என் மலர்
நீங்கள் தேடியது "வன்முறை சம்பவம்"
- காதலித்த பெண்ணின் வீட்டு மாடியிலேயே அவர் தூக்கிட்டிருப்பது மிகுந்த சந்தேகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
- பாதிக்கப்பட்ட அந்த இளைஞரின் குடும்பத்தின் பக்கம் பாஜக உறுதியாக நிற்கும்.
தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் மாற்று மதப்பெண்ணை காதலித்து திருமணம் செய்யவிருந்த இந்து பட்டியல் சமூக இளைஞரான தனுஷ் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதுவும் அவர் காதலித்த பெண்ணின் வீட்டு மாடியிலேயே அவர் தூக்கிட்டிருப்பது மிகுந்த சந்தேகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அந்தப் பெண்ணின் நெருங்கிய உறவினர்கள் திமுகவில் உள்ளதாக தகவல்கள் வந்துள்ள நிலையில், இந்த வழக்கு முறையாக விசாரிக்கப்படுமா என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்துள்ளது.
நல்லமுறையில் கல்வி கற்று, கோவையில் ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞரான தனுஷ் தான் காதலிக்கும் பெண்ணின் வீட்டிலேயே தூக்கிட்டுக் கொண்டார் என்பது நம்பும்படியான செய்தியாக இல்லை.
கடந்த நான்காண்டுகளில் தமிழகத்தில் சீர்குலைந்து போயுள்ள சட்டம் ஒழுங்கு அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டது. குறிப்பாக, பட்டியலின மக்கள் மீதான வன்முறைகள் இந்த ஆட்சியில் தான் கொடூர உச்சங்களைத் தொட்டிருக்கிறது.
ஆக, இவ்வழக்கில் எவ்வித அரசியல் தலையீடும் இல்லாமல் முறையான பிரேத பரிசோதனை செய்து உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டியது காவல்துறையினரின் பொறுப்பு. அந்தப் பெண்ணின் குடும்பத்திற்கும் திமுக-விற்கும் நெருங்கிய தொடர்புகள் இருப்பதால் திமுகவின் வழக்கமான அராஜகப் போக்கிற்கு தமிழகக் காவல்துறை இணங்கக் கூடாது. ஆளுங்கட்சியின் வாக்கரசியலுக்கு துணை போகும் நோக்கத்தோடு ஒருதலை பட்சமாக காவல்துறை செயல்படக்கூடாது.
ஆட்சி மாற்றத்திற்கு இன்னும் ஒரு சில மாதங்கள் தான் உள்ள நிலையில், ஆளும் திமுக-வின் அரசியல் அழுத்தத்திற்கு ஆட்படாமல், இவ்வழக்கின் உண்மைத் தன்மையை விரைவாக வெளிக்கொணர வேண்டுமென தமிழக காவல் துறையினரை வலியுறுத்துகிறேன்.
மேலும், பாதிக்கப்பட்ட அந்த இளைஞரின் குடும்பத்தின் பக்கம் பாஜக உறுதியாக நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளி வன்முறை சம்பவத்தில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- கலவரம் செய்ய தூண்டும் வகை யில் கருத்துக்களை பதிவு செய்தது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர். அதில் நூற்றுக்கணக் கானோர்சேர்த்து குழுக்க ள்அமைத்து கலவரம் செய்ய தூண்டும் வகை யில் கருத்துக்களை பதிவு செய்தது. மேலும் கலவரம் ஏற்பட காரண மாக இருந்ததோடு மட்டு மல்லாமல் கலவரத்தில் ஈடுபட்டதாக கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கச்சிராயபாளையம் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த அமிர்தராஜ் மகன் தினேஷ்ராஜ் (வயது 19) மற்றும் சின்னசேலம் அருகே பெத்தாசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி மகன் மாதேஷ் (19) ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் மாற்றம் செய்யப்பட்டார்.
- கூட்டத்தில் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக நடந்த வன்முறை சம்பவம் குறித்து விவாதிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே சின்னசேலம் அடுத்த கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 13- ந் தேதி பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி மூணாவது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையொட்டி கடந்த 17- ந் தேதி பள்ளிக்கு முன்பு திரண்ட போரா ட்டக்காரர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் பள்ளி வளாகத்தில் இருந்த பேருந்து, அலுவலகங்கள், தளவாடப் பொருட்கள், மாணவர்கள் சான்றிதழ்கள் ஆகியவை தீயிட்டு கொளுத்தப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக நேற்று சென்னையில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் எ.வ.வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உள்துறை செயலர் பணீந்திர ரெட்டி, டி.ஜி.பி. சைலேந்திரபாபு, முதல்வரின் செயலாளர் உதயச்சந்திரன், பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக நடந்த வன்முறை சம்பவம் குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் பிரச்சனையை சரியாக கையாளாத கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் ஆகியோர் மாற்றம் செய்யப்பட்டனர். இது குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது, கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய கலெக்டராக வேளாண் துறை கூடுதல் இயக்குனராக இருந்த ஷ்ரவன்குமார் ஜடாவத் நியமிக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி கலெக்டராக இருந்த ஸ்ரீதர் சென்னை - கன்னியாகுமரி தொழில் வழிச்சாலை திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் பதவி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.






