன் ரகோத்(29) என்பவருக்கும் நிலப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. சம்பவத்தன்று ரகோத் மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து கமலகண்ணனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில் ரகோத், இவரது தம்பி முருகவேல், வாஞ்சிநாதன் ஆகிய 3 பேர் மீது ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரகோத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கனியாமூர் பள்ளி கலவர வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
- போராட்டக்காரர்கள், வாகனங்களையும் தீ வைத்து கொளுத்தினர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இருந்து போனார். இதையடுத்து நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. இதில் பள்ளி சொத்துக்களை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள், வாகனங்களையும் தீ வைத்து கொளுத்தினர்.
இந்நிலையில் கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு போலீசார் விசாரணை செய்து வன்முறையில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து வருகின்றனர். அதன்படி பள்ளி சொத்துக்களை சேதப்படுத்திய சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே மஞ்சினியை சேர்ந்த பச்சமுத்து மகன் மணிவேல் (வயது 23) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் நடைபெற்றது.
- குழந்தைகளுக்கு ஏற்படும் இரத்தசோகை நோய் தடுக்கப்படுகிறது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அரசுபெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மக்கள்நல்வாழ்வு த்துறையின் சார்பில் தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு பள்ளி மாணவியர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி பள்ளி மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கினார். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-
உலக மக்கள் தொகையில் 24 சதவீதம் பேருக்கு மண் மூலம் பரவும் குடற்புழு தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த உலகளாவிய தொற்றுகளில் இந்தியாவில் தமிழகத்தில் 25 சதவீதம் பேர்இப்பரவல் காணப்படுகிறது. இந்நோய்ப்பரவலை கட்டுப்படுத்திட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள்,அரசு ஆரம்பசுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும்குழந்தைகள் நலமையங்களின் வாயிலாக மொத்தம் 1,382 நிலையங்களில் குடற்புழு நீக்க மாத்திரைகள் இன்றைய தினம்வழங்கப்படுகிறது. 1 முதல் 19 வயது வரை உள்ள 4,58,855 நபர்களுக்கும், 20 முதல் 30 வயதிற்குட்பட்ட 97,329 பெண்களுக்கும் என மொத்தம் 5,56,184 நபர்களுக்கும் அல்பெண்டாசோல் மாத்திரைகள் வழங்கப்படுகிறது. இந்த மாத்திரைகளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை காலை உணவு அல்லது மதிய உணவுசாப்பிட்ட பிறகு மாத்திரையை நன்கு கடித்து, மென்று, சுவைத்து சாப்பிட வேண்டும். 1 முதல் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அல்பெண்டாசோல் (200 மி.கி) அரை மாத்திரை, 2 முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கு 1 மாத்திரை அல்பெண்டாசோல் (400 மி.கி), 20-30 வயது வரை உள்ள பெண்களுக்கு 1 மாத்திரை அல்பெண்டாசோல் (400 மி.கி) வழங்கப்பட வேண்டும். மேலும், விடுபட்ட அனைத்து குழந்தைகளுக்கும் வருகின்ற 16 - ந்தேதி வெள்ளிக்கிழமை அன்று மாத்திரைகள் வழங்கப்படவுள்ளது.
இதன் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் இரத்தசோகை நோய் தடுக்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, அறிவுத்திறன் மற்றும் உடல் வளர்ச்சி மேம்படுத்தப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், பொதுசு காதாரத்து றையுடன் இணைந்து பள்ளி ஆசிரியர்கள், குழந்தைகள் நல மைய பணியாளர்கள், பெற்றோர்ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்பை சேர்ந்தவர்கள் குடற்புழு மாத்திரையின் பயன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி இத்திட்டம் வெற்றியடைய ஒத்துழைக்க வேணடும் என கூறினார். அப்போது மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் விஜயலட்சுமி, துணை இயக்கநர் (சுகாதாரப் பணிகள்) ராஜா, பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவியர்கள்கலந்து கொண்டனர்.
- சேலம் பஸ் நிலையத்தில் இருந்து 3 கிலோமீட்டர் நடந்தே செல்லும் அவல நிலையில் உள்ளது.
- ஓரளவு நடுத்தர வர்க்கமுள்ள மக்கள் ஆட்டோவில்செல்கி றார்கள்.
