சின்னசேலம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி மாயம்

சின்னசேலம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி மாயமானார்.தாய் மாயமான தகவல் ரமேஷுக்கு தெரிவிக்க ப்பட்டு அவர் மேலூர் கிராமத்திற்கு வந்தார்.
சின்னசேலம் அருகே  மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி மாயம்
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள மேலூர் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய தாய் ஜோதி என்கின்ற பழனியம்மாள் (வயது 67), தந்தை இருவரும் மேலூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ரமேசின் தாய் பழனியம்மாள் மூதாட்டி மாயமானார். இவர் கடந்த 30 வருடங்க ளாக மனநலம் பாதிக்கப்பட்டு வாழ்ந்து வந்ததாக கூறப்படு கின்றது. பிறகு தாய் மாயமான தகவல் ரமேஷுக்கு தெரிவிக்க ப்பட்டு அவர் மேலூர் கிராமத்திற்கு வந்தார்.தன்னுடைய தாயை பல இடங்களில் தேடிப் பார்த்தார் எங்கும் கிடைக்காததால் போலீஸ் நிலையத்தில் தன்னுடைய தாயை கண்டுபிடித்து தருமாறு புகார் மனு கொடுத்தார். ரமேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டியை போலீசார் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com