என் மலர்
கள்ளக்குறிச்சி
- மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வீட்டில் தூங்கினார்.
- திருடு போன மோட்டார் சைக்கிளின் மதிப்பு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி எம்.ஆர்.என், நகரில் வசித்து வருபவர் செல்வராசு (வயது 33). இவர் சம்பவத்தன்று தனது வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வீட்டில் தூங்கினார். அதிகாலை எழுந்து பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து செல்வராசு கள்ளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருடு போன மோட்டார் சைக்கிளின் மதிப்பு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம்.
- கள்ளக்குறிச்சி அருகே டிப்ளமோ படித்த மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
- வெங்கடேசன் கடந்த 2-ந்தேதி காலை வீட்டிலிருந்து வெளியேறினார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே வீரசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் வெங்கடேசன் (வயது 23). இவர் டிப்ளமோ முடித்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அவரது தந்தை கண்ணன் மகன் வெங்கடேசனிடம் படித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் ஏன் வீட்டில் இருக்கிறாய் என கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த வெங்கடேசன் கடந்த 2-ந்தேதி காலை வீட்டிலிருந்து வெளியேறினார். மீண்டும் மாலை வீடு திரும்பியவர் வாந்தி எடுத்துள்ளார். அப்போது வீட்டில் இருந்தவர்கள் அவரை விசாரித்த போது எலி பேஸ்ட் சாப்பிட்டு விட்டதாக கூறினார்.
உடனடியாக வெங்கடேசனை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவகல்லூரி ஆஸ்ப த்திரியில் சிகிச்சை க்காக சேர்த்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை வெங்கடேசன் இறந்துவிட்டார். இது குறித்து அவரது தந்தை கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக சந்திரசேகர் பணிபுரிந்து வருகிறார்.
- உயர் போலீஸ் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் சந்திரசேகர். இவர் சாராய வியாபாரிகளிடம் ரகசிய தொடர்பு வைத்துக்கொண்டு, அவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு உடந்தையாக இருந்து வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவனுக்கு புகார் வந்தது.
இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் உயர் போலீஸ் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இன்ஸ்பெக்கடர் சந்திரசேகர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
- கொள்ளையர்கள் சுமார் 50 லட்சம் மதிப்புள்ள தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.
- கொள்ளை சம்பவம் குறித்து திருக்கோவிலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
கள்ளக்குறிச்சி:
திருக்கோவிலூர் வடக்கு வீதியில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் குமார் 5 பேர் கொண்ட கொள்ளை கும்பல் கடந்த மாதம் 15-ம் தேதி நள்ளிரவில் கேஸ் வெல்டிங் மூலம் 3-வது மாடியில் உள்ள கடையின் இரும்பு கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் சுமார் 50 லட்சம் மதிப்புள்ள தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர். லாக்கரை உடைக்கும் அளவுக்கு கேஸ் தீர்ந்து விட்ட காரணத்தினால் லாக்கரில் இருந்த பல கோடி மதிப்பிலான நகைகள் அதிர்ஷ்டவசமாக தப்பின. இந்த சம்பவம் திருக்கோவிலூரில் உள்ள மற்ற நகைக்கடைக்காரர்களையும் வட்டிக்கடை க்கார ர்களையும் பெரும் பீதிக்கு உள்ளாக்கியது.
அதேபோல் பொது மக்களும் கொள்ளை நடந்த விதம் கொள்ளையர்கள் பயன்படுத்திய உபகரணங்கள் அவற்றைக் கண்டு அச்சத்திற்கு உள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து திருக்கோவிலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு, சப் இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீஸ்சாருக்கு கிடைத்த ரகசிய தகவல் படி கொள்ளையர்களை தேடி மகாராஷ்டிரா மாநிலம் சென்றனர்.
திருக்கோவிலூரில் கொள்ளை அடித்த கொள்ளையர்களின் ஊருக்கே சென்று கொள்ளையர்களை பிடிக்க முயன்ற நிலையில் திருக்கோவிலூர் போலீசார் இங்கு வந்து விட்டனர் என்பதை அறிந்த கொள்ளையர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிவிட்டனர். இதனால் போலீசார் கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் வெறும் கையுடன் திரும்பினர். இந்த கொள்ளை சம்பவத்தில் குற்றவாளிகளை கண்டறிய போலீசாருக்கு கிடைத்த மிகப்பெரிய துப்பு சந்தேகத்திற்குரிய ஒரு செல்போன் நம்பர் ஆகும். அந்த செல்போன் மூலம் அடுத்தடுத்து போலீசார் எடுத்த நடவடிக்கையின் காரணமாக பீகார் ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு போலீசார் விரைந்தனர்.
