என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டிருந்த ஆறுமுகம் மற்றும் உதயசூரியன் ஆகியோர் வீடுகளில் மொத்தம் 110 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் வடகனந்தல் ஊரைச் சேர்ந்த தோப்புத் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 56). இவர் தனது வீட்டின் அருகில் கள்ள சாராயம் வைத்து விற்பனை செய்வதாக கச்சிராயபாளையம் போலீசருக்கு தகவல் வந்தது. அதன்படி சப்இன்ஸ்பெக்டர் ராமர் வடக்கனந்தல் தோப்புத் தெருவில் உள்ள ஆறுமுகம் வீட்டுக்கு சென்று சோதனை செய்தனர.

    அப்போது அருகில் 2 லாரி டியூப்பில் 55 லிட்டர் கள்ள சாராயம் வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதேபோல் வடக்க நந்தல் கடை தெரு போகும் பாதையில் உதயசூரியன் அவர் தனது வீட்டின் அருகில் கள்ள சாராயம் வைத்து விற்பனை செய்து வருகிறார் என்ற தகவல் கச்சிராயபாளையம் போலீசாருக்கு தெரியவந்தது.

    அதன் அடிப்படையில் கச்சிராயபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்ர் ஏழுமலை கடைத்தெரு போகும் பாதை உதயசூரியன் வீட்டிற்கு சென்று சோதனைசெய்தனர்.

    அங்கு 2 லாரி டியூப்பில் 55 லிட்டர் கள்ள சாராயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டிருந்த ஆறுமுகம் மற்றும் உதயசூரியன் ஆகியோர் வீடுகளில் மொத்தம் 110 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. பிறகு ஆறுமுகம், உதயசூரியன் ஆகிய 2 பேரை கைதுசெய்தனர்.

    • கைப்பையில் 3 பவுன் தங்க நகை மற்றும் 9 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை மர்ம நபர் ஒருவர் திருடி சென்றது தெரிய வந்தது.
    • பெரம்பலூர் மாவட்டம் சிறுநிலா கிராமத்தை சேர்ந்த சையத் நபி மகன் நவுசாத் அலி என்பவர் திருடியது போலீசாருக்கு தெரிய வந்தது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள வி. மாமந்தூர் கிராமத்தை சேர்ந்த கண்ணன்.அவரது மனைவி பூங்கோதை (வயது 37). இவர் தனியார் மகளிர் சுய உதவி குழுவில் வேலை பார்த்து வருகிறார்.இவர் கடந்த ஜூலை மாதம் 28-ந் தேதி அன்று தனியார் பஸ்சில் சின்னசேலம் செல்வதற்கு பேருந்தில் ஏறி உள்ளார். அப்பொழுது அவர் வைத்திருந்த கைப்பையில் 3 பவுன் தங்க நகை மற்றும் 9 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை மர்ம நபர் ஒருவர் திருடி சென்றது தெரிய வந்தது.

    பஸ் முழுவதும் தேடியும் கிடைக்காததால் சின்னசேலத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கை பதிவு செய்து திருடியவர் யார் என்று போலீசார் தேடி வந்தனர்.

    அப்பொழுது அந்த பேருந்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது அதில் பெரம்பலூர் மாவட்டம் சிறுநிலா கிராமத்தை சேர்ந்த சையத் நபி மகன் நவுசாத் அலி என்பவர் திருடியது போலீசாருக்கு தெரிய வந்தது. பின்பு திருடிய நபரை போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த நகையும் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • ரிஷிவந்தியத்தில் கழிவுநீர் கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
    • கால்வாயை தூர்வார முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ஷிவந்தியம் வடக்கு தெரு பகுதியில் கழிவுநீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டது. இதனால் கழிவுநீர் தேங்கி நின்றதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இந்த நிலையில் கழிவு நீர் கால்வாயை ஆக்கிரமித்து சிலர் சிமெண்டு சிலாப் மூலம் மூடி பயன்படுத்தி வந்தனர். இதனால் கால்வாயை தூர்வார முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. 

    இதையடுத்து ரிஷிவந்தியம் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் முருகன், ஊராட்சி மன்ற தலைவர் வினிதா மற்றும் அதிகாரிகள் வடக்கு தெருபகுதிக்கு சென்று ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி பொக்லைன் எந்திரம் உதவியுடன் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சிமெண்டு சிலாப்கள் அகற்றப்பட்டன. தொடர்ந்து கால்வாய் தூர்வாரும் பணிகள் தொடங்கியது.

