என் மலர்
கள்ளக்குறிச்சி
- சின்னசேலம் அருகே அரசு பஸ்சை வழிமறித்து ரகளை-வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- பஸ்சில் பயணம் செய்தவர்கள் கீழே இறங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
களளக்குறிச்சி:
சின்னசேலத்தில் இருந்து பாரஸ்ட் வழியாக கருந்த லாக்குறிச்சிக்கு செல்லும் தார் சாலை குண்டும் குழியுமாக சேதமடைந்து இருக்கி றது. இந்த சேதமடைந்த சாலையில் புதியதாக தார் சாலை அமைக்க வேண்டும். என்று அதே பகுதியை சேர்ந்த வாலிபர் சாமிதுரை என்பவர் சின்னசேலத்தில் இருந்து நைனார்பாளையம் வழியாக வி. மாமந்தூர் செல்லும் அரசு பஸ்சை மறித்து ரகளை செய்தார். இதனால் பஸ்சில் பயணம் செய்தவர்கள் கீழே இறங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் போக்குவரத்தில் பயணம் செய்தவர்கள் பாதிப்புக்கு உள்ளானார்கள். இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தகவல் அறிந்த போலீசார் சாமிதுரையை கைது செய்து பஸ்சை அனுப்பி வைத்தனர்.
- மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- இரு சக்கர வாகனத்தில் 60 லிட்டர் சாராயம் டியூப்பில் எடுத்து வந்துள்ளார்.
கள்ளக்குறிச்சி:
கச்சிராயபாளையம் தனி பிரிவு போலீசார் சின்னசேலம் அருகே மாத்தூரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மாத்தூரில் இருந்து பால்ராம் பட்டு ரோடு செல்லும் வழியில் ஏழுமலை என்பவர் இரு சக்கர வாகனத்தில் 60 லிட்டர் சாராயம் டியூப்பில் எடுத்து வந்துள்ளார். அவரை போலீசார் மடக்கி பிடிதது கைது செய்தனர். அதோடு இருசக்கர வாகனத்தையும் 60 லிட்டர் சாராயத்தையும் கைப்பற்றினர்.
- கள்ளக்குறிச்சி மாவட்ட அளவில் அரசுப் பள்ளியில் படிப்பில் சிறந்தது.
- பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் 80 மாணவர்கள் -மாணவிகள் பயின்று வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாடல் ஸ்கூல் எனப்படுகின்ற அரசு மாதிரி பள்ளி இயங்கி வந்தது. கள்ளக்குறிச்சி மாவட்ட அளவில் அரசுப் பள்ளியில் படிப்பில் சிறந்து விளங்குகின்ற மாணவர்கள் மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு இவர்களுக்காக அரசு மாதிரி பள்ளியை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் சின்ன சேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செயல்பட்டு வந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான அரசு மாதிரி பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் 80 மாணவர்கள் -மாணவிகள் பயின்று வருகின்றனர்.
கடந்த 2ஆண்டுகளாக சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செயல்பட்டு வந்த இந்த பள்ளி தற்போது இடமாற்றம் செய்யப்பட்டு சின்ன சேலம் வட்டம் வாசுதேவனூர் என்ற கிராமத்தின் அருகில் உள்ள மகாகவி என்ற தனியார் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. மாணவ-மாணவிகள் தனியார் பள்ளி பஸ்மூலம் சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலிருந்து வாசுதேவனூர் கிராம மகாகவி தனியார் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மாணவிகள் அங்கேயே தங்கி படிப்பதற்கு ஹாஸ்டல் வசதி செய்து கொடுக்கப்பட்டது.
- உளுந்தூர்பேட்டை அருகே சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் அவரை ஓராண்டு தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பரிந்துரை செய்தார்.
கள்ளக்குறிச்சி, செப்.18-
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே வடமாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (எ) கன்னுகுட்டி (வயது 55). இவர் கடந்த மாதம் 17-ந்தேதி வடமாம்பாக்கம் கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்தார். அவரை திருநாவலூர் போலீசார் அவரிடமிருந்து 120 லிட்டர் கள்ளச்சாராயத்தை கைப்பற்றினர். இவர் மீது திருநாவலூர் மற்றும் உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் நிலையத்தில் கள்ளச்சாராயம் கடத்திய மற்றும் விற்பனை செய்த பல வழக்குகள்நிலுவையில் உள்ளது.
