என் மலர்
நீங்கள் தேடியது "passengers suffocate"
ஆலந்தூர்:
சென்னையில் இருந்து அகமதாபாத்துக்கு இன்று காலை 6.50 மணிக்கு விமானம் புறப்பட தயாராக இருந்தது. 179 பயணிகள் அதில் இருந்தனர்.
ஓடுபாதையில் விமானம் சென்று கொண்டு இருந்தபோது எந்திரத்தில் கோளாறு இருப்பதை விமானி கண்டு பிடித்தார். உடனடியாக விமானத்தை மேலும் இயக்காமல் ஓடுபாதையிலேயே நிறுத்தி விட்டு விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கப்பட்டு ஓய்வு அறையில் தங்க வைக்கப்பட்டனர்.
விமானத்தில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். மாற்று விமானத்தில் பயணிகள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று விமான நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனால் குறித்த நேரத்துக்கு செல்ல முடியாமல் பயணிகள் தவித்தனர்.
விமானத்தில் கோளாறு ஏற்பட்டு இருப்பதை விமானி கடைசி நேரத்தில் கண்டு பிடித்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. #chennaiairport #chennaiflight






