என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "No bus facility"

    • கலெக்டரிடம் பொதுமக்கள் வேண்டுகோள்
    • தூய்மை பணி மேற்கொள்ள உத்தரவு

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த அப்புக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட பண்ணையார் திப்பை மலைப்பகுதிக்கு சாலை அமைக்கும் பணியை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது மாணிக்க கொல்லை - அப்புக்கல் இடையே சாலை வசதி செய்து தர வேண்டும். ஏரிக்கொல்லை கிராமத்தில் இருந்து அணைக்கட்டுக்கு பள்ளி மாணவர்கள் செல்லும் நேரத்திற்கு பஸ் வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதற்கு பதில் அளித்த கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    இதனை தொடர்ந்து யாதவபுரம் பகுதியில் சாலையோரங்களில் கொட்டப்பட்டுள்ள திடக்கழிவுகளை பார்வையிட்டார், அதனை உடனடியாக அகற்றி கிராமத்தை தூய்மை பணி மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    மேலும் 100 நாள் வேலை திட்டத்தை பார்வையிட்ட கலெக்டர் தொழிலாளர்களிடம், பணிக்கான ஊதியம் சரியான முறையில் வழங்கப்படுகிறதா? என கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின்போது அணைக்கட்டு தாசில்தார் வேண்டா, அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுதாகர்,சாந்தி, அப்புக்கல் ஊராட்சி மன்ற தலைவர் (பொறுப்பு) சுரேஷ், ஒன்றிய குழு உறுப்பினர் சபரி சோபனா உடன் இருந்தனர்.

    • சேலம் பஸ் நிலையத்தில் இருந்து 3 கிலோமீட்டர் நடந்தே செல்லும் அவல நிலையில் உள்ளது.
    • ஓரளவு நடுத்தர வர்க்கமுள்ள மக்கள் ஆட்டோவில்செல்கி றார்கள்.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலத்தில் புதிய பஸ் நிலையம் அருகே இயங்கிக் கொண்டிருந்த அரசு பொது மருத்துவமனை சில வருடங்களுக்கு முன்பு இடம் பற்றாக்குறையால் தோட்டப்பாடி செல்லும் சாலை அருகே அரசு மருத்துவமனை விரிவு படுத்தி நவீன வசதிகளுடன் கட்டப்ப ட்டது. இந்து ஆஸ்பத்திரியில் சின்ன சேலம் பகுதியை சுற்றியுள்ள தோட்டப்பாடி, பெத்தாசமுத்திரம், காளசமுத்திரம், பூண்டி, அமையாகரம், மூங்கில் பாடி, எலவடி, ராயர் பாளையம், உள்ளிட்ட பகுதி மக்கள் வந்து தான் சிகிச்சை பெற்று செல்கிறார்கள்

    ஆனால் மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணி பெண்கள், தாய்மார்கள், வயதா னவர்கள், நோயாளிகள் என ஏராள மானோர் சின்ன சேலம் பஸ் நிலையத்தில் இருந்து 3 கிலோமீட்டர் நடந்தே செல்லும் அவல நிலையில் உள்ளது. மருத்துவமனை செல்வதற்கு பஸ் வசதியோ மினி பஸ் வசதியோ இல்லை. ஓரளவு நடுத்தர வர்க்கமுள்ள மக்கள் ஆட்டோவில்செல்கி றார்கள்.ஏழை மக்கள் வசதியின்றி 3 கிலோ மீட்டர் தூரம்நடந்தே செல்கிறார்கள். இதனால் மருத்துவமனை வந்து சேருவதற்குள் மிகவும் சோர்வடைந்து காணப்ப டுகிறார்கள்.


    இவர்கள் உடம்பில் உள்ள நோயினைப் போக்க சென்றவர்களுக்கு நடந்தே ஏற்படும் வலியை கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை எடுத்துக் எடுத்துக்கொள்ளும் அவல நிலை உள்ளது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கர்ப்பிணிப் பெண்களுக்கும் வயதான வர்களுக்கும் மினி பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×