சின்னசேலம் அருகே ஏரியில் மணல் திருடியவர் கைது

சின்னசேலம் அருகே ஏரியில் மணல் திருடியவர் கைது செய்யப்பட்டார்.2 யூனிட் ஏரி மண்ணை எவ்வித அரசு அனுமதியோ உத்தரவோ இல்லாமல் திருட்டுதனமாக ஏற்றி வந்தார்.
சின்னசேலம் அருகே ஏரியில் மணல் திருடியவர் கைது
Published on

கள்ளக்குறிச்சி:

சின்னசேலம் அருகே உள்ள இந்திலி ஏரியில் மணல் திருடுவதாக ரகசிய தகவல் போலீசாருக்கு கிடைத்தது. இதனால் உடனடியாக இந்திலி ஏரிக்குச் சென்ற போலீசார் மணல் திருடிய ரமேஷ் த/பெ கருப்பன் தெற்கு காட்டுக்கொட்டாய் பொறப்படாக்குறிச்சி சேர்ந்தவரை மடக்கிப்பிடித்து போலீசார் கைது செய்தனர். இதில் டிப்பர் லாரி 2 யூனிட் ஏரி மண்ணை எவ்வித அரசு அனுமதியோ உத்தரவோ இல்லாமல் திருட்டுதனமாக ஏற்றி வந்த குற்றத்திற்காக போலீசார் கைது செய்து வாகனத்தை கைப்பற்றினார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com