என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    போலீஸ் போல் நடித்து சென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை, 7 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #jewelryrobbery

    செங்கல்பட்டு:

    சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர்.

    பழங்கால கோவில்களில் கொள்ளையடித்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சிலைகள் இதில் பறிமுதல் செய்யப்பட்டது.

    சென்னையிலும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தொழில் அதிபர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வீடுகளில் சோதனை நடத்தி பழங்கால சிலைகளை மீட்டனர்.

    சைதாப்பேட்டையில் ரன்வீர்ஷா என்ற தொழில் அதிபர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் மூட்டை மூட்டையாக சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரது பெண் தோழியான கிரன் ராவின் வீட்டிலும் சிலைகள் பதுக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தி சிலைகளை மீட்டனர். இந்த வழக்கில் கிரன்ராவ் கோர்ட்டில் முன் ஜாமீன் பெற்று வழக்கு விசாரணையை எதிர்கொண்டு வருகிறார்.

    சென்னை அண்ணா சாலையில் அமெதீஸ்ட் என்ற பெயரில் கிரன்ராவுக்கு சொந்தமான நகைக்கடை உள்ளது. இங்கு வெளிநாட்டினர் விரும்பி அணியும் விலை உயர்ந்த நகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் சார்பில் மதுரையில் கடந்த 26, 27 ஆகிய தேதிகளில் நகை கண்காட்சி நடைபெற்றது.

    இந்த கண்காட்சி முடிவடைந்ததும் அங்கு வைக்கப்பட்டிருந்த நகைகளை ஒரு காரில் எடுத்துக்கொண்டு ஊழியர்கள் நேற்று மாலை சென்னை திரும்பி கொண்டிருந்தனர்.

    நகைக்கடை மேலாளர் தயாநிதி மற்றும் ஊழியர்கள் 4 பேர் காரில் ரூ.11 கோடி மதிப்பிலான நகை, 7½ லட்சம் ரொக்கபணம் ஆகியவற்றை எடுத்து வந்தனர். செங்கல்பட்டு சோதனை சாவடி அருகில் வைத்து இவர்கள் வந்த காரை இன்னொரு காரில் வந்தவர்கள் வழி மறித்தனர்.

    காரில் இருந்து போலீஸ் சீருடை அணிந்த 2 பேர் இறங்கினார்கள். அவர்களுடன் சாதாரண உடையில் மேலும் 5 பேர் இருந்தனர். 7 பேரும் சேர்ந்து தங்களை சிலை தடுப்பு போலீசார் என்று அறிமுகம் செய்து கொண்டனர்.

    தொழில் அதிபர் கிரன்ராவின் பெயரை சொல்லி, அவர் மீது சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் வழக்கு இருப்பதாகவும், காரை சோதனையிட வேண்டும் என்று கூறி அந்த கும்பல் காரின் அனைத்து பகுதிகளையும் சோதனை செய்தனர். அப்போது காரில் இருந்த நகை, பணத்தை அந்த கும்பல் தாங்கள் கொண்டு வந்த பையில் எடுத்து வைத்தது.

    பின்னர் நகைக்கடை ஊழியர்களிடம் அண்ணா சாலையில் உள்ள உங்கள் கடைக்கு நாங்கள் முன்னால் சென்று கொண்டிருக்கிறோம். நீங்கள் பின் தொடர்ந்து வாருங்கள் என்று கூறிவிட்டு 7 பேரும் தங்கள் காரில் ஏறிச் சென்று விட்டனர்.

    இதனை நம்பி மேலாளர் தயாநிதி மற்றும் ஊழியர்கள் நகைக்கடைக்கு சென்று பார்த்தனர். ஆனால் அங்கு அதுபோல யாரும் இல்லை. இதுபற்றி நகைக்கடை அதிபர் கிரன்ராவிடம் முறையிட்டனர். அவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு சென்று விசாரிக்குமாறு கூறினார்.

