என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேல கவுண்டன்பட்டி போலீசில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி பூபதி, சிம்மாசினி.
வேலகவுண்டன்பட்டி போலீசில் காதல் ஜோடி தஞ்சம்
- பூபதி (வயது 23) அதே பகுதியில் உள்ள பஞ்சாயத்தில் வேலை பார்த்து வருகிறார்.
- இருவரும் கடந்த நான்கு வருடமாக காதலித்து வந்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள கூத்தம்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் நடேசன். இவரது மகன் பூபதி (வயது 23) அதே பகுதியில் உள்ள பஞ்சாயத்தில் வேலை பார்த்து வருகிறார். பக்கத்து ஊரான செட்டியாம்பட்டியைச் சேர்ந்தவர் பெருமாள்.இவரது மகள் சிம்மாசினி (21). இவர் ஒரு தனியார் கல்லூரியில் எம்.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இருவரும் கடந்த நான்கு வருடமாக காதலித்து வந்தனர். இருவர்கள் இருவரும் கடந்த 1-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறி சேலத்தில் உள்ள ஒரு முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டுநேற்று பாதுகாப்பு கேட்டு வேலகவுண்டம்பட்டி போலீசில் தஞ்சம் அடைந்தனர். இரு தரப்பு பெற்றோர்களையும் அழைத்து சமாதானம் பேசிய போலீசார் திருமணம் செய்து கொண்ட இருவரும் மேஜர் என்பதால் சிம்மாஷினியை பூபதியுடன் அனுப்பி வைத்தனர்.






