என் மலர்
காஞ்சிபுரம்
காஞ்சீபுரம் அடுத்த திருப்பருத்திகுன்றம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். பிரபல சாராய வியாபாரியான இவர் கொலை, கொலை முயற்சி நில அபகரிப்பு என பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ளார்.
நீதிமன்ற உத்தரவுபடி தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள இவர் தற்போது துபாயில் இருந்து தப்பி இலங்கையில் உள்ளதாக கூறப்படுகிறது. இவரை பிடிக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
அமலாக்க துறையின் உதவியுடன் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள இவரது சொத்துக்கள் முடக்கப்பட்ட நிலையில் இவர் மீதான போலீசின் பிடி இறுகியுள்ளது.
இவரது மகன் சந்தோஷ் குமார் (24) கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது பாஸ்போட்டை புதுப்பிக்க லண்டனில் இருந்து சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் சுற்றி வளைத்தனர்.
சென்னை அமலாக்க பிரிவினர் அவரிடம் விசாரணை நடத்திய பிறகு காஞ்சீபுரம் போலீசார் அவரை காஞ்சீபுரம் அழைத்து வந்து 15 மணி நேரத்திற்கும் மேலாக தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணைக்கு அழைக்கும் போது ஆஜராக வேண்டும் என விடுவிக்கப்பட்ட நிலையில் காஞ்சீபுரம் எல்லப்பன் நகரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற போலீசார் சந்தோஷ்குமாரை மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் கொடுத்தனர்.
ஆனால் விசாரணைக்கு அவர் ஒத்துழைக்காததால் சின்ன காஞ்சிபுரம் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இன்று அவர் விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் அவர் மீது கைது நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாமல்லபுரத்தைச்சேர்ந்த 15 பேர் திருவண்ணாமலைக்கு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வேனில் சென்றனர். பின்னர் அவர்கள் இன்று காலை திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.
தண்டலம் பகுதியில் வந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் பையனூரைச் சேர்ந்த வேன் டிரைவர் செந்தில் மற்றும் 2 பெண்கள் உள்பட 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மற்றவர்கள் அதிஷ்டவசமாக லேசான காயத்துடன் தப்பினர். காயமடைந்த 3 பேரும் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து திருப்போரூர் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர் செல்வம் வழக்குபதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கிண்டி ரேஸ்கோர்ஸ், மடுவாங்கரை ஐந்து பர்லாங் சாலையில் குதிரைகள் பராமரிக்கும் இடம் உள்ளது. இங்குள்ள காலி மைதானத்தில் இன்று காலை வாலிபர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுபற்றி அறிந்ததும் கிண்டி போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
கொலையுண்ட வாலிபருக்கு சுமார் 35 வயது இருக்கும். அவரது தலையில் பலத்த வெட்டுக்காயம் இருந்தது. மேலும் அவரது வயிறு கிழிக்கப்பட்டும் முகம் எரிக்கப்பட்டும் காணப்பட்டது.
முகம் முழுவதும் எரிந்து இருந்ததால் அவரை அடையாளம் காண முடியவில்லை. உடல் கிடந்த இடம் அருகே கைப்பையும், சூட்கேசும் கிடந்தது.
மேலும் சுமார் 500 மீட்டர் தூரத்தில் நுழைவு வாயில் அருகே ஆட்டோ ஒன்றும் கேட்பாரற்று நின்றது. அதனை போலீசார் கைப்பற்றினர்.
ஆட்டோவில் உரிமையாளர் பெயர் சித்தாலப்பாக்கத்தை சேர்ந்த ஏழுமலை என்று எழுதப்பட்டு இருந்தது. அதில் இருந்த ஆர்.சி. புத்தகத்தில் வேளச்சேரியை சேர்ந்த சேர்மத்துரை என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதனை வைத்து போலீசார் விசாணையை தொடங்கினர். இதில் கொலையுண்ட வாலிபர் மடுவாங்கரையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மோகன் என்பதை உறுதி படுத்தி உள்ளனர். அவரை நண்பர்களே மதுகுடிக்க அழைத்து வந்து தீர்த்து கட்டி இருக்கலாம் என்று தெரிகிறது.
மோகனின் நண்பர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிண்டி ரேஸ்கோர்சில் ஆட்டோ டிரைவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் இ-சேவை மையத்தில் ஆதார் அட்டையில் செல் நெம்பரை இணைப்பதற்காக கடந்த 5-ந்தேதி 2 வக்கீல்கள் வந்தனர்.
