என் மலர்
நீங்கள் தேடியது "srimathi case"
- மாணவி ஸ்ரீமதி வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட குற்றவியல் தலைமை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
- கடந்த மாதம் 19-ந்தேதி ஸ்ரீமதியின் தாய் செல்வியிடம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.
விழுப்புரம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இதனை தொடர்ந்து வன்முறை வெடித்தது. பள்ளி பஸ்கள் சேதப்படுத்தப்பட்டது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மாணவி ஸ்ரீமதி வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட குற்றவியல் தலைமை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
கடந்த மாதம் 19-ந்தேதி ஸ்ரீமதியின் தாய் செல்வியிடம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. அதனை படித்து பார்க்க அவகாசம் வேண்டும் என ஸ்ரீமதியின் தாய் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அந்த வழக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) ஒத்திவைத்து உத்தரவிட்டார். அதன்படி வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஸ்ரீமதியின் தாய் சார்பில் ஐகோர்ட்டு வக்கீல் கஜேந்திரன், விழுப்புரம் வக்கீல்கள் லூசியா, கேசவன் ஆகியோர் ஆஜரானார்கள். அவர்கள், மாணவி ஸ்ரீமதி வழக்கு விசாரணையை சிறப்பு புலனாய்வு ஓய்வுபெற்ற நீதிபதி நடத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளோம். மேலும் குற்றப்பத்திரிகை தொடர்பாக சில ஆவணங்களை சரி பார்க்க வேண்டி உள்ளது. எனவே, விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
இதனை தொடர்ந்து வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (செப்டம்பர்) 20-ந்தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டார்.
- சக்தி மெட்ரிக் பள்ளியில் உள்ள ஆடிட்டோரியத்தில் பேச்சுவார்த்தை நடந்ததாக சிசிடிவி காட்சிகளின் புகைப்படங்கள் வெளியீடு.
- ஸ்ரீமதி ஜூலை 13ஆம் தேதி உயிரிழந்த நிலையில் அன்றைய தினமே பேச்சுவார்த்தை நடந்த காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளன.
கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவத்தில் புதிய ஆதாரம் வெளியாகியுள்ளது. மாணவி உயிரிழந்த ஜூலை 13ஆம் தேதி இரவு 7 மணியளவில் பள்ளி நிர்வாகத்துடன் செல்வி தரப்பு பேசியதாக ஆதாரம் வெளியானது.
அந்த வீடியோவில், ஸ்ரீமதி தரப்பில் அவரது தாய் செல்வி உட்பட 9 பேர் பேச்சுவார்த்தையில் இருந்துள்ளனர். ஸ்ரீமதி ஜூலை 13ஆம் தேதி உயிரிழந்த நிலையில் அன்றைய தினமே பேச்சுவார்த்தை நடந்த காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளன.
பள்ளி நிர்வாகம் தங்களை அழைத்து பேசவில்லை என செல்வி குற்றச்சாட்டு முன்வைத்திருந்த நிலையில் தற்போது ஆதாரம் வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில் சக்தி மெட்ரிக் பள்ளியில் உள்ள ஆடிட்டோரியத்தில் பேச்சுவார்த்தை நடந்ததாக சிசிடிவி காட்சிகளின் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த வீடியோவில், எதிர்தரப்பில் கள்ளக்குறிச்சி மகாபாரதி பள்ளி நிர்வாகி மோகன் மற்றும் சக்தி மெட்ரிக் பள்ளியின் தாளாளர் ரவிக்குமாரின் உறவினர்கள் என 4 பேர் பங்கேற்றுள்ளனர்.






