என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்னசேலத்தில் அவலம்  அரசு ஆஸ்பத்திரிக்கு 3 கி.மீ. நடந்தே செல்லும் கர்ப்பிணிகள்
    X

    கர்ப்பிணி பெண்கள் நடந்து செல்வதை படத்தில் காணலாம்

    சின்னசேலத்தில் அவலம் அரசு ஆஸ்பத்திரிக்கு 3 கி.மீ. நடந்தே செல்லும் கர்ப்பிணிகள்

    • சேலம் பஸ் நிலையத்தில் இருந்து 3 கிலோமீட்டர் நடந்தே செல்லும் அவல நிலையில் உள்ளது.
    • ஓரளவு நடுத்தர வர்க்கமுள்ள மக்கள் ஆட்டோவில்செல்கி றார்கள்.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலத்தில் புதிய பஸ் நிலையம் அருகே இயங்கிக் கொண்டிருந்த அரசு பொது மருத்துவமனை சில வருடங்களுக்கு முன்பு இடம் பற்றாக்குறையால் தோட்டப்பாடி செல்லும் சாலை அருகே அரசு மருத்துவமனை விரிவு படுத்தி நவீன வசதிகளுடன் கட்டப்ப ட்டது. இந்து ஆஸ்பத்திரியில் சின்ன சேலம் பகுதியை சுற்றியுள்ள தோட்டப்பாடி, பெத்தாசமுத்திரம், காளசமுத்திரம், பூண்டி, அமையாகரம், மூங்கில் பாடி, எலவடி, ராயர் பாளையம், உள்ளிட்ட பகுதி மக்கள் வந்து தான் சிகிச்சை பெற்று செல்கிறார்கள்

    ஆனால் மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணி பெண்கள், தாய்மார்கள், வயதா னவர்கள், நோயாளிகள் என ஏராள மானோர் சின்ன சேலம் பஸ் நிலையத்தில் இருந்து 3 கிலோமீட்டர் நடந்தே செல்லும் அவல நிலையில் உள்ளது. மருத்துவமனை செல்வதற்கு பஸ் வசதியோ மினி பஸ் வசதியோ இல்லை. ஓரளவு நடுத்தர வர்க்கமுள்ள மக்கள் ஆட்டோவில்செல்கி றார்கள்.ஏழை மக்கள் வசதியின்றி 3 கிலோ மீட்டர் தூரம்நடந்தே செல்கிறார்கள். இதனால் மருத்துவமனை வந்து சேருவதற்குள் மிகவும் சோர்வடைந்து காணப்ப டுகிறார்கள்.


    இவர்கள் உடம்பில் உள்ள நோயினைப் போக்க சென்றவர்களுக்கு நடந்தே ஏற்படும் வலியை கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை எடுத்துக் எடுத்துக்கொள்ளும் அவல நிலை உள்ளது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கர்ப்பிணிப் பெண்களுக்கும் வயதான வர்களுக்கும் மினி பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×