என் மலர்
செய்திகள்

ஒரகடம் அருகே மின்கம்பத்தில் மோதி பஸ் சரிந்தது: 60 மாணவ-மாணவிகள் தப்பினர்
ஒரகடம் அருகே மின்கம்பத்தில் மோதி பஸ் சரிந்தது, அதிர்ஷ்டவசமாக 60 மாணவ-மாணவிகள் உயிர் தப்பினர். இந்த விபத்தில் 10 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
ஸ்ரீபெரும்புதூர்:
ஒரகடத்தை அடுத்த வடக்குப்பட்டி பகுதியில் தனியார் பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் மாணவ-மாணவிகளை பள்ளி பஸ்சில் அழைத்து வருவது வழக்கம். இன்று காலை குறிஞ்சிபட்டு உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் உள்ள சுமார் 60 மாணவ-மாணவிகளை அழைத்துக்கொண்டு பள்ளி பஸ் வந்தது.
வடக்குபட்டுஅருகே வந்த போது எதிரே வந்த வாகனத்துக்கு வழி விடுவதற்காக பஸ்சை டிரைவர் திருப்பினார். இதில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதி சரிந்தது. மின் கம்பம் உடையாததால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படவில்லை. அதிர்ஷ்டவசமாக 60 மாணவ-மாணவிகள் உயிர் தப்பினர். இந்த விபத்தில் 10 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
சேதமடைந்த மின்கம்பத்தை உடனடியாக மாற்ற மின் ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.
Next Story