    இதனை தொடர்ந்து கிண்டியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு சென்று ஊழியர்கள் விசாரித்தனர். அப்போது போலீஸ் என்று கூறி ரூ.11 கோடி நகை, 7½ ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றது பற்றி தெரிவித்தனர்.

    இதற்கு பதிலளித்த போலீசார் நாங்கள் யாரும் அதுபோன்று சோதனை செய்யவில்லை என்று தெரிவித்தனர். இதன் பிறகே நகைக்கடை ஊழியர்களுக்கு தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது. போலீஸ் என்று கூறி கொள்ளையர்கள் நகை-பணத்தை வாரிச்சுருட்டிக் கொண்டு சென்று உள்ளனர்.

    இதுபற்றி செங்கல்பட்டு தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த துணிகர கொள்ளை சம்பவம் பற்றி போலீசார் வழக்குபதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. கந்தன், இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    தனிப்படை போலீசார் தப்பி ஓடிய கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள். செங்கல்பட்டு சோதனை சாவடி பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். கார் நம்பரை வைத்து கொள்ளை கும்பலை பிடிக்க வலை விரிக்கப்பட்டுள்ளது.

    கோவையில் நேற்று முன்தினம் பட்டப்பகலில் தனியார் நிதி நிறுவனத்தில் பெண் ஊழியர்களை தாக்கி ரூ.2 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பு அடங்கும் முன்னரே சென்னை அருகே பிரபல நகைக்கடை ஊழியர்களிடம் போலீஸ் போல நடித்து பல கோடி மதிப்பிலான நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கொள்ளை கும்பலை பிடிக்க சென்னையிலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். #jewelryrobbery

    வீட்டு வேலைக்கு அழைத்து சென்ற சிறுமியை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள காதலனை தேடி வருகிறார்கள். #girlmolestation

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தை அடுத்த உத்தரமேரூர் மானாம்பதி கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த அற்புதராஜ் மற்றும் வேளாங்கண்ணி ஆகியோர் சென்னையில் வீட்டு வேலைக்கு ஆள் தேவை எனக் கூறி அழைத்து சென்றனர்.

    குடும்ப வறுமையால் சிமியை வீட்டு வேலைக்கு பெற்றோர் அனுப்பி வைத்தனர்.

    ஈஸ்டர் பண்டிகைக்கு வீட்டிற்கு வந்த சிறுமி தான் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவும், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் வன் கொடுமையில் வேளாங்கண்ணியும், அற்புதராஜும் ஈடுபடுத்தியதாகவும் கூறியதை தொடர்ந்து இந்த சம்பவம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

    போலீஸ் சூப்பிரண்டிடம் சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரை தொடர்ந்து போலீசார் தனிப்படை அமைத்து வேளாங்கண்ணியையும் அற்புதராஜுவையும் தேடி வருகிறார்கள்.

    போலீசார் விசாரணையில் வேளாங்கண்ணியின் கணவர் மறைவிற்கு பிறகு 2 மகன்களுடன் காஞ்சீபுரத்தில் வசித்து வருகிறார். அற்புதராஜின் சொந்த ஊர் நெமிலி. இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கோனேரி குப்பத்தில் தனியாக வீடு எடுத்து வசித்து வருகிறார்கள்.

    இருவரும் கிராமங்களில் வறுமையில் உள்ள சிறுமிகளை கண்டறிந்து பணக்காரர்கள் வீடுகளுக்கு வேலைக்கு அனுப்பும் தொழிலை செய்து வருவது தெரியவந்தது. போலீசார் தேடுவது தெரிந்ததும் இருவரும் தலைமறைவாகி விட்டனர்.

