என் மலர்
உள்ளூர் செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகே சாராய வியாபாரி: குண்டர் சட்டத்தில் கைது
- உளுந்தூர்பேட்டை அருகே சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் அவரை ஓராண்டு தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பரிந்துரை செய்தார்.
கள்ளக்குறிச்சி, செப்.18-
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே வடமாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (எ) கன்னுகுட்டி (வயது 55). இவர் கடந்த மாதம் 17-ந்தேதி வடமாம்பாக்கம் கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்தார். அவரை திருநாவலூர் போலீசார் அவரிடமிருந்து 120 லிட்டர் கள்ளச்சாராயத்தை கைப்பற்றினர். இவர் மீது திருநாவலூர் மற்றும் உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் நிலையத்தில் கள்ளச்சாராயம் கடத்திய மற்றும் விற்பனை செய்த பல வழக்குகள்நிலுவையில் உள்ளது.
இவ்வாறு தொடர்ந்து மதுவிலக்கு குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் இவரின் நடவடிக்கையை கட்டுபடுத்தும் வகையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் அவரை ஓராண்டு தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பரிந்துரை செய்தார். அதன்படி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் மேற்படி நபரை ஓராண்டு தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி திருநாவலூர் போலீசார் ஏழுமலையை நேற்று கடலூர் மத்திய சிறையில் அடைத்தார்.