இறுதியாக முக்கிய குற்றவாளி மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவன் என்பது உறுதி செய்யப்படவே திருக்கோவிலூர் போலீசார் தீரன் சினிமா படபாணியில் மாறுவேடத்தில் சென்று குற்றவாளிகளை மடக்கிப் பிடிக்க முயன்றனர். ஆனால் எதிர்பாராத வகையில் மாறுவேடத்தில் வந்திருந்த திருக்கோவிலூர் போலீசாரை அடையாளம் கண்டுவிட்ட கொள்ளையர்கள் தப்பி விட்டனர். இருந்த போதும் கொள்ளையர்களை சரியாக அடையாளம் கண்டு மகாராஷ்டிரா மாநிலம் சென்ற போலீசாரின் வருகை கொள்ளையர்களின் சொந்த ஊர் மக்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
ஜார்க்கண்ட் பீகார் மற்றும் பங்களாதேஷை சேர்ந்த நபர்களும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை வளையத்தை தீவிரபடுத்தி உள்ளனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசாரை அழைத்து குற்றவாளிகளை வியூகம் அமைத்து பிடிப்பது எப்படி என்பது குறித்து அறிவுரை வழங்கி உள்ளார். அதன் அடிப்படையில் மேலும் சில போலீசார் குற்றவாளிகளை தேடி நவீன ரக துப்பாக்கிகள் எடுத்துக்கொண்டு மேற்கண்ட மாநிலங்களுக்கு செல்ல உள்ளனர். விரைவில் குற்றவாளிகளை கைது செய்து கொள்ளை போன பொருட்களையும் மீட்டு விடுவோம் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
- 28 ஊழியர்களை டோல்கேட் நிர்வாகத்தின் சார்பில் ஆட்குறைப்பு நடவடிக்கையாக நீக்கினர்.
- அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சி சுங்கச்சாவடி மையத்தில் 125-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் 28 ஊழியர்களை டோல்கேட் நிர்வாகத்தின் சார்பில் ஆட்குறைப்பு நடவடிக்கையாக நீக்கினர். அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் தொடர்ந்து இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது.
தகவல் அறிந்த எம்.எல்.ஏ.க்கள் உதயசூரியன், மணிக்கண்ணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று டோல்கேட் நிர்வாக உரிமையாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் 3-வது நாளான இன்றும் இந்த போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் டோல்கேட் வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் தொடர்ந்து கட்டணம் இல்லாமல் சென்றனர்.
இதையொட்டி செங்குறிச்சி சுங்க சாவடியில் போலீஸ் டி.எஸ்பி. மகேஷ் தலைமையிலான 20-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பணி நீக்கம் செய்யப்பட்ட 28 ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்க்கவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். டோல்கேட் ஊழியர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகளின் சார்பில் சந்தித்து ஆதரவை தெரிவித்தனர்.
- கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் உள்ள தனது உறவினர் விஜயகுமார் வீட்டில் விட்டுச் சென்றார்.
- போலீசார் சிறுவனை விசாரித்த போது சிறுவன் மணலூர்பேட்டை என்பது தெரியவந்தது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டையை சேர்ந்த லட்சுமணன்- மற்றும் பார்வதி தம்பதி மகன் ஹரி பிரசாந்த் (வயது 5). கடந்த 2 நாட்களுக்கு முன்பு லட்சுமணன் தனது மகன் ஹரி பிரசாத்தை கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் உள்ள தனது உறவினர் விஜயகுமார் வீட்டில் விட்டுச் சென்றார். இந்நிலையில் கள்ளக்குறிச்சி கடைவீதி பகுதியில் சிறுவனைப் பார்த்த ஆட்டோ டிரைவர் ஒருவர் கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு சிறுவன் தனியாக செல்வதாக தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஹரி பிரசாந்த்தை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து போலீசார் சிறுவனை விசாரித்த போது சிறுவன் மணலூர்பேட்டை என்பதும் கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்க்கு வந்திருந்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் சிறுவனை அவரது பெற்றோர்களிடம் ஒப்ப டைக்க மணலூர்பேட்டை அழைத்துச் சென்றனர். அப்போது தகவல் அறிந்த பெற்றோர்கள் மாணவனை அழைத்துச் செல்ல தியாகதுருகம் வந்திருந்தனர். இதனை தொடர்ந்து தியாகதுருகம் காவல் நிலையத்தில் போலீசார் ஹரிபிரசாந்தை பெற்றோ ரிடம் ஒப்படைத்தனர். சிறுவனை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த சம்பவம் கள்ளக்குறிச்சி மற்றும் தியாகதுருகம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- மனைவி வீட்டிற்கு வந்து விவசாய நிலத்திற்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்து எடுத்துக் குடித்துள்ளார்.