    இந்த நிலையில் கோனேரிக்குப்பம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருந்த வேளாங்கண்ணியை போலீசார் கைது செய்தனர். மகளிர் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பாலியல் வன்கொடுமையில் எத்தனை சிறுமிகளை பயன்படுத்தினார்? யார்- யாருக்கு அவர்களை அனுப்பி வைத்தார்? இதில் வேறு யாரும் முக்கிய புள்ளிகள் ஈடுபட்டு இருக்கிறார்களா? என விசாரணை நடைபெற்று வருகிறது. அற்புதராஜையும் தொடர்ந்து தேடி வருகிறார்கள். #girlmolestation

    காஞ்சிபுரம் அருகே 6 மாத கர்ப்பிணி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த ஆற்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் திவ்யா (25). இவரது கணவர் கார்த்திக் (30). இவர் கட்டிடத் தொழிலாளி. இவர்களுக்கு திருமணமாகி 3 வருடங்கள் ஆகிறது. இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது. திவ்யா தற்போது 6 மாதம் கர்ப்பமாக உள்ளார்.

    இந்நிலையில் அனைவரும் தூங்கிய பிறகு நள்ளிரவில் வீட்டில் உள்ள மற்றொரு அறையில் உள்ள மின் விசிறியில் திவ்யா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து திவ்யாவின் தந்தை வேலுமணி மாநகர போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

    இதேபோன்று காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஐயப்பா நகரைச் சேர்ந்தவர் தியாகு (30). திருமணமாகாதவர். இவர் நேற்று இரவு குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    உத்திரமேரூர் அருகே வீட்டு வேலைக்கு அழைத்து சென்று சிறுமிக்கு பாலியல் கொடுமை செய்த பெண்-காதலனை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. #girlmolestation

    காஞ்சீபுரம்:

    உத்திரமேரூர் அருகே உள்ள மானாம்பதி கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் வேளாங்கண்ணி. இவர் அதே பகுதியை சேர்ந்த தம்பதியிடம் 16 வயது மகளை வீட்டு வேலைக்காக அழைத்து சென்றார்.

    கடந்த வாரம் சிறுமி வீட்டிற்கு வந்த போது வேளாங்கண்ணியும், அவரது காதலன் அற்புதராஜும் தன்னை சென்னை உள்பட பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் கொடுமை செய்ததாக பெற்றோரிடம் கூறினார்.

    அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து காஞ்சீபுரம் மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானியிடம் புகார் அளித்தனர்.

    இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. புகார் பற்றி அறிந்ததும் வேளாங்கண்ணியும், அவரது காதலன் அற்புதராஜும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை பிடிக்க டி.எஸ்.பி.மனோகரன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    சிறுமியை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிய போது அவர்கள் அதனை வீடியோவாகவும் பதிவு செய்து உள்ளனர். இதனை வைத்தே சிறுமியை மிரட்டி தொடர்ந்து பலருக்கு பாலியலுக்காக அனுப்பி உள்ளனர்.

    இதில் வேளாங்கண்ணி, அற்புதராஜுடன் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவர்கள் கும்பலாக இதேபோல் பலரை வேலைக்கு அழைத்து சென்று பாலியலில் ஈடுபடுத்தி இருக்கலாம் என்று தெரிகிறது.

    இது தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி ஓடிய வேளாங்கண்ணி, அற்புதராஜ் சிக்கினால்தான் இந்த விவகாரத்தில் மேலும் பல விவரங்கள் வெளியாகும். #girlmolestation

    ஓடுபாதையில் சென்றபோது சென்னை விமானத்தில் கோளாறு ஏற்பட்டு இருப்பதை விமானி கடைசி நேரத்தில் கண்டு பிடித்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. #chennaiairport #chennaiflight

    ஆலந்தூர்:

    சென்னையில் இருந்து அகமதாபாத்துக்கு இன்று காலை 6.50 மணிக்கு விமானம் புறப்பட தயாராக இருந்தது. 179 பயணிகள் அதில் இருந்தனர்.

    ஓடுபாதையில் விமானம் சென்று கொண்டு இருந்தபோது எந்திரத்தில் கோளாறு இருப்பதை விமானி கண்டு பிடித்தார். உடனடியாக விமானத்தை மேலும் இயக்காமல் ஓடுபாதையிலேயே நிறுத்தி விட்டு விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கப்பட்டு ஓய்வு அறையில் தங்க வைக்கப்பட்டனர்.

