சின்னசேலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்: கணவன்-மனைவி காயம்

ராமர் என்பவர் அதிவேகமாக வந்து கல்யாணசுந்தரம் ஒட்டி வந்த இருசக்கர வாகனத்தினமீது மோதினார்.மேல் சிகிச்சைக்காக புதுச்சேரிஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சின்னசேலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்: கணவன்-மனைவி காயம்
Published on

கள்ளக்குறிச்சி:

விழுப்புரம் மாவட்டம் அருங்குறிக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் கல்யா ணசுந்தரம்.இவரது மனைவி மஞ்சுளா. இவர்கள் கரும்பு வெட்டும் கூலி வேலை செய்து வருகிறார்கள். இந்நிலையில் தனது சொந்த ஊரில் திருவிழாவை காண்பதற்கு இரு சக்கர வாகனத்தில் சின்னசேலம் அருகே உள்ள பூண்டி தேசிய நெடுஞ்சாலையில் இடது புறமாக சென்று கொண்டிருக்கும் பொழுது அதே எதிர் திசையில் வடக்கு காட்டு கொட்டாய் தென் பொன்பரப்பி கிராமத்தைச் சேர்ந்த ராமர் என்பவர் அதிவேகமாக வந்து கல்யாணசுந்தரம் ஒட்டி வந்த இருசக்கர வாகனத்தினமீது மோதினார்.இந்த விபத்தில் கல்யாணசுந்தரம், அவரது மனைவிமஞ்சுளா ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் சின்னசேலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிறகுகள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com