என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்ரீபெரும்புதூரில் தாசில்தாரை கைது செய்யக்கோரி வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
    X

    ஸ்ரீபெரும்புதூரில் தாசில்தாரை கைது செய்யக்கோரி வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

    ஸ்ரீபெரும்புதூரில் தாசில்தாரை கைது செய்யக்கோரி ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் இ-சேவை மையத்தில் ஆதார் அட்டையில் செல் நெம்பரை இணைப்பதற்காக கடந்த 5-ந்தேதி 2 வக்கீல்கள் வந்தனர்.

    அப்போது வருவாய் துறையினருக்கும் வக்கீல்களுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.

    இது குறித்து இரு தரப்பினரும் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் வக்கீல்களை தாக்கிய தாசில்தார் உள்பட வருவாய்துறை ஊழியர்களை கைது செய்ய வேண்டும். பணி நீக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஸ்ரீபெரும்புதூர் மணிக் கூண்டு அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க தலைவர் பழனி தலைமை தாங்கினார்.

    இதில் திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் பல்வேறு நீதிமன்றங்களை சேர்ந்த வக்கீல்கள் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் உள்பட 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×