    விமானத்தில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். மாற்று விமானத்தில் பயணிகள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று விமான நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனால் குறித்த நேரத்துக்கு செல்ல முடியாமல் பயணிகள் தவித்தனர்.

    விமானத்தில் கோளாறு ஏற்பட்டு இருப்பதை விமானி கடைசி நேரத்தில் கண்டு பிடித்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. #chennaiairport #chennaiflight

    செங்கல்பட்டு அருகே தாயை பெட்ரோல் உற்றி எரித்து கொன்ற மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செங்கல்பட்டு:

    வண்டலூரை அடுத்த ஊனமாஞ்சேரி இருளர் நகரை சேர்ந்தவர் வைரமணி. இவருடைய மனைவி சாந்தி (46). இவர்கள் மகன் ஆனந்தராஜ் (26).

    வைரமணி இறந்து விட்டார். எனவே சாந்தி மகன் ஆனந்தராஜுடன் வசித்து வந்தார். இவருக்கு தனது தாய் வேறு ஆண்களுடன் பழகுவதாக சந்தேகம் இருந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் ஆனந்தராஜ் வேலைக்கு சென்றுவிட்டு மதுபோதையில் வீடு திரும்பினார். அப்போது அவருடைய தாய் சாந்தி வீட்டின் வெளியே ஒரு ஆணுடன் பேசிக்கொண்டு இருந்தார். இதனால் ஆனந்த ராஜின் சந்தேகம் மேலும் அதிகரித்தது.

    எனவே ஆத்திரம் அடைந்த அவர் தன் தாயை உருட்டுக்கட்டையால் தாக்கினார். இதில் சாந்தி சுருண்டு விழுந்தார். அவர் இறந்துவிட்டதாக கருதி ஆனந்தராஜ் தாயை அருகில் உள்ள ஏரிக்கு கொண்டு சென்றார். அங்கு சாந்தி உடலில் பெட்ரோல் ஊற்றி எரித்தார். அப்போது அங்கு வந்த சாந்தியின் சகோதரர் மணிகண்டன் இதை பார்த்து விட்டார். தன்னை காட்டிக் கொடுத்துவிடுவார் என்று பயந்த ஆனந்தராஜ் தனது தாய்மாமா மணிகண்டன் மீதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி ஓடி விட்டார்.

    தீக்காயம் அடைந்த மணி கண்டன் கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    இந்தநிலையில் ஓட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி இன்று ஆனந்தராஜை கைது செய்தார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
    வீட்டு வேலைக்கு அழைத்து சென்று 16 வயது சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    காஞ்சிபுரம்:

    உத்திரமேரூர் அடுத்த மானாம்பதி கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த தம்பதி காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானியிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17-ந் தேதி எங்கள் பகுதியைச் சேர்ந்த வேளாங்கண்ணி மற்றும் அவரது நண்பரான அற்புதராஜ் ஆகியோர் எங்கள் வீட்டிற்கு வந்து எங்களின் 16 வயது மகளை சென்னையில் உள்ள தங்களது வீட்டுக்கு வேலை செய்ய அனுப்பி வைக்குமாறு கேட்டனர்.

    ஆனால் நாங்கள் வீட்டு வேலைக்கு அனுப்ப முடியாது எனக் கூறி விட்டோம். மீண்டும் சில நாட்கள் கழித்து வந்த அவர்கள் வீட்டு வேலைக்கு மகளை அனுப்புமாறும் வேலை பிடிக்கவில்லை என்றால் அவளை திருப்பி அனுப்பி விடுவதாகவும் கூறினர்.

    இதனை நம்பி நாங்கள் எங்களது மகளை அவர்களுடன் அனுப்பி வைத்தோம்.

    இந்நிலையில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட எங்கள் மகளை ஊருக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டோம். அப்போது வேண்டும் என்றால் நீயே வந்து அழைத்துச் செல் என்று வேளாங்கண்ணியும், அற்புத ராஜூம் அலட்சியமாகக் கூறினர்.