அப்போது வருவாய் துறையினருக்கும் வக்கீல்களுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து இரு தரப்பினரும் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் வக்கீல்களை தாக்கிய தாசில்தார் உள்பட வருவாய்துறை ஊழியர்களை கைது செய்ய வேண்டும். பணி நீக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஸ்ரீபெரும்புதூர் மணிக் கூண்டு அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க தலைவர் பழனி தலைமை தாங்கினார்.
இதில் திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் பல்வேறு நீதிமன்றங்களை சேர்ந்த வக்கீல்கள் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் உள்பட 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
காஞ்சீபுரம், திருப்பருத்திகுன்றத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஸ்ரீதர். இவர் மீது ஆள்கடத்தல், கொலை, பணம் பறிப்பு, நிலம் அபகரிப்பு உள்ளிட்ட ஏராளமான வழங்குகள் உள்ளன. போலீசார் தேடுவதை அறிந்ததும் ரவுடி ஸ்ரீதர் வெளிநாடுக்கு தப்பி சென்று விட்டார்.
அவரது மனைவி குமாரி மற்றும் மகள்கள் காஞ்சீபுரத்தில் வசித்து வருகிறார்கள். ஸ்ரீதர் சட்ட விரோதமாக பறித்த ஏராளமான சொத்துக்கள் மனைவி மற்றும் குடும்பத்தினர் பெயரில் இருப்பது தெரிந்தது.
இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.100 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை அமலாக்கத் துறையினர் முடக்கினர்.
இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை லண்டனில் இருந்து வந்த ஸ்ரீதரின் மகன் சந்தோஷ்குமாரை சென்னை விமானநிலையத்திலேயே அமலாக்கத்துறையினர் மடக்கினர். பின்னர் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர்.
நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை சுமார் 15 மணி நேரம் சந்தோஷ் குமாரிடம் காஞ்சீபுரம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் தேவைப்பட்டால் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவரை அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே நேற்று காலை சந்தோஷ்குமாரை பெரிய காஞ்சீபுரம் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார் அழைத்தனர். ஆனால் அவர் ஆஜராகவில்லை.
இதையடுத்து நேற்று இரவு காஞ்சீபுரம் எல்லப்பன் நகரில் உள்ள ஸ்ரீதர் வீட்டில் சந்தோஷ்குமாரை ஆஜராகும்படி போலீசார் சம்மன் ஒட்டிச்சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இன்றும் சந்தோஷ் குமாரை விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார் அழைத்து உள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஸ்ரீதர் குறித்து பல தகவல்கள் கிடைத்து உள்ளது. எனவே போலீசாருக்கு கண்ணாமூச்சு காட்டும் ஸ்ரீதர் விரைவில் பிடிபடுவார் என்று கூறப்படுகிறது.
இது குறித்து காஞ்சீபுரம் போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமனி கூறும் போது, “ஸ்ரீதர் மகனிடம் தொடர்ந்து விசாரணை நடத்த உள்ளோம்.
ஸ்ரீதர் குறித்து தகவல்கள் கிடைத்து உள்ளன. அவரை பிடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகிறோம். விரைவில் ஸ்ரீதரை பிடிப்போம்” என்றார்.
தலைமறைவான ரவுடி ஸ்ரீதர் தற்போது இலங்கையில் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்து உள்ளது.
தூதரகம் மூலம் ஸ்ரீதரை பிடிக்கும் முயற்சியில் போலீசார் இறங்கி உள்ளதாக தெரிகிறது.
காஞ்சீபுரத்தை அடுத்த திருப்பருத்திகுன்றத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர், பிரபல ரவுடி. இவர் மீது கொலை, ஆள் கடத்தல், மிரட்டி நிலம் அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
காஞ்சீபுரம் மாவட்ட போலீசாரால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட உடன் கடந்த 4 ஆண்டு களுக்கு முன்பு ரவுடி ஸ்ரீதர் வெளிநாடு தப்பிச்சென்று விட்டார். அவர் துபாயில் இருப்பதாக கூறப்படுகிறது.
ரவுடி ஸ்ரீதருக்கு குமாரி என்ற மனைவியும், சந்தோஷ் குமார் என்ற மகனும், 2 மகளும் உள்ளனர். இவர்களில் சந்தோஷ்குமார் லண்டனில் பி.பி.ஏ. படித்து வந்தார். குமாரியும் அவரது 2 மகளும் காஞ்சீபுரத்தில் வசித்து வருகிறார்கள்.