    • சங்கராபுரம் அருகே மொபட் மர்ம நபர்களால் திருட்டுப்பட்டது.
    • சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே ராமராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சக்கரவர்த்தி மனைவி ஆனந்தி (வயது 27). இவர் தனது மொபட்டை கள்ளக்குறிச்சி மெயின் ரோட்டில் உள்ள மாவட்ட கூட்டுறவு வங்கி அருகே நிறுத்திவிட்டு சென்றார். பின் திரும்பி வந்துபார்த்தபோது, மொபட்டை காணவில்லை. அதனை மர்மநபர் திருடிச்சென்று உள்ளார். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார

    • கள்ளக்குறிச்சி சைபர் க்ரைம் காவல்நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவை மேல் விசாரணைக்காக சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
    • 5 பேர் சம்பந்தப்பட்ட புலனாய்வு குழு அதிகாரிகள் முன்பு ஆஜரானார்கள். அவர்களை போலீசார் விசாரணை செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி இறப்பு தொடர்பாக உண்மைக்கு புறம்பான பொய்யான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள்.

    இவர்கள் மீது கள்ளக்குறிச்சி சைபர் க்ரைம் காவல்நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவை மேல் விசாரணைக்காக சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

    இந்த வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் சேலம் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த நவீன் குமார் (வயது28), திருப்பூர் மாவட்டம் சாமுண்டிபுரம் பகுதியைச் சேர்ந்த வடிவேல் (38), சென்னை 7 கிணறு பகுதியைச் சேர்ந்த முகமது ஷபி (32), சிவகங்கை மாவட்டம் திருபுவனம் பகுதியைச் சேர்ந்த கோபிநாத் (22), செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (21) ஆகிய 5 பேருக்கு குற்றவியல் நடைமுறை சட்டபடி சம்மன் அனுப்பினர்.

    அதன்படி 5 பேர் சம்பந்தப்பட்ட புலனாய்வு குழு அதிகாரிகள் முன்பு ஆஜரானார்கள். அவர்களை போலீசார் விசாரணை செய்தனர். பின்னர் அவர்களை அனுப்பி வைத்தனர்.

    • சங்கராபுரம் அருகே அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி தீப்பந்தம் ஏந்திபொதுமக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பூட்டை கிராமத்தில் மணி நதி செல்லும் சாலையில் சுமார் 30 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்களுக்கு கழிவுநீர் கால்வாய், குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதையடுத்து அவர்கள் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கக்கோரி அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சாலையில் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களுக்கு உடனே அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என கோரி கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • கொலை மற்றும் தற்கொலைக்கு முயற்சித்த பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
    • கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.15,000ஆயிரம் ரூபாய் அபராதமும் அளித்து தீர்ப்பளித்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே உலகங்காத்தான் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி பரமேஸ்வரி (வயது28), இவர் சம்பவத்தன்று தனது கணவர் சுப்ரமணியன் என்பவருடன் ஏற்பட்ட குடும்ப சண்டையின் காரணமாக தனது மகள் கரிஷ்மா (9) என்பவருக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தானும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்துசுப்பிரமணியன் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் கொலை மற்றும் தற்கொலைக்கு முயற்சித்த பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் விசாரணை முடிவுற்று நேற்று கள்ளக்குறிச்சி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி கீதாராணி தீர்ப்பு அளித்தார். அதில் அரசுதரப்பில் அளித்த சாட்சியங்களின் அடிப்படையில் பரமேஸ்வரி குற்றவாளி என்று உறுதி செய்து கொலை குற்றத்திற்கு ஆயுள் தண்டனையும் தற்கொலைக்கு முயன்ற குற்றத்திற்கு ஒரு வருடம் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.15,000ஆயிரம் ரூபாய் அபராதமும் அளித்து தீர்ப்பளித்தார்.