    தொடர்ந்து வற்புறுத்தியதால் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி எங்களது மகளை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டனர். பின்னர் 2 நாட்கள் கழித்து மீண்டும் மகளை அழைத்துச் செல்ல அவர்கள் வந்தனர். ஆனால் எங்கள் மகள் அவர்களுடன் செல்ல மாட்டேன் என்று அழுதபடி கூறினார்.

    இதுபற்றி மகளிடம் கேட்ட போது, வேளாங்கண்ணி மற்றும் அற்புதராஜ் ஆகியோர் தன்னை சென்னை, செங்கல்பட்டு, வடபழனி உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று மிரட்டி பலர் மூலம் பாலியல் வன்கொடுமை செய்தனர். அதனை செல்போனிலும் படம் பிடித்து மிரட்டினர்.

    இதுபற்றி பெற்றோரிடம் கூறினால் ஆபாச வீடியோவை வெளியிடுவதோடு பெற்றோரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டினர் என்று தெரிவித்தாள்.

    மகளுக்கு அற்புதராஜ் போதை மருந்து கொடுத்து சுய நினைவு இழக்கச் செய்து இரவு பகல் பாராமல் பலரால் பாலியல் பலாத்காரம் செய்ய வைத்துள்ளார். மகளுக்கு நடந்த கொடுமைக்கு காரணமாக இருந்த அற்புதராஜ் மற்றும் வேளாங்கண்ணி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    சிறுமியை அற்புதராஜும், வேளாங்கண்ணியும் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அழைத்து சென்று பலருக்கு பாலியல் விருந்து படைத்துள்ளனர்.

    அடுக்குமாடி குடியிருப்புகளில் பல நாட்கள் தங்க வைத்து சிறுமிக்கு பாலியல் கொடுமை நடந்துள்ளது.

    சுமார் 100-க்கும் மேற்பட்டோருடன் அவர்கள் சிறுமியை நெருக்கமாக இருக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த காட்சிகள் அனைத்தையும் அவர்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து உள்ளனர்.

    இதில் அற்புதராஜ், வேளாங்கண்ணியுடன் சேர்ந்து ஒரு கும்பலே சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி உள்ளது.


    சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் செய்திருப்பதை அறிந்ததும், ஒரு கும்பல் அவர்களை மிரட்டி உள்ளனர். ரூ.20 லட்சம் வரை பேரம் பேசி இருக்கிறார்கள். தற்போது இந்த வழக்கை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    எந்தெந்த இடங்களுக்கு அழைத்து சென்றனர் என்பது குறித்து சிறுமியிடம் கேட்டறிந்து வருகின்றனர். இதில் வடபழனியை சேர்ந்த 65 வயது முதியவர் உள்பட பலர் உள்ளனர்.

    சிறுமியின் புகார் பற்றி அறிந்ததும், அற்புதராஜும், வேளாங்கண்ணியும் தலைமறைவாகி விட்டனர். வேளாங்கண்ணிக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. அவரது கணவர் தற்போது அவருடன் இல்லை. இதையடுத்து வேளாங்கண்ணி காதலனான அற்புதராஜுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.

    தப்பிஓடிய அவர்கள் 2 பேரும் சிக்கினால்தான் அவர்களுடன் தொடர்புடையவர்கள் யார் என்ற விவரம் தெரிய வரும்.

    காஞ்சிபுரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமி ஒருவர் ஆட்டோ டிரைவர்களால் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதே போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு 8 வயது சிறுமி ஓட்டல் தொழிலாளியால் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.

    தற்போது காஞ்சிபுரம் அருகே 16 வயது சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கல்லூரியில் சேர விண்ணப்பம் வாங்க சென்ற போது மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதலில் மாணவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாம்பரம்:

    தாம்பரம் அடுத்த கடப்பேரி பகுதியை சேர்ந்தவர் கோதண்டன். இவரது மகன் பிரகாஷ் (வயது 18). பிளஸ்-2 முடித்து உள்ளார்.