இவ்வாறு தொடர்ந்து மதுவிலக்கு குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் இவரின் நடவடிக்கையை கட்டுபடுத்தும் வகையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் அவரை ஓராண்டு தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பரிந்துரை செய்தார். அதன்படி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் மேற்படி நபரை ஓராண்டு தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி திருநாவலூர் போலீசார் ஏழுமலையை நேற்று கடலூர் மத்திய சிறையில் அடைத்தார்.
- கனியாமூர் தனியார் பள்ளியில் வன்முறையில் ஈடுபட்ட மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டடார்.
- றப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மேல்நிலைப்பள்ளியில் நடந்த வன்முறை தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர். அ த ன்ப டி கலவரத்தின்போது வன்முறையில்ஈடுபட்டு பள்ளியின் சொத்துக்களை சேதப்படுத்தியது மற்றும் பொருட்களை எடுத்துச்சென்ற கள்ளக்குறிச்சி அருகே பொற்படாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ராஜா (வயது 30) என்பவரை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
- தமிழக அரசு எப்போதும் 3-ம் பாலினத்தவர்களின் வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ளது.
- மூன்றாம் பாலினத்தவர்கள் வழங்கிய 55 கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் பெற்றுக்கொண்டார்.
கள்ளக்குறிச்சி, செப்.17-
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறையின் சார்பில், 3- ம்பாலினத்தவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அவர் பேசியதாவது:- தமிழக அரசு எப்போதும் 3-ம் பாலினத்தவர்களின் வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ளது. மேலும், -ம் பாலினத்தவர்களின் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வதற்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூத்த திருநங்கைகளுக்கு முதியோர் ஓய்வூதியம் திட்டத்தின்கீழ் 37 திருநங்கைகளுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணையினையும், திருநங்கைகளின் மேம்பாட்டுக்காக தொண்டு நிறுவன உதவியுடன் 2 திருநங்கைகளுக்குதையல் எந்திரங்களும், திருநங்கைகளின் தொழில் முனைவோரை ஊக்குவிக்க ரூ.50 ஆயிரம் மானியம் வழங்கும் திட்டத்தின்கீழ் 7 திருநங்கைகளுக்கு ரூ.3,50 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
இதே போல் 38 திருநங்கைகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களும், 60 திருநங்கைகளுக்கு குடும்ப அட்டைகளும், முதலமைச்சரின் சூரிய சக்தியால் இயங்கும் பசுமை வீடு திட்டத்தின்கீழ் 2 திருநங்கைகளுக்கு தலா ரூ.2.10 இலட்சம் மதிப்பிலான வீடுகள், திருநங்கைகள் அடையாளஅட்டை 62 திருநங்கைகளுக்கும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின்கீழ் 4 திருநங்கைகளுக்கு காப்பீட்டு அட்டையும் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் திருநங்கைகள் வா ழ்வாதார மேம்பாட்டுக்காக 100 ஆடுகள் வழங்க ப்படவுள்ளது. மேலும், அரசின் மூலம் வழங்கப்படும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் மூன்றாம் பாலினத்தவர்கள் அனை வருக்கும் கிடைத்திடும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அரசின் சார்பில் வழங்கப்படும் அனைத்து நலத்திட்டங்களையும் மூன்றாம் பாலினத்தவர்கள் பெற்று,தங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி க்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து சிறப்பு முகாமில் மூன்றாம் பாலினத்தவர்கள் வழங்கிய 55 கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் பெற்றுக்கொண்டார். இக்கூட்டத்தில் மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனீஸ்வரன், மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் சந்திரசேகரன் மற்றும் அரசு அலுவலர்கள், திருநங்கைகள் பலரும் கலந்துகொண்டனர்.
- பகண்டைகூட்டுரோட்டில் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
- பொய்யாக வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றி தி.மு.க. ஆட்சியை பிடித்துள்ளது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பகண்டை கூட்டு்ரோட்டில் அ.தி.மு.க. சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் மோகன், கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ.செந்தில்குமார் முன்னாள் எம்.பி., காமராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. க்கள் பிரபு, அழகுவேலுபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் கதிர் தண்டபாணி வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் பொய்யாக வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றி தி.மு.க. ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு தி.மு.க. கொடுத்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்ற ப்படவில்லை. குறிப்பாக அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப், மகளிருக்கு விலையில்லா ஸ்கூட்டர் போன்ற பல்வேறு திட்டங்களை தி.மு.க.அரசு ரத்து செய்துள்ளது.
