search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பகண்டைகூட்டுரோட்டில்  மின் கட்டண உயர்வை கண்டித்து  அ.தி.மு.க.ஆர்ப்பாட்டம்
    X

     பகண்டைகூட்டுரோட்டில் அ.தி.மு.க. சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

    பகண்டைகூட்டுரோட்டில் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.ஆர்ப்பாட்டம்

    • பகண்டைகூட்டுரோட்டில் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • பொய்யாக வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றி தி.மு.க. ஆட்சியை பிடித்துள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பகண்டை கூட்டு்ரோட்டில் அ.தி.மு.க. சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் மோகன், கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ.செந்தில்குமார் முன்னாள் எம்.பி., காமராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. க்கள் பிரபு, அழகுவேலுபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் கதிர் தண்டபாணி வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் பொய்யாக வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றி தி.மு.க. ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு தி.மு.க. கொடுத்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்ற ப்படவில்லை. குறிப்பாக அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப், மகளிருக்கு விலையில்லா ஸ்கூட்டர் போன்ற பல்வேறு திட்டங்களை தி.மு.க.அரசு ரத்து செய்துள்ளது.

    மின்கட்டணத்தை குறைப்பதாகவும், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வசூலிக்கப்படும் மின் கட்டணத்தை மாதந்தோறும் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி ஆட்சியைப் பிடித்த தி.மு.க. அரசு தற்போது மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதனால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 500 முதல் 1000 ரூபாய் வரை மின் கட்டணம் உயரும். இதுதவிர விலைவாசியும், பஸ் கட்டணமும் உயரபோகிறது. ஆகவே உடனடியாக மக்களை வஞ்சிக்கும் மின்கட்டண உயர்வை தி.மு.க. அரசு வாபஸ் பெற வேண்டும் என மாவட்ட செயலாளர் குமரகுரு பேசினர். முன்னதாக உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்பப்பெற வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் அருணகிரி, துரைராஜ், தேவேந்திரன், நகர செயலாளர் பாபு மற்றும் கூட்டுறவு சங்க நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கவுன்சிலர் மணிகண்டன் நன்றி கூறினார்.

    Next Story
    ×