என் மலர்
கள்ளக்குறிச்சி
- கள்ளக்குறிச்சி அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபர் உயிருடன் மீட்கப்பட்டார்.
- தண்ணீர் பெருக்கெடுத்து வருவதால் கால்வாயில் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே மூங்கில்துறைப்பட்டு அருகே மேல்சிறுவள்ளூரில் உள்ள வாய்க்காலில் கை, கால்களை கழுவுவதற்காக திருவண்ணாமலை மா வட்டம் இளையாங்கண்ணி கிராமத்தை சேர்ந்த சின்னப்பராஜ் (வயது 22) என்பவர் இறங்கியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டார். இது குறித்த தகவலின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று சின்னப்பராஜை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணிக்காக சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்து வருவதால் கால்வாயில் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது.
இதனிடையே இரவு வெகு நேரம் ஆனதால் சின்னப்பராஜை தேடும் பணி தற்காலிகமாக நிறுத்த ப்பட்டது. இதையடுத்து 2-வது நாளாக நேற்று மீண்டும் தேடும் பணியில் மீட்டனர். இந்த நிலையில் வடசிறுவள்ளூரில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தட்டாரணை பகுதியில் மாலை 5 மணி அளவில் சின்னப்பராஜ் ஒரு மரக்கிளையை பிடித்தவாறு உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்து மீட்டனர். இதையடுத்து அவரை சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கால்வாய் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட வாலிபர் 25 மணி நேரத்துக்கு மீட்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- சங்கராபுரம் பகுதியில் சாராயம் காய்ச்சிய கும்பல் கைது செய்யப்பட்டனர்.
- 3 பேரும் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடினர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம்சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசி ம்மஜோதி தலை மையிலான போலீசார் நெடுமானூர் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த செல்வம் (45) என்பவர் தனது வீட்டின் அருகே சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதைபார்த்த போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். சங்கராபுரத்தை சேர்ந்த வள்ளி (50) என்பவரை சாராயம் விற்றதாக கைது செய்து அவரிடமிருந்து 8 லிட்டர் சாராயத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதே போன்று ரிஷிவந்தியம் அடுத்த தொ ண்டனந்தல் வனப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக, பகண்டைகூட்டுரோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா தலைமையிலான போ லீசார் தொண்டனந்தல் வனப்பகுதியில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மையனூர்கிராமத்தை சேர்ந்த ஜான்பீட்டர், சைமன்லூர்துசாமி (30), விரியூரை சேர்ந்த டேவிட்குமார் (30) ஆகியோர் ஊறல் போட்டு சாராயம் காய்ச்சிக்கொண்டிருந்தது தெரிந்தது. அவர்கள் 3 பேரும் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடினர். இருப்பினும் போலீசார் துரிதமாக செயல்பட்டு சைமன்லூர்துசாமி, டேவிட்குமார் ஆகிய 2 பேரை மட்டும் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 15 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். மற்றும் அங்கிருந்த சாராய ஊறலை கைப்பற்றி கீழே கொட்டி அழித்தனர். தப்பி ஓடிய ஜான்பீட்டரை தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட வரதப்புனூர் கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி (வயது 41). கல் உடைக்கும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கொளஞ்சி தனது இருசக்கர வாகனத்தில் பாபு என்பவரை உட்கார வைத்துக்கொண்டு அருகில் உள்ள பெரிய சிறுவத்தூர் கிராமத்திற்கு சொந்த வேலை காரணமாக சென்று உள்ளார். பின்னர் வேலையை முடித்துக் கொண்டு மீண்டும் வரதப்புனுர் கிராம நோக்கி வந்து கொண்டிருக்கும் பொழுது பெரிய சிறுவத்தூர்கொளஞ்சி ஒட்டி வந்த இருசக்கர வாகனம் நிலைத்தடு மாறி கீழே விழுந்ததில் கொளஞ்சி என்பவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது .
பின்பு 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் உதவிக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது சம்பந்தமாக உயிரிழந்தவரின் சகோதரர் மணிகண்டன் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து சின்னசேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- எதிர்பாராதவிதமாக ஆரோக்கியதாஸ் நீரில் மூழ்கினார்.
