என் மலர்
செய்திகள்

ஆலந்தூர் கோர்ட்டில் போலி ஆதார் அட்டை தாக்கல் செய்த 2 பேர் கைது
விபசார வழக்கில் ஜாமீன் பெறுவதற்காக ஆலந்தூர் கோர்ட்டில் போலியான ஆதார் அட்டையை தாக்கல் செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆலந்தூர்:
சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு விபசார தடுப்பு பிரிவு போலீசார், கேரளாவைச் சேர்ந்த கார்த்திக் (வயது 25) என்பவரை விபசார வழக்கில் கைது செய்தனர். இந்த வழக்கில் கார்த்திக்கை ஜாமீனில் விடுதலை செய்து மாவட்ட செசன்சு கோர்ட்டு உத்தரவிட்டது.
அப்போது கார்த்திக்கின் ஆதார் அட்டையை ஆலந்தூர் கோர்ட்டில் ஒப்படைக்கும்படியும் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி ஆலந்தூர் கோர்ட்டில் கார்த்திக்கின் ஆதார் அட்டை நகலை சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த பாபு (43), பன்னீர்செல்வம் (40) ஆகியோர் தாக்கல் செய்தனர்.
அந்த ஆதார் ஆவணங்களை ஆலந்தூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு சுல்தான் ஆரிபீன் ஆய்வு செய்தபோது அவை போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது.
இதுபற்றி பரங்கிமலை போலீசில் புகார் செய்யும்படி மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதையடுத்து ஆலந்தூர் நீதிமன்ற எழுத்தர் லோகநாதன், பரங்கிமலை போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாபு மற்றும் பன்னீர்செல்வத்தை கைது செய்தனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story