- இதைப் பார்த்த வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்த்தனர்.
கள்ளக்குறிச்சி:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே ஆம்பூர் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார் (வயது 33) விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருக்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருநாவலூர் அருகே சிவா பட்டினம் என்ற பகுதியைச் சேர்ந்த ஜெயந்தி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. தற்போது இவர்களுக்கு ஒரு ஆண் ஒரு பெண் குழந்தை உள்ளனர். மேலும் அய்யனார் சிவா பட்டினத்தில் மனைவி வீட்டில் உள்ளார். இந்நிலையில் அய்யனார் ஆமூர்குப்பம் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு சென்று அய்யனாரின் தந்தையான சங்கரிடம் சொத்தைப் பிரித்து தருமாறு அய்யனார் கேட்டுள்ளார். அதற்கு சங்கர் சொத்தை தர மறுத்துவிட்டார்.
இதனால் மனமுடைந்த அய்யனார் சிவா பட்டினத்தில் உள்ள மனைவி வீட்டிற்கு வந்து விவசாய நிலத்திற்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்து எடுத்துக் குடித்துள்ளார். பூச்சி மருந்து குடித்தும் வெகு நேரமாகியும் ஒன்றும் செய்யவில்லையாம் இதனால் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைப் பார்த்த வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அய்யனார் பரிதாபமாக இறந்தார்.இது குறித்து தகவல் அறிந்த திருநாவலூர் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருமண நாளில் பெரியோர்கள் பல்லாண்டு நீடூழிவாழவேண்டும் என மணமக்களை வாழ்த்துகிறார்கள்.
- ஒரே பள்ளியில் படித்த 108 பேர் மணிவிழா கொண்டாடிய சம்பவம் கள்ளக்குறிச்சியில் அரங்கேறி உள்ளது.
கள்ளக்குறிச்சி:
திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். எனவேதான் திருமண பந்தத்தை பெரியோர்கள் முன்னிலையில் ஆசீர்வாதத்துடன் இனைக்கப்படுகிறது. அப்போது திருமண நாளில் பெரியோர்கள் பல்லாண்டு நீடூழிவாழவேண்டும் என மணமக்களை வாழ்த்துகிறார்கள்.
அவ்வாறு திருமணம் செய்யும் தம்பதிகள் ஏராளமானோர் மணிவிழாவை கடந்து பேரக்குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்கின்றனர். ஆனால் ஒரே பள்ளியில் படித்த 108 பேர் மணிவிழா கொண்டாடிய சம்பவம் கள்ளக்குறிச்சியில் அரங்கேறி உள்ளது.
கள்ளக்குறிச்சியில் 1977-78ம் ஆண்டு10-ம் வகுப்பு பயின்ற மாணவர்கள் கடந்த 12 ஆண்டுகளாக தொடர்ந்து ஆண்டுக்கு ஒரு முறை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடத்தி வருகின்றனர். இதில் மொத்தம் 150 பேர் கொண்ட இந்த குழுவில் தற்போது 108 பேருக்கு 60 வயது முடிந்துள்ளது.
இதைத் தொடர்ந்து நேற்று கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அனைவரும் கணவன் மற்றும் மனைவிகளுடன் இணைந்து தம்பதியராக கூடினர். அங்கு அனைவருக்கும் ஒரே மேடையில் 60-ம் திருமணம் நடைபெற்றது. மேலும் 60 வயது துவங்காத, 6 தம்பதிகளுக்கும் சஷ்டியப்த பூர்த்தி யாகம் நடத்தி அனைவருக்கும் மஞ்சள் கயிறு, தாலி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், இவர்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்கள் ஆசுகவி ஆராவமுதன், சீனிவாசன், அய்யாக்கண்ணு, மணவாளன் ஆகியோர் பங்கேற்று ஆசி வழங்கினர். மேலும் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் மத்திய அமைச்சர் வேங்கடபதி, முன்னாள் நகர மன்ற தலைவர் ரங்கன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
- 100 வயதுடைய வாக்காளர்களிடம் வீட்டிற்கு சென்று வழங்கி கவுரவிக்கப்பட உள்ளது.