ஸ்ரீதர் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாட் டில் இருந்து இந்தியாவுக்கு வந்தால் தகவல் தெரிவிக்கு மாறு அனைத்து விமான நிலையங்களுக்கும் போலீசார் மற்றும் அமலாக்கத்துறையினர் தகவல் தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் ஸ்ரீதரின் மகன் சந்தோஷ்குமார் லண்டனில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்திருப்பதாக நேற்று அதிகாலை காஞ்சீபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து காஞ்சீபுரம் போலீசார் விரைந்து சென்று விமான நிலையத்தில் இருந்த சந்தோஷ்குமாரை விசாரணைக்காக காஞ்சீபுரத்துக்கு அழைத்து வந்தனர். அவரிடம் பெரிய காஞ்சீபுரம் போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
ஸ்ரீதர் தற்போது எங்கே உள்ளார்? அவரது நடவடிக்கை என்ன? எங்கெங்கு சொத்துகள் உள்ளன? என்று துருவித்துருவி விசாரணை நடத்தினர். சுமார் 15 மணி நேர விசாரணைக்கு பின்னர் நேற்று நள்ளிரவு சந்தோஷ் குமாரை போலீசார் விடுவித்தனர்.
மேலும் எப்போது அழைத்தாலும் மீண்டும் ஆஜராக வேண்டும் என்று அவருக்கு நிபந்தனை விதித்துள்ளனர்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஸ்ரீதரின் மனைவி குமாரியிடம் போலீசார் விசாரணை நடத்தி இருந்தனர். தற்போது அவரது மகனிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சட்டவிரோதமாக வாங்கிய சொத்துக்கள் அனைத்தையும் ஸ்ரீதர் அவரது மனைவி குமாரி மற்றும் உறவினர்கள் பெயரில் வாங்கி வைத்திருந்தார். சுமார் ரூ. 100 கோடிக்கு மேலான சொத்துக்களை அமலாக்கப்பிரிவினர் ஏற்கனவே முடக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
காஞ்சீபுரம் மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே உள்ள தேன்பாக்கம் தேனியம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது. விழாவையொட்டி பொங்கல் வழிபாடு, திருக்கல்யாணம், சாமி வீதி உலா நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவையொட்டி அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
ஒரகடத்தை அடுத்த வடக்குப்பட்டி பகுதியில் தனியார் பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் மாணவ-மாணவிகளை பள்ளி பஸ்சில் அழைத்து வருவது வழக்கம். இன்று காலை குறிஞ்சிபட்டு உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் உள்ள சுமார் 60 மாணவ-மாணவிகளை அழைத்துக்கொண்டு பள்ளி பஸ் வந்தது.
வடக்குபட்டுஅருகே வந்த போது எதிரே வந்த வாகனத்துக்கு வழி விடுவதற்காக பஸ்சை டிரைவர் திருப்பினார். இதில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதி சரிந்தது. மின் கம்பம் உடையாததால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படவில்லை. அதிர்ஷ்டவசமாக 60 மாணவ-மாணவிகள் உயிர் தப்பினர். இந்த விபத்தில் 10 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
சேதமடைந்த மின்கம்பத்தை உடனடியாக மாற்ற மின் ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.
கூடுவாஞ்சேரி:
கூடுவாஞ்சேரியை அடுத்த சீனிவாசபுரம் கே.கே. புரத்தை சேர்ந்தவர் ரகு (வயது 27). இவர் மீது கொலை, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன.
கடந்த டிசம்பர் மாதம் செங்கல்பட்டு அருகே கூட்டாளிகளுடன் சேர்ந்து சதீஷ் என்பவரை அவர் வெட்டி கொலை செய்திருந்தார். இந்த வழக்கில் கைதான ரகு ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இந்த நிலையில் ரகுவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் முடிவு செய்திருந்ததாக தெரிகிறது. இதுபற்றி அறிந்ததும் ரகு கவலை அடைந்தார். குடும்பத்தை கவனிக்க ஆள் இல்லாமல் போய்விடும் என்று நண்பர்களிடம் புலம்பினார்.
நேற்று இரவு அவர் திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 1-ந்தேதி முதல் குடும்ப அட்டைகளுக்கு மாற்றாக மின்னணு குடும்ப அட்டைகள் (ஸ்மார்ட் கார்டு) வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது காஞ்சீபுரம் மாவட்டத்தில் 6 லட்சத்து 55 ஆயிரத்து 46 குடும்ப அட்டைகள் வழக்கத்தில் உள்ளன.
மாவட்டம் முழுவதும் 2 லட்சத்து 78 ஆயிரத்து 530 மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ளவர்களுக்கு அச்சடிக்கும் பணி நடந்து வருகிறது.
ஆதார் பதிவில் குடும்ப தலைவரின் புகைப்படம் தெளிவில்லாமல் இருப்பதாலும், குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் ஆதார் எண் இணைக்கப்படாமல் இருப்பதாலும் ஸ்மார் கார்டுகள் அச்சடிக்க காலதாமதமாகிறது.
