சின்னசேலம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

சின்னசேலம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலியானார்.
சின்னசேலம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட வரதப்புனூர் கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி (வயது 41). கல் உடைக்கும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கொளஞ்சி தனது இருசக்கர வாகனத்தில் பாபு என்பவரை உட்கார வைத்துக்கொண்டு அருகில் உள்ள பெரிய சிறுவத்தூர் கிராமத்திற்கு சொந்த வேலை காரணமாக சென்று உள்ளார். பின்னர் வேலையை முடித்துக் கொண்டு மீண்டும் வரதப்புனுர் கிராம நோக்கி வந்து கொண்டிருக்கும் பொழுது பெரிய சிறுவத்தூர்கொளஞ்சி ஒட்டி வந்த இருசக்கர வாகனம் நிலைத்தடு மாறி கீழே விழுந்ததில் கொளஞ்சி என்பவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது .

பின்பு 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் உதவிக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது சம்பந்தமாக உயிரிழந்தவரின் சகோதரர் மணிகண்டன் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து சின்னசேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com