- சப்இன்ஸ்பெக்டர் உலகநாதன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மூங்கில்துறைபட்டு அடுத்த சவேரியார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ் (46). இவர் மேல்சிறுவள்ளூரில் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வந்தார். இவர் தனது நண்பர்களுடன் மூங்கில்துறைப்பட்டு தென்பெண்ணை ஆற்றுக்கு குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆரோக்கியதாஸ் நீரில் மூழ்கினார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் உடனே மூங்கில்துறைப்பட்டு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஆற்றில் இறங்கி ஆரோக்கியதாசை தேடும் பணியில் ஈடுபட்டனர். பின் ஆரோக்கியதாசை இறந்த நிலையில் பிணமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் சப்இன்ஸ்பெக்டர் உலகநாதன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- கனியாமூர் தனியார் பள்ளி வன்முறை சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
- கலவரம் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் கலவரத்தை தூண்டும் வகையில் கருத்துக்களை பதிவு செய்து, கலவரம் ஏற்பட காரணமாக இருந்ததாக, கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே தென்சிறுவலூர் பகுதியைச் சேர்ந்த கருப்பையன் என்பவரது மகன் சூர்யா (வயது 19) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- ஜூலை 17ஆம் தேதி அன்று மிகப்பெரிய ஒரு வன்முறையாக மாறியது.
- பள்ளியில் பயின்ற 2000 -க்கும் மேற்பட்ட மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியானது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை 13-ந் தேதி மாணவி ஸ்ரீமதி மர்மமாக இறந்தார். இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரவி ஜூலை 17ஆம் தேதி அன்று மிகப்பெரிய ஒரு வன்முறையாக மாறியது. இதில் பள்ளி வளாகங்கள் முழுவதும் சேதமடைந்தது 50க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்களும், காவல்துறை வாகனங்களும், தீயில் கருகி சாம்பலாகி போனது. பள்ளியில் உள்ள அலுவலகம் வகுப்பறைகள் அனைத்தும் சூறையாடப்பட்டு சேதம் அடைந்தது. பிறகு போராட்டக்காரர்களை விரட்டி அடித்து பள்ளி வளாகம் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தது. பின்னர் இந்த வழக்கு சி பி சி ஐ டி மாற்றப்பட்டது.
பள்ளி சொத்துகளை சேதப்படுத்தியவர்களை தனிப்படை அமைத்து 350 -க்கும் மேற்பட்டவர்களை இதுவரை கைது செய்துள்ளனர். இந்த கலவரத்தால் பள்ளியில் பயின்ற 2000 -க்கும் மேற்பட்ட மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியானது மாணவர்களின் பெற்றோர் தரப்பில் பள்ளியை சீரமைத்து மீண்டும் திறக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. பின்னர் பத்து நாட்களுக்குள் சக்தி மெட்ரிக் பள்ளியை சீரமைத்து திறப்பது குறித்து முடிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன் பிறகு மாவட்ட நிர்வாகம் சார்பில் தனிப்பிரிவு அதிகாரியை நியமனம் செய்து அவர் தலைமையில் பள்ளியை 45 நாட்களுக்குள் சீர் அமைக்க உத்தரவிட்டது. இந்நிலையில் 68 நாட்களுக்குப் பிறகு பள்ளி சீரமைக்கப்படும் பணி தொடங்கப்பட்டது. இன்று காலை 6 மணி முதலே சீரமைக்கும் பணி தொடங்கியது பள்ளி கட்டிடங்கள், சேதம் அடைந்த பேருந்துகள், சேதமடைந்த மரங்கள், பள்ளியில் உள்ள சேதமடைந்த பொருள்கள், என அனைத்தையும் அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது இதில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
- விவசாய நிலத்தில் அரிய வகை விலங்கு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
- மரநாயை வலை கட்டி பிடிக்க முயற்சி செய்தார்கள். வலையில் சிக்காமல் அங்கிருந்து ஓடியது.
கள்ளக்குறிச்சி:
சின்னசேலம் அருகே கனியாமூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவருடைய விவசாய நிலத்தில் அரிய வகை விலங்கு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே விஜயகுமார் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினருக்கு அது மரநாய் என்பது தெரிய வந்தது. இது அடுத்து மரநாயை வலை கட்டி பிடிக்க முயற்சி செய்தார்கள். வலையில் சிக்காமல் அங்கிருந்து ஓடியது. இதனால் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிக்கியது. இதையடுத்து வனக் குழுவினர் அந்த மரநாயை பாதுகாப்பாக எடுத்துச் சென்று வலை கொட்டலாம் காப்பு காட்டு பகுதியில் விட்டனர்.
- போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.
- அவர்களிடம் இருந்து மொத்தம் 500 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பசலைராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது வெவ்வேறு இடங்களில் தனித்தனியாக சாராயம் விற்றதாக மூலக்காடு கிராமத்தை சேர்ந்த குமார் (வயது49), ஆனைமடுவு ஆனந்தன் (28), புளியங்கோட்டைபிரபு (31), ஏழுமலை (34) மற்றும் கொடியனூர் வெள்ளையன் (40) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மொத்தம் 500 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
- தனியார் ரைஸ் மில் வளாகத்தில் தண்ணீர் இறக்க பயன்படுத்தி வந்த மோட்டாரை மர்ம நபர் திருடிச் செல்ல முயன்றார்.
