என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • இன்று 16-ந் தேதி தமிழக அரசின் சிறப்பு திட்டமான பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
    • கிராம மக்கள் மற்றும் கட்சி தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் மற்றும் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் கீழ்ப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது அந்த வழி யாக வந்த பொதுப்ப ணித்துறை அமைச்சர் எ.வ.வேலு காரை சாலை யோரமாக நிறுத்தி விட்டு கீழே இறங்கினார். இவரை பார்த்ததும் அந்த வழியாக வந்து கொண்டிருந்த கலெக்டர் ஷ்ரவன்குமார், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்தி கேயன் ஆகியோரும் காரில் இருந்து இறங்கி வந்தனர்.

    அவர்களிடம் இன்று 16-ந் தேதி தமிழக அரசின் சிறப்பு திட்டமான பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முடிக்கப்பட்டு உள்ளதா? எங்கெங்கு நடத்தப்படுகிறது என்பது உள்ளிட்ட விவர ங்களை கேட்டறிந்த அமைச்சர் எ.வ.வேலு நிகழ்ச்சியில் தாமும் பங்கேற்ப தாக கூறினார். சில நிமிடங்களுக்கு பின்னர் அவர்கள் அங்கி ருந்து காரில் புறப்பட்டு சென்ற னர். சாலை யோரத்தில் நின்றபடி அரசு அலுவல ர்களுடன் அமைச்சர் எ.வ.வேலு கலந்துரை யாடியது அங்கி ருந்த கிராம மக்கள் மற்றும் கட்சி தொண்ட ர்களி டையே நெகிழ்ச்சி யை ஏற்படுத்து வதாக இருந்தது.

    • நகைக்கடையில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த 50 பவுன் நகை மற்றும் 50 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளை கும்பல் திருடி சென்றனர்.
    • கடையின் உள்ளே இருந்த லாக்கரை கொள்ளை கும்பலால் உடைக்க முடியவில்லை.

    திருக்கோவிலூர்:

    திருக்கோவிலூர் வடக்கு தெருவில் நகைக்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளது.

    இந்த வடக்கு தெருவில் அதே பகுதியைச் சேர்ந்த நித்திஷ் லோகேஷ் என்பவருக்கு சொந்தமான நகைக்கடை உள்ளது. நேற்று இரவு வழக்கம் போல் கடையில் வேலை முடித்துவிட்டு பணியாளர்கள் நகை கடையை மூடி விட்டு சென்றனர்.

    நள்ளிரவு சமயம் அங்கு வந்த மர்ம கும்பல் நகைக்கடையில் 3-வது மாடியில் ஏறி கண்காணிப்பு கேமரா மற்றும் கடைக்கு வரும் மின்சார இணைப்பை துண்டித்து விட்டனர். பின்னர் அவர்கள் கொண்டு வந்த 3சிலிண்டர்கள் மூலம் நகைக்கடையில் இருந்த இரும்பு கதவை வெல்டிங் முறையில் துளையிட்டு உள்ளே நுழைந்தனர். நூல் அளவும் வெளியில் தெரியாத வண்ணம் நூதன முறையில் செயல்பட்டு கடையின் உள்ளே புகுந்தனர்.

    கடையின் உள்ளே இருந்த லாக்கரை அவர்களால் உடைக்க முடியவில்லை. இதனால் நகைக்கடையில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த 50 பவுன் நகை மற்றும் 50 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளை கும்பல் திருடி சென்றனர். இன்று காலை கடை பணியாளர்கள் கடையை திறந்த போது கடையில் கொள்ளை போய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து திருக்கோவிலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்த திருக்கோவிலூர் டி.எஸ்.பி. பழனி, இன்ஸ்பெக்டர் பாபு, சப் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொள்ளை போன நகைக்கடையை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து நூதன முறையில் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் தடவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டுள்ளது.

    தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்து வருகின்றனர். மோப்பநாய் கொள்ளை நடந்த இடத்திலிருந்து மோப்பம் பிடித்து சிறிது நேரம் ஓடி நின்றது யாரையும் பிடிக்கவில்லை. இந்த கொள்ளைக்கு பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் புதிய பொருட்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது. திருக்கோவிலூரில் பொதுமக்களின் நடமாட்டம் மிகுந்த வடக்கு தெருவில் உள்ள நகைக்கடையில் கொள்ளை போன சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • திருவிழா நடைபெற்ற போது முன் விரோதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
    • கிருஷ்ணமூர்த்தி, முருகன், சிவராமன் ஆகியோர் பாஸ்கரை தாக்கியதாக கூறப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே சூ.பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டு. இவரது மகன் பாஸ்கர் (வயது 35). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த முருகன் (45) என்பவருக்கும் கடந்த ஆண்டு மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்ற போது முன் விரோதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்றுபாஸ்கர் தனதுஅண்ணன் சக்கரவர்த்தியுடன் சூ. பள்ளிப்பட்டியில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது மாரியம்மன் கோவில் அருகே சென்றபோது சிலர் தே.மு.தி.க. கொடி கம்பம் அமைக்கப்பட்ட சிமெண்ட் கட்டையை உடைத்ததாக கூறப்படுகிறது.

    அப்போது பாஸ்கர் ஏன் உடைக்கிறீர்கள்? என கேட்டதற்கு அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, முருகன், சிவராமன் ஆகியோர் பாஸ்கரை தாக்கியதாக கூறப்படுகிறது.  இது குறித்து பாஸ்கர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதே போல் முருகன் என்பவர் கொடுத்துள்ள புகாரில் பாஸ்கர் மற்றும் இளங்கோவன் ஆகியோர் தி.மு.க. கொடி கம்பம் அமைந்துள்ள சிமெண்ட் கட்டையை இடித்து சேதப்படுத்தியதாக புகார் அளித்துள்ளார். இரு பிரிவினரும் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • 55 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் அரசம்பட்டு பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அரசம்பட்டு மணிநதி பாலம் அருகே சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த அதே ஊரை சேர்ந்த ராமர் (வயது 48), பாசார் கிராமம் அஞ்சலை (59) ஆகிய 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 55 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

    • கல்லூரி மாணவி மாயமானார்.
    • கழிவறைக்கு சென்று வருகிறேன் என்று சென்ற ஐஸ்வர்யா திரும்பி வரவே இல்லை.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் மேல் நாரியப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யாசாமி. இவருக்கு அம்பிகா (வயது 28), ஐஸ்வர்யா (17) என 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் அம்பிகாவுக்கு திருமணம் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. இளைய மகள் ஐஸ்வர்யா தலைவாசலில் உள்ள தனியார் கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 12-ந் தேதி அன்று வீட்டின் மொட்டை மாடியில் தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் கழிவறைக்கு சென்று வருகிறேன் என்று சென்ற ஐஸ்வர்யா திரும்பி வரவே இல்லை. இதில் சந்தேகம் அடைந்த மாணவியின் பெற்றோர் அக்கம் பக்கத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் அவரை தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து சின்ன சேலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடிவருகின்றனர்.

    • தியாகதுருகம் துணை மின் நிலையத்தில் நாளை 15- ந்தேதி (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் துணை மின் நிலையத்தில் நாளை 15- ந்தேதி (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக தியாகதுருகம், பெரியமாம்பட்டு, சின்னமாம்பட்டு, தியாகை, எலவனாசூர்கோட்டை, ரிஷிவந்தியம், பாவந்தூர், நூரோலை, அய்யனார்பாளையம், பழையசிறுவங்கூர், சூளாங்குறிச்சி, மாடூர், மடம், பிரிதிவிமங்களம், வீரசோழபுரம், வீ.பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை திருக்கோவிலூர் மின்வாரிய செயற்பொறியாளர் ரகுராமன் தெரிவித்துள்ளார்.

