search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தியாகதுருகத்தில் கடைகளில்  காலாவதியான திண்பண்டங்கள் விற்பனை?
    X

    தியாகதுருகத்தில் கடைகளில் காலாவதியான திண்பண்டங்கள் விற்பனை?

    • தியாகதுருகத்தில் 20 க்கும் மேற்பட்ட இனிப்பகங்கள், 25 -க்கும் மேற்பட்ட உணவகங்கள், 50 க்கும் மேற்பட்ட மளிகை கடைகள் செயல்பட்டு வருகின்றன.
    • இம்மாதம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் 20 க்கும் மேற்பட்ட இனிப்பகங்கள், 25 -க்கும் மேற்பட்ட உணவகங்கள், 50 க்கும் மேற்பட்ட மளிகை கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் தியாகதுருகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கடைகளில் தங்களுக்கு தேவையான பொருட்களை பெற்றுச் செல்கின்றனர். இந்நிலையில் மளிகை கடைகளில் திண்பண்டங்கள் பாக்கெட்டைகளில் அடைத்து வைத்து விற்பனை செய்யப்படுகிறது. இதில் ஒரு சில மளிகை கடைகளில் காலாவதியான திண்பண்டங்கள் விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. இதேபோல் ஒரு சில உணவகங்களில் செயற்கை நிறமிகளை பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

    எனவே சம்மந்தப்பட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் திண்பண்டங்கள் காலா வதியான பின்பு விற்பனை செய்யப்படுகிறதா? உணவ கங்களில் செயற்கை நிறமிகள் பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். மேலும் வருகின்ற நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் இனிப்ப கங்களில் பயன்படுத்தப்படும் எண்ணை மற்றும் இனிப்புகள், காரவகைகள் தயார் செய்ய பயண்படுத்தும் உணவுப் பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். மேலும் காலாவதியான மற்றும் தரமற்ற பொருட்களை விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்க வேண்டும். தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை சார்பில் உணவு பாதுகாப்பு தொடர்பாக பொது மக்களுக்கு விழிப்பு ணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் எனவும் இப்பகுதி சமூக அலுவலர்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

    Next Story
    ×