    இவர், நண்பர்களான பிளஸ்-2 முடித்த மதுராந்தகத்தை சேர்ந்த எழிலரசன், அரவிந்தன் ஆகியோருடன் குரோம்பேட்டையில் உள்ள தனியார் கலை கல்லூரியில் விண்ணப்பம் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் தாம்பரத்தில் இருந்து சென்று கொண்டிருந்தனர்.

    கடப்பேரி பகுதி அருகே ஜி.எஸ்.டி. சாலையில் சென்றபோது வண்டலூரில் இருந்து பிராட்வே நோக்கி சென்ற அரசு பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பிரகாஷ் உள்பட 3 பேரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.

    இதில் அரசு பஸ்சின் சக்கரம் பிரகாஷின் தலையில் ஏறி இறங்கியது. அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் எழிலரசன், அரவிந்தன் ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

    இது குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்குபதிவு செய்து பஸ் டிரைவரான தண்டையார்பேட்டையை சேர்ந்த பூபதியை கைது செய்தனர்.

    தற்கொலைக்கு மறுத்த மனைவியை கழுத்தை அறுத்து கொன்ற கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    செம்மஞ்சேரியை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி வாணி. இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. கடன் பிரச்சினையால் மோகன் தவித்து வந்தார்.

    கடந்த 8-ந் தேதி வாணி புதுகல்பாக்கத்தில் உள்ள தாய் வீட்டுக்கு மகளுடன் வந்து இருந்தார். அப்போது அங்கு வந்த மோகன் கடன் சுமை காரணங்களை கூறி குடும்பத்துடன் தற்கொலை செய்ய மனைவியை வற்புறுத்தியதாக தெரிகிறது. இதற்கு வாணி மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த மோகன் அரிவாளால் மனைவி வாணியின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார்.

    மோகனும் வி‌ஷம் குடித்து விட்டு தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை முடிந்த மோகனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.

    குன்றத்தூர் அருகே பெட்ரோல் பங்க் ஊழியரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் வாக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    குன்றத்தூரை அடுத்த பழந்தண்டலம் அம்பேத்கார் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர். இவருடைய மகன் தீபக்ராஜ் (25).

    குன்றத்தூரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் தீபக்ராஜ் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 15-ந்தேதி நண்பர் ஒருவரின் திருமணத்துக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றார்.

    அதன்பிறகு தீபக்ராஜ் வீடு திரும்பவில்லை. தெரிந்தவர்களிடம் விசாரித்து பார்த்தும் அவர் நிலை என்ன என்பது தெரியவில்லை.

    இதையடுத்து, தனது மகனை காணவில்லை என்று குன்றத்தூர் போலீஸ் நிலையத்தில் பாஸ்கர் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான தீபக்ராஜை தேடி வந்தனர்.

    பல்வேறு இடங்களில் தேடியும் பயன் இல்லை. இந்த நிலையில் தாம்பரம் அருகே முள்புதரில் ஒரு வாலிபர் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    போலீசார் அங்கு சென்ற பார்த்தனர். அப்போது, தாம்பரத்தை அடுத்த வரதராஜபுரத்தில் தீபக்ராஜ் வெட்டுக் காயங்களுடன் ஒரு முள்புதரில் பிணமாக கிடந்தார்.

    அவரை யாரோ சரமாரியாக வெட்டி கொலை செய்து இருப்பது தெரிய வந்தது. உடல் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டது.

    பெட்ரோல் பங்க் ஊழியர் தீபக்ராஜ் கொலை செய்யப்பட்டதற்கு முன் விரோதம் காரணமா? காதல் விவகாரமா? அல்லது வேறு காரணமா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.

    அவரை கொலை செய்தது யார்? ஏற்கனவே அறிமுகமானவர்களா? அல்லது மர்ம கும்பல் கடத்திச் சென்று கொன்றதா என்பது குறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    எழும்பூர் நோக்கி வந்த அனந்தபுரி மற்றும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.
    தாம்பரம்:

    சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று மாலை நடக்கிறது. இதில் பங்கேற்க துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேற்று மாலை டெல்லியில் இருந்து சென்னை வந்தார்.