    • உளுந்தூர்பேட்டை, சேந்தநாடு, எறையூர் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
    • நாளை (15-ந் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை, சேந்தநாடு, எறையூர் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி நடைபெ றுவதால் நாளை (15-ந் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை உளுந்தூர்பேட்டை நகரம், வெள்ளையூர், எடைக்கல், குமாரமங்கலம், குணமங்கலம், அங்கனூர், ஏமம் வண்டிப்பாயைம் சின்னக்குப்பம், பெரிய குப்பம், நாச்சியார்பேட்டை, காட்டுநெமிலி பு.மாம்பா க்கம், செம்மணங்கூர், உளுந்தண்டார்கோவில், மதியனூர், செங்குறிச்சி, பாதூர், கிள்ளனூர், குரும்பூர், வண்டிபாளையம், மற்றும் நகர், சேந்தநாடு துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட "கூட்டடிகள்ளக்குறிச்சி, ஆரிநத்தம், பாலக்கொ ல்லை, மட்டிகை, கல்லமேடு, ஆண்டிக்குழி, சேந்தநாடு, ஒல்லியாம்பாயைம் தொப்பையாங்குளம், மணலூர், உடையானந்தல், வைப்பாளையம், களத்தூர் திம்மிரெட்டிப்பாளையம், கிருஷ்ணாரெ ட்டிபா ளையம், மைலங்குப்பம், சேந்த மங்கலம் மற்றும் சேந்தநாடு. எறையூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட புகைப்பட்டி, அ.குஞ்சரம், பி.குஞ்சரம் கூத்தனூர், நரிப்பாளையம், பெரியகுறுக்கை, வடுகப்பாளையம், எறையூர், வடகுறும்பூர், எல்லைகிராமம், கூவாடு,தேன்குணம் நெய்வனை மற்றும் பில்ரா ம்பட்டு ஆகிய இடங்களில் மின் விநி யோகம் இருக்காது.

    • கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலை ப்பள்ளியில் நடந்த கலவரம் தொடர் பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
    • செம்பட்டா குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ரகுபதிராஜன் (24) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலை ப்பள்ளியில் நடந்த கலவரம் தொடர் பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கண்கா ணிப்பு கேமராக்கள் மூலம் பதிவான காட்சி களைக் கொண்டு சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர். அதன்படி பள்ளி சொத்து க்களை சேதப்ப டுத்தியதாக கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே சோலம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் மணி கண்டன் (வயது 22), மேலும் போலீசார் மீது கற்களை வீசி வன்முறை யில் ஈடுபட்டதாக சின்ன சேலம் அருகே பங்காரம் கிராமத்தைச் சேர்ந்த பாவாடை (46), தெங்கியா நத்தம் கிராமத்தைச் சேர்ந்த ராஜீவ்காந்தி (41), சங்கரா புரம் அருகே செம்பட்டா குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ரகுபதிராஜன் (24) ஆகிய 4 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சக்தி மெட்ரிக் பள்ளியில் உள்ள ஆடிட்டோரியத்தில் பேச்சுவார்த்தை நடந்ததாக சிசிடிவி காட்சிகளின் புகைப்படங்கள் வெளியீடு.
    • ஸ்ரீமதி ஜூலை 13ஆம் தேதி உயிரிழந்த நிலையில் அன்றைய தினமே பேச்சுவார்த்தை நடந்த காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளன.

    கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவத்தில் புதிய ஆதாரம் வெளியாகியுள்ளது. மாணவி உயிரிழந்த ஜூலை 13ஆம் தேதி இரவு 7 மணியளவில் பள்ளி நிர்வாகத்துடன் செல்வி தரப்பு பேசியதாக ஆதாரம் வெளியானது.

    அந்த வீடியோவில், ஸ்ரீமதி தரப்பில் அவரது தாய் செல்வி உட்பட 9 பேர் பேச்சுவார்த்தையில் இருந்துள்ளனர். ஸ்ரீமதி ஜூலை 13ஆம் தேதி உயிரிழந்த நிலையில் அன்றைய தினமே பேச்சுவார்த்தை நடந்த காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளன.

    பள்ளி நிர்வாகம் தங்களை அழைத்து பேசவில்லை என செல்வி குற்றச்சாட்டு முன்வைத்திருந்த நிலையில் தற்போது ஆதாரம் வெளியாகியுள்ளது.

    அந்த வீடியோவில் சக்தி மெட்ரிக் பள்ளியில் உள்ள ஆடிட்டோரியத்தில் பேச்சுவார்த்தை நடந்ததாக சிசிடிவி காட்சிகளின் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

    மேலும் அந்த வீடியோவில், எதிர்தரப்பில் கள்ளக்குறிச்சி மகாபாரதி பள்ளி நிர்வாகி மோகன் மற்றும் சக்தி மெட்ரிக் பள்ளியின் தாளாளர் ரவிக்குமாரின் உறவினர்கள் என 4 பேர் பங்கேற்றுள்ளனர்.

    • முத்துவுக்கும் பிரியாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறி உள்ளது.
    • காதல் பெற்றோருக்கு தெரிய வந்த நிலையில் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது .

    கள்ளக்குறிச்சி: 

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தாலுகா கீழ் ஒரத்தூர் கிராமத்தை சேர்ந்த முத்து (வயது 22). இவர் கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் வேலை பார்க்கும் அதே பகுதியில் பிரியா (19) வசித்து வருகிறார். அப்போது முத்துவுக்கும் பிரியாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறி உள்ளது. கடந்த இரண்டு வருடமாக காதலித்து வந்தனர்.

    இந்த காதல் பெற்றோருக்கு தெரிய வந்த நிலையில் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது . இதனால் வீட்டை விட்டு சென்று திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு எடுத்தனர் காதல் ேஜாடி கடந்த 11-ந் தேதி அன்று சேலம் மாவட்டத்தில் உள்ள பவானி முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றது சின்னசேலம் அருகே உள்ள கணியாமூர் என்ற கிராமத்தில் உறவினர் வீட்டில் தங்கி உள்ளனர். ஆனால் பெற்றோரால் நமக்கு ஆபத்து வரலாம் என எண்ணி சின்னசேலம் போலீஸ் இன்று தஞ்சம் அடைந்தனர். அப்எபோது 2 பேரும் மேஜர் என்பதால் பெற்றோர்களை அழைத்து இவர்களது திருமணமட சட்டப்படி செல்லும்.இவர்களுக்கு நீங்கள் ஏதாவது இடையூறு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். 

    • சங்கராபுரம் அருகே டிராக்டர் டிப்பர் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார்.
    • பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கள்ளக்குறிச்சி 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பகண்டை கூட்டுரோடு அடுத்த வாணா–புரத்தை சேர்ந்தவர் அருள்குமார் (வயது26). இவர் இருசக்கர வாகனத்தில் மாடாம்பூண்டி கிராமத்தில் தனது உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்டு விட்டு உறவினருடன் மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். மரூர்-புதூர் அருகே வந்தபோது எதிர்பாரதவிதமாக சாலையோரம் கரும்புலோடுடன் நின்றுகொண்டிருந்த டிராக்டர் டிப்பரின் பின்பக்கம் அருள்குமார் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதி–யது. இதில் படுகாயம் அடைந்த அருள்குமார் மருத்துவமனை செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். பின்னால் அமர்ந்து கொண்டிருந்த அவரது உறவினர் லேசான காயத்துடன் உயிர்தப்பினார். இது குறித்து பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பாஞ்சாலை யின் மாமியார் இறந்து இறந்துவிட்டதாக வேல்முரு கனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • சொர்க்க ரதம் வாகனம் அஜாகிரதையாகவும் கவனக்குறைவாகவும் வந்து அயோத்தி என்பவர் மீது மோதியது.

    கள்ளக்குறிச்சி:

    விருத்தாசலம் மாவட்டம் சின்ன பரூர் தாலுக்கா புதூர் கிராமத்தை சேர்ந்தவர் அயோத்தி (வயது 67). இவர்களுக்கு வேல்முருகன் என்ற மகனும் பாஞ்சாலை என்ற மகளும் உள்ளனர் பாஞ்சாலையை மேலூர் கிராமத்தில் சேர்ந்தவருக்கு சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில் பாஞ்சாலை யின் மாமியார் இறந்து இறந்துவிட்டதாக வேல்முரு கனுக்கு தகவல் தெரிவிக்க ப்பட்டது. பாஞ்சாலை யின் இறுதி சடங்கில் பங்கேற்ப தற்காக மேலூர் வந்துள்ளார். பிறகு பாஞ்சாலையின் இறுதி சடங்கு முடித்துவிட்டு மேலூரில் இருந்து இந்திலி செல்லும் சாலையில் முருகா பாலிடெக்னிக் அருகே இடது ஓரமாக நடந்து சென்றுள்ளார்.

    அதே திசையில் வந்த சொர்க்க ரதம் வாகனம் அஜாகிரதையாகவும் கவனக்குறைவாகவும் வந்து அயோத்தி என்பவர் மீது மோதியது. இதில் பலத்த அடிபட்டு அதிக அளவில் காயம் ஏற்பட்டது இதனால் ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சியில் உள்ள அரசினர் பொது மருத்துவமனைக்கு சேர்க்கப்பட்டார். பின்பு மேல் சிகிச்சைக்காக பாண்டிச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 11ஆம் தேதி அன்று பரிதாபமாக இறந்தார். வேல்முருகன் கொடுத்த புகாரில் அடிப்படையில் வழக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    ×