என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்க ச்சாவடி பணியாளர்கள் 28பேர் பணி நீக்கம், ஆள் குறைப்பு செய்யப்பட்டனர்.
    • சுங்க சாவடி அனைத்து ஊழியர்கள் சேர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூ ர்பேட்டை சுங்க ச்சாவடி பணியாளர்கள் 28பேர் பணி நீக்கம், ஆள் குறைப்பு செய்யப்பட்டதை கண்டித்து 100-க்கும் மேற்பட்ட சுங்க சாவடி அனைத்து ஊழியர்கள் சேர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சென்னை-திருச்சி செல்லும் வாக னங்கள் அனைத்தும் பணம் வழங்காமல் சுதந்திரமாக செல்கிறது.

    அதோடு மட்டும ல்லாமல் ஊழியர்களை பேச்சு வார்த்தைக்கு அழைக்காமல் இருப்பதால் அங்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் தலைமை யில் 50-க்கும் போலீசார் மேற்பட்டோர் குவித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுங்கச்சாவடி பணியா ளர்கள் அனைவரும் 15 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கதாகும்.

    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் அதே பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்துள்ளார்.
    • நீதிபதி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பரசுராமனுக்கு 5-ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் அருகே தேவியானந்தல் பகுதியைச் சேர்ந்தவர் பரசுராமன் (வயது 55) . கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் அதே பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்துள்ளார். இதனை அடுத்து சிறுமியின் தாய் உளுந்தூ ர்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜி வழக்கு பதிவு செய்து பரசுராமனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    பரசுராமனின் மீதான வழக்கு விழுப்புரம் நீதிமன்ற த்தில் நிலுவையில் இருந்தது. தற்போது இந்த வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்திற்கு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில் இதனை விசாரித்த நீதிபதி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பரசுராமனுக்கு 5-ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தார். இதனை அடுத்து அபராத தொகை 10,000 கட்ட தவறினால் கூடுதலாக 3 மாதம் சிறை தண்டனை விதித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீட்டு தொகையாக ரூ. 4 லட்சம் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

    • கழிவறையை அலுவ லகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
    • செப்டிக் டேங்க் முழுவதும் நிரம்பி மனித கழிவு நீர் அதிக அளவில் வெளியேறி வருகிறது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் இயங்கி வரு கிறது. இதில் சின்ன சேலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பொது மக்கள் வந்து செல்கின்ற னர். கட்டிட த்தின் பின்புறம் செப்டிக் டேங்க் ஒன்று உள்ளது. ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் உள்ள கழிவறைகளில் இருந்து கழிவு நீர் அந்த செப்டிக் டேங்குக்கு செல்கிறது. இந்த கழிவறையை அலுவ லகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். கழிவறையில் இருந்து வரும் கழிவு நீர் செப்டிக் டேங்கில் வந்து சேர்கிறது. இந்நிலையில் செப்டிக் டேங்க் முழுவதும் நிரம்பி மனித கழிவு நீர் அதிக அளவில் வெளியேறி வருகிறது. இதனால் நோய் பரவும் அபாயமும் சுகாதார கேடு ஏற்படவும் அதிக அளவு வாய்ப்புள்ளது.

    அதுமட்டுமில்லாமல் இந்த செப்டிக் டேங்க் அருகில் தீயணைப்பு துறை உள்ளது தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு நிலையத்துக்கு செல்ல வேண்டுமென்றால் செப்டிக் டேங்கில் இருந்து வெளியேறும் கழிவுநீர்களை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் சின்னசேலம் பகுதியில் ஏற்படும் விபத்து களை தடுக்க செல்லும் தீயணைப்பு வீரர்களுக்கு மிகவும் இடைஞ்சலாக இருந்து வருகிறது அந்த மனித கழிவுநீர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என பொது மக்கள் எதிர்பார்க்கின்ற னர்.

    • சின்னசேலம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி மாயமானார்.
    • தாய் மாயமான தகவல் ரமேஷுக்கு தெரிவிக்க ப்பட்டு அவர் மேலூர் கிராமத்திற்கு வந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள மேலூர் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய தாய் ஜோதி என்கின்ற பழனியம்மாள் (வயது 67), தந்தை இருவரும் மேலூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ரமேசின் தாய் பழனியம்மாள் மூதாட்டி மாயமானார். இவர் கடந்த 30 வருடங்க ளாக மனநலம் பாதிக்கப்பட்டு வாழ்ந்து வந்ததாக கூறப்படு கின்றது. பிறகு தாய் மாயமான தகவல் ரமேஷுக்கு தெரிவிக்க ப்பட்டு அவர் மேலூர் கிராமத்திற்கு வந்தார்.தன்னுடைய தாயை பல இடங்களில் தேடிப் பார்த்தார் எங்கும் கிடைக்காததால் போலீஸ் நிலையத்தில் தன்னுடைய தாயை கண்டுபிடித்து தருமாறு புகார் மனு கொடுத்தார். ரமேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டியை போலீசார் தேடி வருகின்றனர்.

    • மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் அடையாள அட்டை வழங்கப்பட்டது.
    • தரமான சிகிச்சை வழங்க ப்படுவதை உறுதி செய்திட அறிவுறுத்தப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டம் ஆண்டு விழா மற்றும் ஆய்வுக்கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி ஆரோக்கிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திடத்தில் கடந்த ஓராண்டிற்கு மேலாக 3,067 நபர்களுக்கு ரூ.1,98,31,997 மதிப்பீட்டில் மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, இத்திட்டத்தின்கீழ் பல்வேறு அறுவை சிகிச்சைகள் வாயிலாக குணமடைந்த 5 நபர்களுக்கு சிகிச்சை குறித்தும் உடல்நலம் குறித்தும் கேட்டறிந்து, பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், 5 நபர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் அடையாள அட்டை வழங்கப்பட்டது. இத்திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய இரண்டு திட்ட ஒருங்கிணை ப்பாளர்களுக்கு பாராட்டு கேடயம் வழங்கி, தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிட அறிவுறுத்தப்பட்டது. மேலும், இத்திட்ட த்தின்கீழ் பயன்பெற அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அல்லாதோர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் செயல்படும் காப்பீட்டுத்திட்ட மையத்தில் பதிவு செய்து, மருத்துவக் காப்பீட்டு அட்டை பெற்று பயன்பெறலாம்.

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி ஆரோக்கிய திட்டம் செயல்படுத்தப்படும் 22 அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் மற்றும் அனைத்து அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை வழங்க ப்படுவதை உறுதி செய்திட அறிவுறுத்தப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட தனி யார் மருத்துவமனைகளில் காப்பீட்டுத் திட்டத்தில் அரசு நிர்ணயித்துள்ள தொ கையில் பொதுமக்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். மேலும், மருத்துவமனைகளில் காப்பீடு குறித்த விபரங்கள் அடங்கிய தகவல் பலகையை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இத்திட்டம் தொடர்பாக அவ்வப்போது, இணை இயக்குநர் சுகாதாரப் பணிகள், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில், இணை இயக்குநர் மருத்துவப் பணிகள் மரு.பாலச்சந்தர், தேசிய சுகாதார குழும ஒருங்கிணைப்பாளர் மரு.செந்தில், திட்ட ஒருங்கிணைப்பாளர்சோ.சாமிநாதன், மாவட்ட கருவூல அலுவலர் திரு.இளங்கோ பிரபு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

    • கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வருகிறது.
    • இணையதளம் வாயிலாக இளங்கலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: 

    கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது மத்திய அரசு பணியாளர்த் தேர்வாணையம் 20,000 பணியிடங்களுக்கான உதவி தணிக்கை அதிகாரி, உதவி பிரிவு அலுவலர், வருமான வரி ஆய்வாளர், உதவி ஆய்வாளர் பணியிடத்திற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்காலியி டங்களுக்கு http://ssc.nic.in என்ற இணையதளம் வாயிலாக இளங்கலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    இத்தேர்விற்கு விண்ணபிக்க வருகின்ற 08.10.2022 கடைசி தேதி ஆகும். அதனை தொடர்ந்து, இத்தேர்விற்கு தயாராகும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த போட்டித் தேர்வர்கள் பயனடையும் வகையில் இலவச பயிற்சி வகுப்புகள் 06.10.2022 வியாழக்கிழமை முதல் வார நாட்களில் காலை 10 மணி முதல் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தொடங்கப்பட உள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், SSC Combined Graduate Level தேர்விற்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல், புகைப்படம், மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் கள்ளக்குறிச்சி, 18/63, நேப்பால் தெருவில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்புக் கொண்டு தங்களின் விவரத்தினை தெரிவித்து பதிவுசெய்து கொள்ளலாம். என அதில் கூறப்பட்டுள்ளது.

    • நேற்று முருகனின் மனைவி சரிதா வீட்டின் முன் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.
    • படுகாயம் அடைந்த சரிதா இது குறித்து திருநாவலூர் போலீசில் புகார் தெரிவித்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா கோட்டியாம் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி (வயது 45) விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது மனைவி அலமேலு. இவர்களுக்கும் அருகிலுள்ள முருகன் வீட்டாருக்கும் இடையே முன்னதாகவே இடப்பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முருகனின் மனைவி சரிதா வீட்டின் முன் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது குப்புசாமியின் மனைவி அலமேலு வந்து ஏன் என் வீட்டின் முன் வேலை செய்கிறாய் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டார். இதனால் சரிதா மற்றும் அலமேலுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவருக்கொருவர் தகாத வார்த்தையால் திட்டிக் கொண்டனர்.

    அப்போது அங்கு வந்த குப்புசாமி மனைவி அலமேலுடன் முருகனின் மனைவி சரிதாவை தகாத வார்த்தையால் திட்டி அடித்து உதைத்து கீழே தள்ளினார். இதில் படுகாயம் அடைந்த சரிதா இது குறித்து திருநாவலூர் போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் திருநாவலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிமேகலை வழக்கு பதிவு செய்து குப்புசாமி கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலை மறைவாக உள்ள அலமேலுவை வலைவீசி தேடி வருகின்றனர். 