மின்கட்டணத்தை குறைப்பதாகவும், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வசூலிக்கப்படும் மின் கட்டணத்தை மாதந்தோறும் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி ஆட்சியைப் பிடித்த தி.மு.க. அரசு தற்போது மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதனால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 500 முதல் 1000 ரூபாய் வரை மின் கட்டணம் உயரும். இதுதவிர விலைவாசியும், பஸ் கட்டணமும் உயரபோகிறது. ஆகவே உடனடியாக மக்களை வஞ்சிக்கும் மின்கட்டண உயர்வை தி.மு.க. அரசு வாபஸ் பெற வேண்டும் என மாவட்ட செயலாளர் குமரகுரு பேசினர். முன்னதாக உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்பப்பெற வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் அருணகிரி, துரைராஜ், தேவேந்திரன், நகர செயலாளர் பாபு மற்றும் கூட்டுறவு சங்க நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கவுன்சிலர் மணிகண்டன் நன்றி கூறினார்.
- மாணிக்கம் தலைமையான போலீசார் மூலம் 4தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
- ஐந்து கிலோ எல்.பி.ஜி. சிலிண்டர் மூலம் நகை கடையின் இரும்பு கதவை துளையிட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வடக்கு தெருவில் பாபுலால் ஜுவல்லர்ஸ் நகைக் கடை உள்ளது. இந்த நகை கடையை அதே பகுதியைச் சேர்ந்த நித்தேஷ் லோகேஷ் என்பவர் நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் கடையில் வேலை முடித்துவிட்டு பணியாளர்கள் நகை கடையை மூடி விட்டு சென்றனர். நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் நகைக்கடையில் மூன்றாவது மாடியில் ஏறி சி.சி.டி.வி.கேமரா மற்றும் கடைக்கு வரும் மின்சார இணைப்பை ண்டித்து விட்டனர். பின்னர் அவர்கள் கொண்டு வந்த மூன்று சிலிண்டர்கள் மூலம் நகைக் கடை இரும்பு கதவை வெல்டிங் முறையில் துளையிட்டு கடையின் உள்ளே புகுந்தனர்.
பின்னர் கடையில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த 50 பவுன் நகை மற்றும் 50 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளை கும்பல் திருடி சென்றனர். நேற்று காலை கடை பணியாளர்கள் கடையை திறந்த போது கடையில் கொள்ளை போய் இருந்தது. இது குறித்து திருக்கோவிலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி இன்ஸ்பெக்டர் பாபு, சப் -இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொள்ளை போன நகைக்கடையை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்தனர். இந்த கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளை கும்பலை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு, சப் இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் ,ராஜசேகர் ,மாணிக்கம் தலைமையான போலீசார் மூலம் 4தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதில் இரண்டு தனி படைகள் நேற்று சென்னையில் உள்ள விமான நிலையம் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆய்வு செய்தனர். இந்த கொள்ளையில் புதிதாக வாங்கப்பட்ட 10 கிலோ எடையுள்ள மூன்று ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஐந்து கிலோ எல்.பி.ஜி. சிலிண்டர் மூலம் நகை கடையின் இரும்பு கதவை துளையிட்டுள்ளனர். இவைகள் கொள்ளையர்கள் அங்கே விட்டு விட்டு சென்றுள்ளனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட ஸ்க்ரு டிரைவர் கட்டிங் பிளேடு என அனைத்துமே புத்தம் புதியதாக வாங்கப்பட்டவையாக உள்ளது .இவர்கள் கொள்ளையடிக்க நோட்டமிட்டு திட்டம் தீட்டி இந்த கொள்ளை சம்பவத்தை நிகழ்த்திருப்பதை வைத்து பார்க்கும்போது அவர்கள் வட மாநில கொள்ளையர்கள் ஆக இருக்க கூடும் என்று போலீசார் சந்தேகத்தின் பேரில் கூறுகின்றனர். மேலும் போலீசார் இது குறித்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார்.
- 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவு நகலை சிறை அலுவலர்கள் மூலம் அவர்களிடம் வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இதைதொடர்ந்து கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் போலீஸ் வாகனங்கள் மற்றும் பள்ளியில் இருந்த பொருட்களை சேதப்படுத்தி தீயிட்டு கொளுத்திய வழக்கில் சின்ன சேலம் அருகே வி.மாமந்தூர் லட்சாதிபதி (வயது 34), பெரிய சிறுவத்தூர் சர்புதீன் (38), உலகங்கள் தான் கிராமத்தைச் சேர்ந்த சரண்ராஜ் (34), தொட்டியம் கிராமத்தைச் சேர்ந்த மணி (44), ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவர்களின் தொடர் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து லட்சாதிபதி, சர்புதீன், சரண்ராஜ், மணி ஆகிய 4 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் உத்தரவிட்டார். அதன்படி 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவு நகலை சிறை அலுவலர்கள் மூலம் அவர்களிடம் வழங்கப்பட்டது.
