search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Love Couple Shelter"

    • சசிக்குமார் (22). ராசிபுரம் அடுத்த பாச்சல் தனியார் கல்லூரியில் பி.இ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
    • இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. மேலும் ஒரே தெருவில் வசித்து வந்ததால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் நெத்திமேடு கே.பி. கரடு பகுதியை சேர்ந்தவர் சசிக்குமார் (22). ராசிபுரம் அடுத்த பாச்சல் தனியார் கல்லூரியில் பி.இ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் ஷாலினி (20). இவர் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. மேலும் ஒரே தெருவில் வசித்து வந்ததால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்துள்ளனர்.

    இவர்களது காதல் விவகாரம் தெரிந்து இருதரப்பு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத் தொடர்ந்து வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

    இந்த நிலையில் நேற்று நாமக்கல் நரசிம்மர், ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து இருவரும் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து பாதுகாப்பு கேட்டு இரவு அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இது தொடர்பாக அவர்களின் பெற்றோரை அழைத்து போலீசார் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து காதல் ஜோடியை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

    • இருவரும் திருப்பூரில் உள்ள ஒரு ஜவுளி நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர்.
    • வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    நாமக்கல்:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுகா மொரட்டுபாளையம் அடுaத்த தொட்டியவளவு பகுதியை சேர்ந்த கந்தசாமி மகன் கலைச்செல்வன்(28). ஊத்துக்குளி சிவசக்தி நகரை சேர்ந்த சீனிவாசன் மகள் தனலட்சுமி (24).காதலர்களான இருவரும் திருப்பூரில் உள்ள ஒரு ஜவுளி நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் திருமணம் செய்ய வீட்டை விட்டு வெளியேறிய இருவரும், பாதுகாப்பு கேட்டு நாமக்கல் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்து உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து இருவீட்டாரும் நாமக்கல் போலீஸ் நிலையத்திற்கு வந்துள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிரவீன்( வயது 23). இவர் பரமத்தி வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. படித்து வந்தார்.
    • மீனாவுக்கும் பிரவீனுக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்தனர். இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, பெற்றோரிடம் தெரிவித்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே நல்லகுமரன்பாளையத்தை சேர்ந்த ரமேஷ். இவரது மகன் பிரவீன்( வயது 23). இவர் பரமத்தி வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. படித்து வந்தார். அப்போது, பரமத்திவேலூர் அருகே நன்செய் இடை யாறு பகுதியை சேர்ந்த அண்ணாதுரை மகள் மீனா( 28 ) என்பவர், கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்தார்.

    இதில், மீனாவுக்கும் பிரவீனுக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்தனர். இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, பெற்றோரிடம் தெரிவித்தனர். ஆனால் பெற்றோர் இதற்கு சம்மதிக்கவில்லை. இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, கடந்த 8-ந் தேதி திருவண்ணாமலையில் திருமணம் செய்து கொண்டனர்.

    இந்நிலையில் நேற்று மாலை வேலகவுண்டன்பட்டி போலீஸ் நிலையத்திற்கு வந்த அவர்கள், தங்கள் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு இருப்பதால், பாதுகாப்பு தர வேண்டும் என்று கூறி தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து இருதரப்பு பெற்றோரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில், காதலன் வயதை விட, காதலியின் வயது அதிகம் என்பதால் பெற்றோர் அவர்களை ஏற்க மறுத்தனர். இருவரும் திருமண வயதில் இருப்பதால் அவர்கள் மீது வழக்கு தொடர முடியாது என்றும், மேலும் காதல் ஜோடியை எந்த தொந்தரவும் செய்யக்கூடாது எனக் கூறியும் பெற்றோர்களை அறிவுறுத்தி போலீசார் அனுப்பி வைத்தனர்.