- மின் மோட்டாரை திருட முயன்றதும் தெரியவந்தது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே பெருவங்கூர் சாலையில் தனியார் ரைஸ் மில் வளாகத்தில் தண்ணீர் இறக்க பயன்படுத்தி வந்த மோட்டாரை மர்ம நபர் திருடிச் செல்ல முயன்றார். அப்போது அங்கிருந்த தனியார் மில் மேலாளர் வெங்கடேசன் என்பவர் அந்த மர்ம நபரை பிடித்து கள்ளக்குறிச்சி போலீசில் ஒப்படைத்தார். தொடர்ந்து போலீசார் மர்ம நபரை விசாரித்த போது அவர் தியாகதுருகம் அருகே பானையங்கால் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் (வயது 33) என்பதும், அவர் மின் மோட்டாரை திருட முயன்றதும் தெரியவந்தது. இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவகுமாரை கைது செய்தனர்.
- ஏரியில் மணல் அள்ளுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
- அனுமதி பெறாமல் லாரியில் பொக்லைன் எந்திரம் மூலம் மணல் அள்ளிக்கொண்டிருந்தது தெரிய வந்தது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா நைனா குப்பம் ஏரியில் மணல் அள்ளுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் விழுப்புரம் உதவி புவியாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் அலுவலக ஊழியருடன் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து பார்த்தார். அப்போது அனுமதி பெறாமல் லாரியில் பொக்லைன் எந்திரம் மூலம் மணல் அள்ளிக்கொண்டிருந்தது தெரிய வந்தது. அதிகாரிகள் வருவதை பார்த்து பொக்லைன் எந்திரம் மற்றும் லாரியை அங்கேயே விட்டுவிட்டு டிரைவர்கள் தப்பி விட்டனர். அவற்ைற எடுத்து வந்து உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
- கள்ளக்குறிச்சியில் பா.ஜ.க. சுவரொட்டியை கிழித்த 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- தினேஷ்பாபுவை தாக்கி கொலை மிரட்டல் கொடுத்ததாக கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி பசுங்காயமங்கலம் பகுதியைச் சேர்ந்த செந்தில் மகன் தினேஷ் பாபு (வயது 29), இவர் கச்சிராயபாளையம் சாலையில் கிருபா எலெக்ட்ரிக்கல்ஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று தனது கடை முன்பு ஒட்டப்பட்டிருந்த பாஜகவின் சுவரொட்டி கிழித்துள்ளார். அப்போது பாஜக மாவட்ட செயலாளர் பாலசுந்தரம், பா.ஜ.க. ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் மகேந்திரன் மற்றும் 8 பேர் சம்பவ இடத்திற்கு சென்று தினேஷ்பாபுவை தாக்கி கொலை மிரட்டல் கொடுத்ததாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் சமாதானம் செய்து கொண்டிருந்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் பீர் பாட்டிலை கடை போர்டின் மீது வீசித் தாக்கினார். இதில் பீர் பாட்டில் உடைந்து சிதறி ஓடியது.
இது குறித்து கள்ளக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் பழனிவேல் (39) கொடுத்த புகாரின் பேரில் பா.ஜ.க. நகரத் தலைவர் சத்யா, மற்றும் சங்கராபுரம் அருகே அவிரியூர் கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பன் ஆகிய 2 பேர் மீதும் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் பாஜக நகர தலைவர் சத்யா கொடுத்த புகாரின் பேரில் தினேஷ் பாபு, அவரது சித்தப்பா மற்றும் பாலசுந்தர் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாஜகவினர் அனுமதி இல்லாமல் ஒட்டப்பட்ட சுவரொட்டியை கடைஉரிமையாளர் கிழித்த சம்பவம் குறித்து தனித்தனியாக 3 பேர் கொடுத்த புகாரின் பேரில் 15 பேர் மீது வழக்கு பதிவு செய்து, பா.ஜ.க. நிர்வாகிகள் 2 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் கள்ளக்குறிச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- தியாகதுருகத்தில் குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
- சம்பந்தப்பட்ட பேரூராட்சி அதிகாரியிடம் பேசி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் பேரூராட் சிக்கு உட்பட்ட பகுதியில் ரிஷிவந்தியம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக தியாகதுருகம் பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறி, தியாகதுருகம் கடைவீதி பேருந்து நிறுத்தத்தில் சுமார் 10- க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமை யிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது சம்பந்தப்பட்ட பேரூராட்சி அதிகாரியிடம் பேசி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். அதனை ஏற்று சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் 5 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து பேரூராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில் ரிஷிவந்தியம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் சுந்தரேசபுரம் பகுதியில் குடிநீர் செல்லும் இரும்பு பைப் லைனில் பழுது ஏற்பட்டதாகவும். அதனை சரி செய்யும் பணி நிறை வடைந்துள்ளது. நாளை முதல் தியாகதுருகம் பகுதி யில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என கூறி னார்.