- கூட்டம் முடிந்ததும் நேற்று இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
- தொடர்ந்து மருத்துவரிடம் தரமான சிகிச்சை அளிக்குமாறு வலியுறுத்தினர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட் டம் தியாகதுருகம் அருகே வடதொரசலூரா கிராமத்தைச் சேர்ந்த 18 பெண்கள், 5 ஆண்கள் உள்ளிட்ட 23 பேர் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற அ.தி.மு.க.பொதுக்கூட்டத்திற்கு மினி வேனில் சென்றனர். கூட்டம் முடிந்ததும் நேற்று இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அதே பகுதியைச்சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் ரத்தினம் (வயது 56) மினி வேனை வாகனத்தை ஓட்டினார். அப்போது தியாகதுருகம் அருகே கரீம்ஷா தக்கா அருகேவந்தபோது எதிரே வந்த காரும், மினி வேனும் நேருக்கு நேர் மோதியது. இதில் மினி வேனில் வந்த நாராயணன், சசிகுமார், ரத்தினம், பச்சையம்மாள், வசந்தா உள்ளிட்ட 18 பேர் காயம் அடைந்தனர். இவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதே போல் காரை ஓட்டி வந்த திருக்கோவிலூர் அருகே கடம்பூர் மரூர் புதூரை சேர்ந்த அன்பழகன் மகன் திருமலைச்சாமி (வயது 28) மற்றும் அவருடன் காரில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த கனகராஜ் மகன் பிரவீன் குமார் (27) விஜயராஜ் மகன் வினோத் குமார் (26) ஆகிய 3 பேரும் காயமடைந்தனர். இவர்கள் தியாகதுருகத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த அ.தி.மு.க.மாவட்ட செயலாளர் குமரகுரு, கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.செந்தில்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்பிரபு, அழகுவேல் பாபு, நகரச் செயலாளர் பாபு ஆகியோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். தொடர்ந்து மருத்துவரிடம் தரமான சிகிச்சை அளிக்குமாறு வலியுறுத்தினார். அ.தி.மு.க. பொதுக் கூட்டத்திற்கு சென்று திரும்பிய வாகனம் விபத்து ஏற்பட்டு காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- திருநாவலூர் அருகே பள்ளிக்குச் சென்ற மாணவி மாயமானார்.
- சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஆசை தம்பி வழக்கு பதிவு செய்து காணாமல் போன மனைவியை தேடி வருகிறார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருவண்ணாமலை அருகே குண்ணத்தூர் பகுதியை சேர்ந்த முருகன் அலமேலு இவர்களின் மகள். இவர் அதே பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்- 2 படித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் மாணவியை முருகன் மற்றும் அலமேலு பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர் ஆனால் இங்கு தெரியும் கிடைக்கவில்லை இது குறித்து திருநாவலூர் போலீசில் தாய் அலமேலு புகார் செய்தார். புகாரின் பேரில் திருநாவலூர் போலீஸ் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஆசை தம்பி வழக்கு பதிவு செய்து காணாமல் போன மனைவியை தேடி வருகிறார். இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த சரண்ராஜ் (22) என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.
- சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளி வன்முறை சம்பவத்தில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- கலவரம் செய்ய தூண்டும் வகை யில் கருத்துக்களை பதிவு செய்தது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர். அதில் நூற்றுக்கணக் கானோர்சேர்த்து குழுக்க ள்அமைத்து கலவரம் செய்ய தூண்டும் வகை யில் கருத்துக்களை பதிவு செய்தது. மேலும் கலவரம் ஏற்பட காரண மாக இருந்ததோடு மட்டு மல்லாமல் கலவரத்தில் ஈடுபட்டதாக கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கச்சிராயபாளையம் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த அமிர்தராஜ் மகன் தினேஷ்ராஜ் (வயது 19) மற்றும் சின்னசேலம் அருகே பெத்தாசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி மகன் மாதேஷ் (19) ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.






