search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Confiscation of liquor"

    • போலீசார் ரோந்து பணியில் சிக்கியது
    • தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அருகே உள்ள சின்ன பள்ளி குப்பம் கிராமத்தில் வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த பகுதியில் சாராயம் விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து போலீசார் அங்கு சென்றனர். போலீசார் வருவதை கண்டவுடன் அங்கிருந்தவர்கள் தப்பியோடி விட்டனர்.

    பின்னர் அங்கு இருந்த 20 லிட்டர் சாராய பொட்டலங்களை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் தப்பி ஓடிய எல்லுப்பாறை மலைகிராமத்தை சேர்ந்த சிவா என்பவரை தேடி வருகின்றனர்.

    • 780 லிட்டர் தரையில் கொட்டி அழித்தனர்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடி வருகிறார்கள்

    அணைக்கட்டு:

    வேலூர் மதுவிலக்கு. அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் அல்லேரி மற்றும் அதனையொட்டிய மலைப்பகுதியில் திடீரென சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது கூனம்பட்டி மலைப்பகுதியில் ஓடையோரம் 26 லாரி டியூப்பில் தலா 30 லிட்டர் வீதம் 780 லிட்டர் சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடி க்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து தரையில் கொட்டி அழித்தனர்.

    போலீசார் விசாரணையில் கூனம்பட்டி மலைப்பகுதியை சேர்ந்தவர்கள் சாராயத்தை லாரி டியூப்பில் பதுக்கி வைத்தது தெரிய வந்தது. அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடி வருகிறார்கள்.

    • கடலூர் மாவட்டத்திற்கு மதுபானங்கள் கடத்த ப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
    • 188 லிட்டர் சாராயம், 1465 மது பாட்டில்களும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை விழா கோலகலமாக கொண்டாடப்பட்டு வந்தது. இதனையொட்டி புதுச்சேரியில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு மதுபானங்கள் கடத்த ப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்படி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் மது கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க புதுவை மாநில எல்லையோரங்களில் உள்ள 8 சோதனை சாவடிகளில் போலீசார் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மேலும், மாவட்டம் முழுவதும் மது விலக்கு போலீசார் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டனர். இதில் போகிப் பண்டிகை முதல் காணும் பொங்கல் வரை அதாவது 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை மது கடத்தல், மது விற்பனை செயலில் ஈடுபட்ட 127 நபர்கள் மீது வழக்குபதிவு செய்து கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 188 லிட்டர் சாராயம், 1465 மது பாட்டில்களும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. ஆற்று திருவிழா நாளை நடைபெறுவதை முன்னிட்டு புதுவை மாநிலத்திலிருந்து கடலூர் மாவட்டத்திற்கு மதுக்கடத்தலை தடுப்பதற்கு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.
    • அவர்களிடம் இருந்து மொத்தம் 500 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பசலைராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது வெவ்வேறு இடங்களில் தனித்தனியாக சாராயம் விற்றதாக மூலக்காடு கிராமத்தை சேர்ந்த குமார் (வயது49), ஆனைமடுவு ஆனந்தன் (28), புளியங்கோட்டைபிரபு (31), ஏழுமலை (34) மற்றும் கொடியனூர் வெள்ளையன் (40) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மொத்தம் 500 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

    • 5 லிட்டர் சாராயம் ஆகியவற்றை பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    சுதந்திர தின விழாவை முன்னிட்டு நேற்று மது கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

    இதனால் மதுவிற்பனையை தடுக்க திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ் பெக்டர் மங்கையர்கரசி, சப் - இன்ஸ்பெக்டர் காதர்கான் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது தாமலேரிமுத்தூர் பகுதியில் மது விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது . தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர்.

    அப்போது ஊரான் வட்டம் பகுதியை சேர்ந்த குமார் ( வயது 51 ) , இவரது மகன் ராகுல் ( 23 ) ஆகியோர் வீட்டின் பின்புறம் மது மற்றும் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தனர்.

    அவர் களை போலீசார் கைது செய்து 90 மது பாட்டில்கள், 5 லிட்டர் சாராயம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல அதே பகுதியை சேர்ந்த கதிரேசன் (50) என்பவ ரும் தனது வீட்டின் பின்புறம் மது, சாராயம் விற்றுக்கொண் டிருந்தார். அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

    கேரளாவில் இருந்து அரசு பேருந்தில் மதுபாட்டில் கடத்தியது தொடர்பாக வாலிபரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 20 மதுபாட்டிகளை பறிமுதல் செய்தனர்.
    செங்கோட்டை:

    செங்கோட்டை வழியாக வாகனங்களில் கேரளாவுக்கு தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்வதும், அங்கிருந்து தமிழகத்திற்குள் கொண்டு வருவதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. இதனை தடுக்க புளியரை சோதனை சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கேரளாவில் இருந்து அரசு பேருந்து தென்காசி செல்வதற்காக புளியரை சோதனை சாவடி வந்தது. அப்போது போலீசார் பேருந்தில் உள்ளே சென்று சோதனை செய்த போது அங்கு சந்தேகம்படும்படியாக ஒருவர் இருந்தார். அருகில் ஒரு பேக் இருந்தது. அதை போலீசார் திறந்து பார்த்தபோது 20 மதுபாட்டில்கள் இருந்தது.
     
    இதையடுத்து அதனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தியதில் அவர் தேவிபட்டணத்தை சேர்ந்த வன்னியராஜ்(வயது 35) என்றும்,  கேரளாவில் இருந்து கடத்தி வந்ததும் தெரியவந்தது. இது குறித்து புளியரை சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்பாபு வழக்கு பதிவு செய்து வன்னிராஜை கைது செய்தார். #tamilnews
    ×