    • கள்ளக்குறிச்சி செல்வதாக கூறிச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
    • அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே வாழவந்தான்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீத்தாராமன் மகன் நாராயணன் (வயது 24) விவசாயி, இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரேவதி (20) என்பவருக்கும் கடந்த 7-ந் தேதி திருமணம் நடைபெற்றது.

    சம்பவத்தன்று கள்ளக்குறிச்சி செல்வதாக கூறிச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது கணவர் நாராயணன் தியாகதுருகம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    • தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • 4 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் புதிய செல்போன்களை உடனடியாக வழங்க வேண்டும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் கொளஞ்சியம்மாள் தலைமை தாங்கினார். மாவட்டத் துணைத் தலைவர்கள் இந்திராகாந்தி, ஷீலாராணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலா, கவுசல்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பிரேமா தொடக்க உரை ஆற்றினார்.

    ஆர்ப்பாட்டத்தில் சிலிண்டருக்கான முழுத் தொகையை வழங்க வேண்டும், இல்லையெனில் வருடத்திற்கு 4 சிலிண்டரை அரசே வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். பணி இடமாறுதலை வழங்க வேண்டும். அங்கன்வாடி பணியாளர்களுக்கு செல்போன் கொடுத்து 4 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் புதிய செல்போன்களை உடனடியாக வழங்க வேண்டும். 15 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் மையத்தை ஒன்றோடு ஒன்று இணைக்கும் திட்டத்தை கைவிட்டு உணவு செலவுகளை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து இந்திய தொழிற்சங்க சங்க மைய மாவட்டத் தலைவர் விஜயகுமார், மாவட்ட செயலாளர் செந்தில், மாவட்ட பொருளாளர் வீராசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ஜெயந்தி நன்றி கூறினார்.

    • காவ்யா தனது தாய் கண்டித்ததால் மனமுடைந்து விஷத்தை எடுத்து குடித்துள்ளார்.
    • மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே திம்மனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் காவ்யா (20). இவர் வீட்டில் வீட்டு வேலை செய்யாமல் இருந்து வந்துள்ளார். இதை அவரது தாய் கண்டித்ததால் மனமுடைந்த காவ்யா விஷத்தை எடுத்து குடித்துள்ளார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சங்கராபுரம் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி காவ்யா பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • உளுந்தூர்பேட்டை அருகே பு.மாம்பாக்கம் ரெயில்வே மேம்பாலத்தில் இன்று அதிகாலை 2 மணி அளவில் கார் வந்து கொண்டிருந்தது.
    • கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி மேம்பாலத்தில் தடுப்பு கட்டையில் மோதி 20 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.

    உளுந்தூர்பேட்டை:

    சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் உஷேன் அவரது மனைவி ஷமீம் (வயது 50). இவர் தனது மகன் அம்ரீன் (22), உறவினர் மகன் சுபேதா (21), உறவினர் நசீம் ஆகியோருடன் திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    நேற்று இரவு அவர்கள் சென்னை நோக்கி காரில் புறப்பட்டனர். இந்த காரை சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த டிரைவர் ஏஜாஷ் ஓட்டினார்.

    இந்த கார் இன்று அதிகாலை 2 மணி அளவில் உளுந்தூர்பேட்டை அருகே பு.மாம்பாக்கம் ரெயில்வே மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. தறிகெட்டு ஓடிய அந்த கார் மேம்பாலத்தில் தடுப்பு கட்டையில் மோதி 20 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஷமீம், அம்ரீன், சுபேதா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.

    இவர்கள் தவிர கார் டிரைவர் ஏஜாஷ், நசீம் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் வலியால் துடித்தனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்தனர். தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன், சப்-இன்ஸ்பெக்டர் அருள் செல்வம், ஏட்டு சரவணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

    விபத்தில் பலியான 3 பேர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். விபத்தில் காயம் அடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடந்த சிலநாட்களாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
    • இதனை பார்த்த பேரரசு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தகரை கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசாமி (வயது 39) இவருக்கு மனைவியும், ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். கடந்த சிலநாட்களாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்றும் 2 பேருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. .இதை பார்த்த அவரது மகன் பேரரசு தினமும் இப்படி பிரச்சனை செய்து கொண்டிருக்கிறாயே என்று ஆவேசப்பட்டு அருகில் இருந்த கட்டியை எடுத்து துரைசாமியின் தலையில் ஓங்கி அடித்தார். இனிமேல் அம்மாவிடம் தகராறு ஈடுபட்டால் இந்த கட்டையால் தாக்கினார். இதில் துரைசாமி படுகாயம் அடைந்தார். இதனை பார்த்த பேரரசு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    படுகாயம் அடைந்த துரைசாமியை உறவினர்கள் மீட்டு சின்ன சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு அங்கிருந்து கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பிறகு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். துரைசாமியின் அக்கா சுமதி கொடுத்த புகாரின் அடிப்படையில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    ×