- ஜனநாயக கடமை நிறைவேற்றுவதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் நடத்தப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உலக முதியோர் தினத்தை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் மூத்த குடிமக்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி பேசியதாவது:-
அக்டோபர் 1-ந்தேதி உலகம் முழுவதும் முதியோர் தினமா ககொண்டாடப்படுவதை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் மூத்த குடிமக்களின்பங்களிப்பை அங்கீகரிக்கவும், இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், முதியோர் தின நிகழ்வை கொண்டாட அறிவுறுத்தியது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளில் 80 வயதுக்கு மேற்பட்டோர் 17,911 வாக்காளர்கள் உள்ளனர். இந்த மூத்த குடிமக்கள் (80 வயதுக்கு மேற்பட்ட) ஜனநாயக செயல்பாட்டில் தங்களது பங்களிப்பை அளிப்பதற்காகவும் நம் நாட்டின் ஜனநாயக செயல்பா டுகளில் இடையராத பங்கேற்பதில் உள்ள ஆர்வத்தின் மூலமாகவும், நாட்டின்இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்வதை முன்னிட்டு, மூத்த குடிமக்களை கவுரவிக்கும், விதமாக தலைமை தேர்தல் ஆணையரின் ஆங்கிலம் மற்றும் வட்டார மொழி கடிதத்தினை மூத்த வாக்காளர்களுக்கு வழங்கி, பொன்னாடை அணிவித்து இன்று கௌரவப்படுத்தப்பட்டன.
மேலும் மாவட்டத்திலுள்ள அனைத்து மூத்த குடிமக்கள் கௌரவிக்கும் வகையில்அ ந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்,உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களால் 80 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 100 வயதுடைய வாக்காளர்களிடம் வீட்டிற்கு சென்று வழங்கி கவுரவிக்கப்பட உள்ளது. இந்நிகழ்வின் முக்கிய நோக்கமே இளம் வாக்காளர்களை அவர்களது கடமைகளை நிறைவேற்றுவதற்கும், ஊக்கப்படுத்தவும், மூத்த குடிமக்களின் தேர்தல் பங்களிப்பினை கவுரவபடுத்திடவும், நம் தேசத்திற்கான ஜனநாயக கடமை நிறைவேற்றுவதற்காகவும், இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் நடத்தப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார். அப்போது தேர்தல் தாசில்தார் பாலகுரு, கள்ளக்குறிச்சி தாசில்தார்ச த்தியநாராயணன் மற்றும் அரசு அலுவலர்கள் 4 சட்டமன்றத் தொகுதிகுட்பட்ட மூத்த குடிமக்கள் பலரும் உடனிருந்தனர்.
- கண்ணன் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
- அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன்(75). இவர் விஷம் குடித்து மயங்கி கிடந்தார், இவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கண்ணன் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விவசாய நிலத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார்.
- நீச்சல் தெரியாமல் தத்தளித்த அவர் தண்ணீரில் மூழ்கி இறந்தார்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே தொழுவந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜி மகன் விஜி (27). இவர் அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது, அங்கு உள்ள கிணற்றில் விஜி தவறி விழுந்தார். நீச்சல் தெரியாமல் தத்தளித்த அவர் தண்ணீரில் மூழ்கி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தியாகதுருகத்தில் 20 க்கும் மேற்பட்ட இனிப்பகங்கள், 25 -க்கும் மேற்பட்ட உணவகங்கள், 50 க்கும் மேற்பட்ட மளிகை கடைகள் செயல்பட்டு வருகின்றன.
- இம்மாதம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் 20 க்கும் மேற்பட்ட இனிப்பகங்கள், 25 -க்கும் மேற்பட்ட உணவகங்கள், 50 க்கும் மேற்பட்ட மளிகை கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் தியாகதுருகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கடைகளில் தங்களுக்கு தேவையான பொருட்களை பெற்றுச் செல்கின்றனர். இந்நிலையில் மளிகை கடைகளில் திண்பண்டங்கள் பாக்கெட்டைகளில் அடைத்து வைத்து விற்பனை செய்யப்படுகிறது. இதில் ஒரு சில மளிகை கடைகளில் காலாவதியான திண்பண்டங்கள் விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. இதேபோல் ஒரு சில உணவகங்களில் செயற்கை நிறமிகளை பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.
எனவே சம்மந்தப்பட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் திண்பண்டங்கள் காலா வதியான பின்பு விற்பனை செய்யப்படுகிறதா? உணவ கங்களில் செயற்கை நிறமிகள் பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். மேலும் வருகின்ற நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் இனிப்ப கங்களில் பயன்படுத்தப்படும் எண்ணை மற்றும் இனிப்புகள், காரவகைகள் தயார் செய்ய பயண்படுத்தும் உணவுப் பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். மேலும் காலாவதியான மற்றும் தரமற்ற பொருட்களை விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்க வேண்டும். தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை சார்பில் உணவு பாதுகாப்பு தொடர்பாக பொது மக்களுக்கு விழிப்பு ணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் எனவும் இப்பகுதி சமூக அலுவலர்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.






