search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Group Examination"

    • கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வருகிறது.
    • இணையதளம் வாயிலாக இளங்கலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: 

    கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது மத்திய அரசு பணியாளர்த் தேர்வாணையம் 20,000 பணியிடங்களுக்கான உதவி தணிக்கை அதிகாரி, உதவி பிரிவு அலுவலர், வருமான வரி ஆய்வாளர், உதவி ஆய்வாளர் பணியிடத்திற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்காலியி டங்களுக்கு http://ssc.nic.in என்ற இணையதளம் வாயிலாக இளங்கலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    இத்தேர்விற்கு விண்ணபிக்க வருகின்ற 08.10.2022 கடைசி தேதி ஆகும். அதனை தொடர்ந்து, இத்தேர்விற்கு தயாராகும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த போட்டித் தேர்வர்கள் பயனடையும் வகையில் இலவச பயிற்சி வகுப்புகள் 06.10.2022 வியாழக்கிழமை முதல் வார நாட்களில் காலை 10 மணி முதல் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தொடங்கப்பட உள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், SSC Combined Graduate Level தேர்விற்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல், புகைப்படம், மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் கள்ளக்குறிச்சி, 18/63, நேப்பால் தெருவில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்புக் கொண்டு தங்களின் விவரத்தினை தெரிவித்து பதிவுசெய்து கொள்ளலாம். என அதில் கூறப்பட்டுள்ளது.

    ×