கள்ளக்குறிச்சி:
சின்னசேலத்தில் புதிய பஸ் நிலையம் அருகே இயங்கிக் கொண்டிருந்த அரசு பொது மருத்துவமனை சில வருடங்களுக்கு முன்பு இடம் பற்றாக்குறையால் தோட்டப்பாடி செல்லும் சாலை அருகே அரசு மருத்துவமனை விரிவு படுத்தி நவீன வசதிகளுடன் கட்டப்ப ட்டது. இந்து ஆஸ்பத்திரியில் சின்ன சேலம் பகுதியை சுற்றியுள்ள தோட்டப்பாடி, பெத்தாசமுத்திரம், காளசமுத்திரம், பூண்டி, அமையாகரம், மூங்கில் பாடி, எலவடி, ராயர் பாளையம், உள்ளிட்ட பகுதி மக்கள் வந்து தான் சிகிச்சை பெற்று செல்கிறார்கள்
ஆனால் மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணி பெண்கள், தாய்மார்கள், வயதா னவர்கள், நோயாளிகள் என ஏராள மானோர் சின்ன சேலம் பஸ் நிலையத்தில் இருந்து 3 கிலோமீட்டர் நடந்தே செல்லும் அவல நிலையில் உள்ளது. மருத்துவமனை செல்வதற்கு பஸ் வசதியோ மினி பஸ் வசதியோ இல்லை. ஓரளவு நடுத்தர வர்க்கமுள்ள மக்கள் ஆட்டோவில்செல்கி றார்கள்.ஏழை மக்கள் வசதியின்றி 3 கிலோ மீட்டர் தூரம்நடந்தே செல்கிறார்கள். இதனால் மருத்துவமனை வந்து சேருவதற்குள் மிகவும் சோர்வடைந்து காணப்ப டுகிறார்கள்.
இவர்கள் உடம்பில் உள்ள நோயினைப் போக்க சென்றவர்களுக்கு நடந்தே ஏற்படும் வலியை கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை எடுத்துக் எடுத்துக்கொள்ளும் அவல நிலை உள்ளது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கர்ப்பிணிப் பெண்களுக்கும் வயதான வர்களுக்கும் மினி பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
- ராமர் என்பவர் அதிவேகமாக வந்து கல்யாணசுந்தரம் ஒட்டி வந்த இருசக்கர வாகனத்தினமீது மோதினார்.
- மேல் சிகிச்சைக்காக புதுச்சேரிஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கள்ளக்குறிச்சி:
விழுப்புரம் மாவட்டம் அருங்குறிக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் கல்யா ணசுந்தரம்.இவரது மனைவி மஞ்சுளா. இவர்கள் கரும்பு வெட்டும் கூலி வேலை செய்து வருகிறார்கள். இந்நிலையில் தனது சொந்த ஊரில் திருவிழாவை காண்பதற்கு இரு சக்கர வாகனத்தில் சின்னசேலம் அருகே உள்ள பூண்டி தேசிய நெடுஞ்சாலையில் இடது புறமாக சென்று கொண்டிருக்கும் பொழுது அதே எதிர் திசையில் வடக்கு காட்டு கொட்டாய் தென் பொன்பரப்பி கிராமத்தைச் சேர்ந்த ராமர் என்பவர் அதிவேகமாக வந்து கல்யாணசுந்தரம் ஒட்டி வந்த இருசக்கர வாகனத்தினமீது மோதினார்.இந்த விபத்தில் கல்யாணசுந்தரம், அவரது மனைவிமஞ்சுளா ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் சின்னசேலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிறகுகள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
- இளம் பெண் தனியார் கல்லூரியில் பொறியியல் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார்.
- சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மைனர் பெண் (வயது 18) இவர் இதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பொறி யியல் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலை யில் சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை இதுகுறித்து அவரது தாய் புகார் அளித்துள்ளார்.
இதேபோல் கள்ளக்கு றிச்சி அருகே ஏமப்பேர் பகுதி யைச் சேர்ந்தவர் மாதவன் மகள் கவுசல்யா (வயது 19). இவர் சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து மாதவன் புகார் அளித்துள்ளார். மேற்கண்ட புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.