    அடையாறில் தங்கி இருந்த அவர் ஆந்திர மாநிலம் சித்தூரில் இன்று காலை நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள தனி ரெயிலில் பயணம் செய்ய திட்டமிட்டு இருந்தார்.

    திரிசூலம் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 7.20 மணிக்கு 6 பெட்டிகள் கொண்ட சிறப்பு ரெயிலில் அவர் தடா சென்று பின்னர் மீண்டும் தனி ரெயிலில் சென்னை திரும்ப பயணத் திட்டம் வகுக்கப்பட்டு இருந்தது. அவர் பயணம் செய்வதற்காக தகுந்த போலீஸ் பாதுகாப்புடன் தனி ரெயில் திரிசூலம் ரெயில் நிலையத்திற்கு வந்து நின்றது.

    ஆனால் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வருவதில் தாமதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் தூத்துக்குடியில் இருந்து முத்துநகர் எக்ஸ்பிரசும், திருவனந்தபுரத்தில் இருந்து அனந்தபுரி எக்ஸ்பிரசும் எழும்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. காலை 7 மணிக்கு தாம்பரம் நிலையம் வந்து சேர்ந்த முத்துநகர் எக்ஸ்பிரஸ் அங்கிருந்து புறப்பட சிக்னல் கொடுக்கப்படவில்லை.

    வெங்கையாநாயுடு செல்ல வேண்டிய தனி ரெயில் புறப்பட தாமதம் ஆனதால் முத்துநகரும், அதனை தொடர்ந்து வந்த அனந்தபுரி எக்ஸ்பிரசும் தாம்பரத்தில் நிறுத்தப்பட்டன. தனி ரெயில் எழும்பூர், சென்ட்ரல் வழியாக செல்ல வேண்டும் என்பதால் அதே வழித்தடத்தில்தான் முத்துநகரும், அனந்தபுரியும் வர வேண்டியது இருந்தது. இதனால் 2 ரெயில்களும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நிறுத்தப்பட்டன.

    மேலும் எழும்பூர் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிறுத்தப்பட்டால் அந்த வழியாக தனி ரெயில் செல்ல வழி கிடையாது என்பதால் தென் மாவட்ட ரெயில்கள் இரண்டையும் தாம்பரத்தில் நிறுத்தி விட்டனர்.

    துணை ஜனாதிபதி பயணம் தாமதம் இல்லாமல் தொடங்கி இருக்குமானால் முத்துநகர், அனந்தபுரி ரெயில்கள் நிறுத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்காது. ஆனால் அவர் செல்லக்கூடிய தனி ரெயில் 7.50 மணிக்கு தான் புறப்பட்டு சென்றது. அதனால் தாம்பரத்தில் நிறுத்தப்பட்ட 2 ரெயில்களிலும் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

    சிலர் மின்சார ரெயில்களில் ஏறி வீட்டிற்கு சென்றனர். வயதானவர்கள், குழந்தையுடன் வந்தவர்கள் மட்டுமே அந்த ரெயில்களில் காத்து கிடந்தனர்.
    சென்னை விமான நிலையத்தில் பெங்களூர் செல்ல வந்த விமானி மயக்கம் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மரணமடைந்தார்.
    ஆலந்தூர்:

    திருச்சியை சேர்ந்தவர் பெட்ரிக் ஜோசப் (வயது 61). இவர் மனைவி மற்றும் மகளுடன் பெங்களூர் செல்வதற்காக நேற்று நள்ளிரவு சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். பரிசோதனைகள் அனைத்தையும் முடித்து விட்டு பெட்ரிக் ஜோசப் குடும்பத்துடன் நின்று கொண்டு இருந்தார்.

    அப்போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதில் அவர் சுருண்டு விழுந்தார். உடனடியாக விமான நிலைய ஊழியர்கள் பெட்ரிக் ஜோசப்பை மீட்டு விமான நிலையத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பெட்ரிக் ஜோசப் பரிதாபமாக இறந்தார். அவர் மாரடைப்பால் இறந்து இருப்பது தெரிய வந்தது.
    ×