search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "parade of vehicles"

    • 28 ஊழியர்களை டோல்கேட் நிர்வாகத்தின் சார்பில் ஆட்குறைப்பு நடவடிக்கையாக நீக்கினர்.
    • அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சி சுங்கச்சாவடி மையத்தில் 125-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் 28 ஊழியர்களை டோல்கேட் நிர்வாகத்தின் சார்பில் ஆட்குறைப்பு நடவடிக்கையாக நீக்கினர். அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் தொடர்ந்து இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது.

    தகவல் அறிந்த எம்.எல்.ஏ.க்கள் உதயசூரியன், மணிக்கண்ணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று டோல்கேட் நிர்வாக உரிமையாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் 3-வது நாளான இன்றும் இந்த போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் டோல்கேட் வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் தொடர்ந்து கட்டணம் இல்லாமல் சென்றனர்.

    இதையொட்டி செங்குறிச்சி சுங்க சாவடியில் போலீஸ் டி.எஸ்பி. மகேஷ் தலைமையிலான 20-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பணி நீக்கம் செய்யப்பட்ட 28 ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்க்கவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். டோல்கேட் ஊழியர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகளின் சார்பில் சந்தித்து ஆதரவை தெரிவித்தனர். 

    ×