நாமக்கல் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

இருவரும் திருப்பூரில் உள்ள ஒரு ஜவுளி நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நாமக்கல் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
Published on

நாமக்கல்:

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுகா மொரட்டுபாளையம் அடுaத்த தொட்டியவளவு பகுதியை சேர்ந்த கந்தசாமி மகன் கலைச்செல்வன்(28). ஊத்துக்குளி சிவசக்தி நகரை சேர்ந்த சீனிவாசன் மகள் தனலட்சுமி (24).காதலர்களான இருவரும் திருப்பூரில் உள்ள ஒரு ஜவுளி நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் திருமணம் செய்ய வீட்டை விட்டு வெளியேறிய இருவரும், பாதுகாப்பு கேட்டு நாமக்கல் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்து உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து இருவீட்டாரும் நாமக்கல் போலீஸ் நிலையத்திற்கு வந்துள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com