search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "School violence"

    • கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலை ப்பள்ளியில் நடந்த கலவரம் தொடர் பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
    • செம்பட்டா குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ரகுபதிராஜன் (24) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலை ப்பள்ளியில் நடந்த கலவரம் தொடர் பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கண்கா ணிப்பு கேமராக்கள் மூலம் பதிவான காட்சி களைக் கொண்டு சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர். அதன்படி பள்ளி சொத்து க்களை சேதப்ப டுத்தியதாக கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே சோலம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் மணி கண்டன் (வயது 22), மேலும் போலீசார் மீது கற்களை வீசி வன்முறை யில் ஈடுபட்டதாக சின்ன சேலம் அருகே பங்காரம் கிராமத்தைச் சேர்ந்த பாவாடை (46), தெங்கியா நத்தம் கிராமத்தைச் சேர்ந்த ராஜீவ்காந்தி (41), சங்கரா புரம் அருகே செம்பட்டா குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ரகுபதிராஜன் (24) ஆகிய 4 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறைக்கு இந்து முன்னணி காரணம் என கூறி அவதூறு பரப்பியவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டது.
    • இந்து முன்னணி மாநில தலைவரின் படத்தை தவறாக சித்தரித்து உள்ளனர்.

    விழுப்புரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்து போராட்டம் நடந்தது.  இந்த வன்முறைக்கு இந்து முன்னணி தான் காரணம் எனவும் இந்து முண்ணனி பேரியக்கத்தின் பெயரைக் கெடுக்கும் வகையில் இந்து முன்னணி மாநில தலைவரின் படத்தை தவறாக சித்தரித்து திருவெண்ணைநல்லூரை மையமாகக் கொண்டு செயல்படும் மக்களின் உண்மை செய்திகள் வாட்ஸ்-அப் குழுவில் பதிவு செய்தவர் மீதும் போஸ்டரை உருவாக்கியவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் இந்து முன்னணி மாவட்ட தலைவர் அப்பு என்கிற சதீஷ் தலைமையில் புகார் கொடுக்கப்பட்டது. அப்போது முன்னாள் மாவட்ட பொதுச்செயலாளர் நேரு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் தனபால், ஒன்றிய பொதுச்செயலாளர் அழகேசன், ஒன்றிய செயலாளர் விஜய், ஒன்றிய செய்தி தொடர்பாளர் ரஞ்சித், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் பத்ராசலம், ராஜி, மற்றும் வெங்கடேசன், செல்வராஜ் கிளை பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.

    ×