இதையடுத்து மின்னணு குடும்ப அட்டைகள் உடனடியாக அச்சடித்து வழங்கிட ஆதார் எண் இணைப்பு மற்றும் குடும்ப தலைவர் புகைப்படம் சேகரிக்கும் பணி தற்போது அந்தந்த நியாய விலைக்கடைகளில் நடந்து வருகிறது. இப்பணிகளில் தனிக்கவனம் செலுத்தி விரைந்து முடிக்க இன்று 6-ந் தேதி முதல் வரும் 13-ந்தேதி வரை வரும் 7-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நீங்கலாக அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
தினசரி பணிகளோடு ஆதார் எண் இணைத்தல் மற்றும் புகைப்படம் பெறும் பணியினையும் விற்பனையாளர்கள் மேற்கொள்வர்.
ஆகவே இதுவரை மின்னணு குடும்ப அட்டை பெறாதவர்கள் இந்த சிறப்பு முகாமில் தங்கள் பகுதி நியாயவிலைக்கடைகளில் ஆதார் எண்ணை இணைக்கவும், குடும்பத்தலைவர் அல்லது தலைவியின் புகைப்படத்தை நேரில் அளிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் பகுதியில் இன்னும் பெரும்பாலானோர் ஆதார் எண் பெறாமல் உள்ளனர். இதைத் தொடர்ந்து திருவள்ளூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள ஆதார் மையத்தில் தினமும் கூட்டம் அலைமோதுகிறது.
காலையிலேயே 100-க்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் காத்து கிடக்கிறார்கள். பல மணி நேரம் காத்திருந்து ஆதார் எண்ணுக்கு புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.
செங்கல்பட்டு டவுன், அனுமந்த் புத்தேரி பழைய ஜி.எஸ்.டி. சாலையில் வசித்து வருபவர் சீனிவாசன். பா.ஜனதா கட்சியில் நகர துணைத் தலைவராக உள்ளார். வீட்டு முன்பு மளிகை கடை வைத்து இருக்கிறார்.
நேற்று முன்தினம் இரவு அவர் கடையை மூடிவிட்டு குடும்பத்துடன் வீட்டில் தூங்கினார்.
நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் சீனிவாசன் வீட்டின் முன் பகுதியில் பெட்ரோல் குண்டை வீசி தப்பி சென்று விட்டனர்.
பெட்ரோல் குண்டு வெடித்து சிதறிய சத்தம் கேட்டு சீனிவாசன் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளியே வந்தனர்.
அதிர்ச்சி அடைந்த அவர்கள் செங்கல்பட்டு டவுன் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சீனிவாசன் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வருகிறார். இதில் பலருடன் அவருக்கு தகராறு இருந்ததாக தெரிகிறது.
இந்த மோதலில் எதிர்தரப்பினர் சீனிவாசன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி இருக்கலாம் என்று தெரிகிறது.
பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்களின் உருவம் சீனிவாசன் வீட்டின் அருகே உள்ள மற்றொரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
அதில் மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வருவதும், பின்னர் ஒருவன் மட்டும் இறங்கி சீனிவாசன் வீட்டில் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு கூட்டாளியுடன் தப்பி செல்வதும் பதிவாகி இருக்கிறது.
கேமராவில் பதிவான வாலிபர்களின் உருவம் மற்றும் மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பா.ஜனதா பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு விபசார தடுப்பு பிரிவு போலீசார், கேரளாவைச் சேர்ந்த கார்த்திக் (வயது 25) என்பவரை விபசார வழக்கில் கைது செய்தனர். இந்த வழக்கில் கார்த்திக்கை ஜாமீனில் விடுதலை செய்து மாவட்ட செசன்சு கோர்ட்டு உத்தரவிட்டது.
அப்போது கார்த்திக்கின் ஆதார் அட்டையை ஆலந்தூர் கோர்ட்டில் ஒப்படைக்கும்படியும் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி ஆலந்தூர் கோர்ட்டில் கார்த்திக்கின் ஆதார் அட்டை நகலை சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த பாபு (43), பன்னீர்செல்வம் (40) ஆகியோர் தாக்கல் செய்தனர்.
அந்த ஆதார் ஆவணங்களை ஆலந்தூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு சுல்தான் ஆரிபீன் ஆய்வு செய்தபோது அவை போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது.
இதுபற்றி பரங்கிமலை போலீசில் புகார் செய்யும்படி மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதையடுத்து ஆலந்தூர் நீதிமன்ற எழுத்தர் லோகநாதன், பரங்கிமலை போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாபு மற்றும் பன்னீர்செல்வத்தை கைது செய்தனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