    • சிறப்பு புலனாய்வு குழு போலீசார் 6க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்களுக்கு சம்மன் அனுப்பினர்
    • தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இணையத்தில் பலரும் கருத்து பதிவிட்டு வந்தனர். கலவரத்தை தூண்டும் வகையிலான பதிவுகள், குறிப்பிட்ட ஒரு நபர் மீது உள்நோக்கத்தோடு கருத்துக்கள் மற்றும் வீடியோ வெளியிடுவது, வதந்திகளை பரப்புவது என இருந்த 36 யூடியூப் சேனல்கள் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    அவர்கள் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது சம்பந்தமாக சிறப்பு புலனாய்வு குழு போலீசார் 6க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்களுக்கு சம்மன் அனுப்பி, விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சின்னசேலம் அருகே வைக்கோல் போர் தீயில் எரிந்து நாசமாயின.
    • சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரண்டு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் லட்சுமணபுரம் செல்லும் சாலையில் மாமந்தூர் கிராமத்தில் வசிக்கும் அய்யாதுரை. இவர் விவசாயம் செய்து வருகின்ற நிலையில் மாடுகளை பராமரித்து வருகின்றார். மாடுகள் உண்பதற்கு அய்யாதுரை வீட்டில் அருகே வைக்கோல் போர் அமைத்துள்ளார். இன்று காலை வைக்கோல் போர் திடீரென்று தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. இதை பார்த்த அய்யாதுரை உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

    பின்னர் தீயணைப்பு சிறப்பு நிலை அலுவலர் ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் உள்ள குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரண்டு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இதில் வைக்கோல் போர் முழுவதும் தீயில் எறிந்து நாசமாயின. வைக்கோல் போரை திட்டமிட்டு யாராவது தீ வைத்தாரா? அல்லது அவ்வழியே சென்றவர்கள் பீடி பற்ற வைத்து விட்டு தெரியாமல் தீக்குச்சை போட்டு விட்டார்களா? என்பது தெரியவில்லை. இந்த வைக்கோல் 250 கட்டு இருக்கும் என கூறப்படுகிறது.

    • தியாகதுருகத்தில் ஊராட்சி செயலாளர்கள் பணி மாற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • முடிவில் மாவட்ட தலைவர் கொளஞ்சிவேலு நன்றி கூறினார்.

    கள்ளக்குறிச்சி:

    கோயமுத்தூர் மாவட்டத்தில் 84 ஊராட்சி செய லாளர்கள் பணி மாற்றம் செய்யப்பட்டனர். அவ்வாறு பணி மாற்றம் செய்யப்பட்ட ஊராட்சி செயலாளர்களை மீண்டும் ஏற்கனவே பணிசெய்த இடத்திற்குமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் வீரமணி தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் கணேசன், பொருளாளர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட செயலாளர் சந்திர சேகர், மாவட்ட இணை செயலாளர் தயாபரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திராணி, நிர்வாகி கள் மணிமொழி, லோகேஸ்வரி, அமுதா, பொற்செல்வி, செல்வராஜ், சுதாகர் சீனுவாசன், மாணிக்கம், சங்கீதா, செல்வி வைத்திநாதன், செல்வம், குப்புசாமிஉள்ளிட்ட அலுவலர்கள் பலரும் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட தலைவர் கொளஞ்சிவேலு நன்றி கூறினார்.

    • மூங்கில்துறைப்பட்டு அருகே மல்லாபுரத்தில் உள்ள ஒரு வேப்பமரத்தில் ராஜா பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.
    • கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பாவளம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 42) கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது மனைவி பூங்கொடியிடம் வெளியே சென்றுவிட்டு வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நி லையில் மூங்கில்துறைப்பட்டு அருகே மல்லாபுரத்தில் உள்ள ஒரு வேப்பமரத்தில் ராஜா பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.

    இது குறித்த தகவலின் பேரில் வடபொன்பரப்பி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பசலைராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் ராஜா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை யாரேனும் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நம்பிய அவர் தான் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் நகையை கழட்டி அவர்களிடம் கொடுத்தார்.
    • சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பழையனூர் கிராமத்தை சேர்ந்தவர் சார்லஸ். இவரது மனைவி விமலா கிரேசி இவர் வீட்டின் வெளியே அமர்ந்து இருந்தபோது அங்கு வந்த மர்மநபர்கள் 2 பேர் நாங்கள் நகைகளை பாலீஷ் போடும் தொழில் செய்து வருகிறோம். எனவே உங்களிடம் நகை இருந்தால் கொடுங்கள் அதனை நாங்கள் புதியது போன்று பாலீஷ் போட்டு தருகிறோம் என விமலா கிரேசியிடம் கூறியுள்ளனர். இதனை நம்பிய அவர் தான் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் நகையை கழட்டி அவர்களிடம் கொடுத்தார்.

    அப்போது நகையை பாலீஷ் போடுவது போல் நடித்த அவர்கள் விமலா கிரேசியின் கவனத்தை திசை திருப்பிவிட்டு நகையை திருடி தப்பிச்சென்றனர். இதன் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    ×