என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hostel facility"

    • கள்ளக்குறிச்சி மாவட்ட அளவில் அரசுப் பள்ளியில் படிப்பில் சிறந்தது.
    • பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் 80 மாணவர்கள் -மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாடல் ஸ்கூல் எனப்படுகின்ற அரசு மாதிரி பள்ளி இயங்கி வந்தது. கள்ளக்குறிச்சி மாவட்ட அளவில் அரசுப் பள்ளியில் படிப்பில் சிறந்து விளங்குகின்ற மாணவர்கள் மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு இவர்களுக்காக அரசு மாதிரி பள்ளியை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் சின்ன சேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செயல்பட்டு வந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான அரசு மாதிரி பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் 80 மாணவர்கள் -மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    கடந்த 2ஆண்டுகளாக சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செயல்பட்டு வந்த இந்த பள்ளி தற்போது இடமாற்றம் செய்யப்பட்டு சின்ன சேலம் வட்டம் வாசுதேவனூர் என்ற கிராமத்தின் அருகில் உள்ள மகாகவி என்ற தனியார் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. மாணவ-மாணவிகள் தனியார் பள்ளி பஸ்மூலம் சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலிருந்து வாசுதேவனூர் கிராம மகாகவி தனியார் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மாணவிகள் அங்கேயே தங்கி படிப்பதற்கு ஹாஸ்டல் வசதி செய்து கொடுக்கப்பட்டது.

    ×