    • பூபதி (வயது 23) அதே பகுதியில் உள்ள பஞ்சாயத்தில் வேலை பார்த்து வருகிறார்.
    • இருவரும் கடந்த நான்கு வருடமாக காதலித்து வந்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள கூத்தம்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் நடேசன். இவரது மகன் பூபதி (வயது 23) அதே பகுதியில் உள்ள பஞ்சாயத்தில் வேலை பார்த்து வருகிறார். பக்கத்து ஊரான செட்டியாம்பட்டியைச் சேர்ந்தவர் பெருமாள்.இவரது மகள் சிம்மாசினி (21). இவர் ஒரு தனியார் கல்லூரியில் எம்.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இருவரும் கடந்த நான்கு வருடமாக காதலித்து வந்தனர். இருவர்கள் இருவரும் கடந்த 1-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறி சேலத்தில் உள்ள ஒரு முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டுநேற்று பாதுகாப்பு கேட்டு வேலகவுண்டம்பட்டி போலீசில் தஞ்சம் அடைந்தனர். இரு தரப்பு பெற்றோர்களையும் அழைத்து சமாதானம் பேசிய போலீசார் திருமணம் செய்து கொண்ட இருவரும் மேஜர் என்பதால் சிம்மாஷினியை பூபதியுடன் அனுப்பி வைத்தனர்.

    • 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்வது என முடிவு செய்தனர்.
    • காரமடை அருகே உள்ள தோளம்பாளையத்தில் உள்ள கோவிலில் வைத்து இந்து முறைப்படி திருமணம் செய்தனர்.

    கோவை,

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள வடுகபாளைத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 27). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும் திருப்பூர் மங்கலம் அருகே உள்ள பள்ளப்பாளையத்தை சேர்ந்த சத்யா (22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் தீவிரமாக காதலித்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் இளம்பெண்ணின் வீட்டிற்கு தெரிய வரவே அவரது பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள் தங்களது மகளுக்கு திருமணம் செய்து வைப்பதுஎன முடிவு செய்து மணமகனை தேடி வந்தனர்.

    இது குறித்து இளம்பெண் தனது காதலனிடம் தெரிவித்தார். 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்வது என முடிவு செய்தனர். அதன்படி 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் காரமடை அருகே உள்ள தோளம்பாளையத்தில் உள்ள கோவிலில் வைத்து இந்து முறைப்படி திருமணம் செய்தனர்.

    திருமணம் செய்து கொண்ட 2 பேரும் பெற்றோர் பிரித்து விடுவார்கள் என்ற பயத்தில் பாதுகாப்பு கேட்டு அன்னூர் போலீசில் தஞ்சம் அடைந்தனர். 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • முத்துவுக்கும் பிரியாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறி உள்ளது.
    • காதல் பெற்றோருக்கு தெரிய வந்த நிலையில் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது .

    கள்ளக்குறிச்சி: 

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தாலுகா கீழ் ஒரத்தூர் கிராமத்தை சேர்ந்த முத்து (வயது 22). இவர் கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் வேலை பார்க்கும் அதே பகுதியில் பிரியா (19) வசித்து வருகிறார். அப்போது முத்துவுக்கும் பிரியாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறி உள்ளது. கடந்த இரண்டு வருடமாக காதலித்து வந்தனர்.

    இந்த காதல் பெற்றோருக்கு தெரிய வந்த நிலையில் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது . இதனால் வீட்டை விட்டு சென்று திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு எடுத்தனர் காதல் ேஜாடி கடந்த 11-ந் தேதி அன்று சேலம் மாவட்டத்தில் உள்ள பவானி முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றது சின்னசேலம் அருகே உள்ள கணியாமூர் என்ற கிராமத்தில் உறவினர் வீட்டில் தங்கி உள்ளனர். ஆனால் பெற்றோரால் நமக்கு ஆபத்து வரலாம் என எண்ணி சின்னசேலம் போலீஸ் இன்று தஞ்சம் அடைந்தனர். அப்எபோது 2 பேரும் மேஜர் என்பதால் பெற்றோர்களை அழைத்து இவர்களது திருமணமட சட்டப்படி செல்லும்.இவர்களுக்கு நீங்கள் ஏதாவது இடையூறு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். 

    ×