என் மலர்
உள்ளூர் செய்திகள்

கல்லூரி மாணவி மாயம்
- கல்லூரி மாணவி மாயமானார்.
- கழிவறைக்கு சென்று வருகிறேன் என்று சென்ற ஐஸ்வர்யா திரும்பி வரவே இல்லை.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் மேல் நாரியப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யாசாமி. இவருக்கு அம்பிகா (வயது 28), ஐஸ்வர்யா (17) என 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் அம்பிகாவுக்கு திருமணம் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. இளைய மகள் ஐஸ்வர்யா தலைவாசலில் உள்ள தனியார் கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 12-ந் தேதி அன்று வீட்டின் மொட்டை மாடியில் தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் கழிவறைக்கு சென்று வருகிறேன் என்று சென்ற ஐஸ்வர்யா திரும்பி வரவே இல்லை. இதில் சந்தேகம் அடைந்த மாணவியின் பெற்றோர் அக்கம் பக்கத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் அவரை தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து சின்ன சேலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடிவருகின்றனர்.






