என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்னசேலம் அருகே தூக்கு போட்டு 9-ம் வகுப்பு  மாணவி தற்கொலை
    X

    சின்னசேலம் அருகே தூக்கு போட்டு 9-ம் வகுப்பு மாணவி தற்கொலை

    • நேற்று காலை பிரியங்காவுக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் விஜயசேகர் என்பவர் குடும்பத்திற்கும் தகராறு ஏற்பட்டது.
    • பிரியங்காவின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே பிரியங்கா இறந்து விட்ட தாக தெரிவித்தார்.

    கள்ளக்குறிச்சி:

    சின்ன சேலம் அருகே உள்ள மரவாநத்தம் மேற்கு காட்டுக்கொட்டாய் பகுதி யை சேர்ந்தவர் மோகன், அவரது மகள் பிரியங்கா (வயது 14). இவர் சின்ன சேலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை பிரியங்கா வுக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் விஜயசேகர் என்பவர் குடும்பத்திற்கும் தகராறு ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த பிரியங்கா அவரது வீட்டிற்குள் சென்று தூக்கு போட்டார். இதை பார்த்த பிரியங்காவின் தாய் யுவராணி சத்தம் போட்டு கத்தியுள்ளார்.

    உடனே பிரியங்காவின் தந்தை வந்து பிரியங்காவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சின்னசேலத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கள்ள–க்குறிச்சியில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பிரியங்காவின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே பிரியங்கா இறந்து விட்ட தாக தெரிவித்தார். பிரியங்காவின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்ப டையில் வழக்கை பதிவு செய்து சின்னசேலம் காவல் நிலையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×