என் மலர்
நீங்கள் தேடியது "Semmancheri"
மாமல்லபுரம்:
செம்மஞ்சேரியை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி வாணி. இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. கடன் பிரச்சினையால் மோகன் தவித்து வந்தார்.
கடந்த 8-ந் தேதி வாணி புதுகல்பாக்கத்தில் உள்ள தாய் வீட்டுக்கு மகளுடன் வந்து இருந்தார். அப்போது அங்கு வந்த மோகன் கடன் சுமை காரணங்களை கூறி குடும்பத்துடன் தற்கொலை செய்ய மனைவியை வற்புறுத்தியதாக தெரிகிறது. இதற்கு வாணி மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த மோகன் அரிவாளால் மனைவி வாணியின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார்.
மோகனும் விஷம் குடித்து விட்டு தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை முடிந்த மோகனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.
சோழிங்கநல்லூர்:
செம்மஞ்சேரி, சுனாமி குடியிருப்பில் வசித்து வருபவர் அருள்சாமி. இவரது மகன் ஜான் போஸ்கோ (வயது 25), பெயிண்டர். இவர் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்தார். இதனை அவரது தாய் கண்டித்தார்.
இதனால் மனவேதனை அடைந்த ஜான்போஸ்கோ, மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து செம்மஞ்சேரி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
சோழிங்கநல்லூர்:
செம்மஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 58), தொழிலாளி. இவர் சுனாமி குடியிருப்பில் வசிக்கும் மகளை பார்ப்பதற்காக சைக்கிளில் சென்றார்.
சுனாமி குடியிருப்பு சந்திப்பில் வந்து கொண்டிருந்த போது பின்னால் வந்த மாநகர பஸ் திடீரென சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த தாமோதரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.






