என் மலர்
ஈரோடு
பெருந்துறை:
பெருந்துறையை அடுத்துள்ள காஞ்சிக்கோவில் கொண்டடையன்காட்டு வலசு பகுதியில் பெருந்துறை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மோகன சுந்தரம், எஸ்ஐ ஜீவா ஆகியோர் கொண்ட குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு மாருதி வேனை நிறுத்தி சோதனை மேற் கொண்டபோது அந்த வேனை ஓட்டி வந்த கவுந்தப்பாடிபுதூர்,மெயின் ரோடு பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி என்பவரது மகன் ரவியிடம் (48) இருந்த முறையான ஆவணங்கள் இல்லாத ரூபாய் 1 லட்சத்து 35 ஆயிரத்து 380ஐ பறிமுதல் செய்தனர்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் கவுந்தப்பாடி வேன் உரிமையாளர்கள் சங்கத்தில் பொருளாளராக உள்ளதும், நேற்று புதுக் கணக்கு பூஜை போட்டு விட்டு அலுவலகத்தில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு ஈரோட்டில் மருத்துவமனையில் உள்ள உறவினர் ஒருவரை பார்க்க செல்வதற்காக வந்ததும் தெரிய வந்தது.
ஆனால் அவர் வைத்திருந்த பணத்திற்கு முறையான ஆவணங்கள் ஏதும் இல்லாததால் அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் பெருந்துறை தாசில்தார் துரைசாமியிடம் ஒப்படைத்தனர். #LokSabhaElections2019
ஈரோடு:
கொடுமுடி அருகே உள்ள வாழநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது45). இவர் கொங்கு தேச மறு மலர்ச்சி மக்கள் கட்சியின் மாநில இளைஞர் அணி இணை செயலாளராக இருந்தார்.
இந்நிலையில் சிவகுமார், வடக்கு புதுபாளையம் சுடுகாடு பகுதியில் தலை உள்பட உடம்பில் வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதை கண்ட அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு கொடுமுடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிவகுமார் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போது சிவக்குமாருக்கு சில பெண்களுடன் கள்ளத் தொடர்பு இருந்ததாக போலீசார் அறிந்தனர்.
இதை வைத்து நடத்திய விசாரணையில் சிவக்குமாரின் கள்ளக்காதலி கொடுமுடி அருகே உள்ள வெங்கம்பூரை சேர்ந்த செல்வி (29) சிக்கினார். போலீசார் நடத்திய வாகன சோதனையின் போது மோட்டார் சைக்கிளில் சென்ற செல்வி மற்றும் சின்னுசாமி என்பவரும் சிக்கினர்.
போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் சிவக்குமாரை கொலை செய்ததை செல்வி ஓப்புக் கொண்டார்.
போலீசாரிடம் அவர் கொடுத்த வாக்கு மூலத்தில் கூறியதாவது.-
எனது கணவர் செந்தில் குமாரும், சிவக்குமாரும் நண்பர்கள். இதன் மூலம் எனக்கும் சிவக்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதுவே எங்களுக்குள் கள்ளத் தொடர்பாக மாறியது.
இந்த நிலையில் சிவக்குமாருடன் எனக்கு தகராறு ஏற்பட்டது. அவர் என்னிடம் மட்டும் தான் உல்லாசமாக இருக்க வேண்டும் வேறுயாரிடமும் இருக்க கூடாது. மீறினால் கொன்று விடுவேன் என்று கூறி மிரட்டல் விடுத்தனர்.
இதனால் அவர் மீது எனக்கு வெறுப்பும் ஆத்திரமும் ஏற்பட்டது. கொலை செய்ய திட்டமிட்டேன்.
என்னுடன் எழுமாத்தூர் மில்லில் வேலை பார்க்கும் சிலருடன் சேர்ந்து சிவக்குமாரை அடித்து கொன்றோம். இரும்பு கம்பியால் தாக்கினோம். பிறகு அவரை சுடுகாடு பக்கம் போட்டு விட்டு சென்று விட்டோம்.
தப்பி சென்ற போது எங்களை போலீசார் விசாரணை நடத்தி பிடித்து கொண்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு:
கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் அதன் தலைவர் செ.நல்லசாமி கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய அணை பவானிசாகர். 1958-லிருந்து 60 ஆண்டுகளுக்கும் மேலாக அணை நீர் நிர்வாகத்தில் அரசு ஆணைகள் பின்பற்றப்படவில்லை.
விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படவில்லை. காவிரித் தீர்ப்பும் கண்டு கொள்ளப்படவில்லை. விருப்பு, வெறுப்பு மற்றும் ஆதாய அடிப்படையிலேயே நீர் நிர்வாகம் நடத்தப்பட்டுள்ளது. இன்றும் நடந்து கொண்டிருக்கிறது.
நீர் நிர்வாகத் தவறுகளை அரசின் பார்வைக்குக் கொண்டு சென்றும் பலனில்லை. ஒரு தவறு கண்டுபிடிக்கப்பட்டால் அது உடனடியாகத் திருத்திக் கொள்ளப்பட வேண்டும் என்பது உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு ஆனால் அது இங்கு எடுபடவில்லை.

தவறான இந்த நீர் நிர்வாகமானது பாசனப் பயனாளிகளிடையே ஒரு மோதல் போக்கை உருவாக்கி உள்ளது. நீர் பங்கீடு தொடர்பான வழக்குகளை உச்சநீதி மன்றம் வரை கொண்டு செல்ல வைத்துள்ளது. இந்தத் தவறான நீர் நிர்வாகம் பிரித்தாளும் சூழ்ச்சியின் வெளிப்பாடே ஆகும்.
2019 பாராளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற உள்ளது. பவானி பாசனம் பெறும் நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் நீர் நிர்வாகத் தவறுகள் ஏதும் நடக்கவில்லை என நிரூபித்து விட்டால் கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கம் கோடி ரூபாய் பரிசு கொடுக்கும்.
மேலும் போட்டியிடும் வேட்பாளர்கள் இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு வாதிட்டு வெற்றி பெற்றால் கோடி ரூபாய் பரிசு கிடைப்பதுடன் தேர்தல் வெற்றியும் உறுதியாகும்.
ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் தொகுதியில் உள்ள பிரச்சனைகளை அறிந்தவராகவும் எடுத்துச் சொல்லி தீர்வு காண்பவராகவும் இருக்க வேண்டும். கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கம் விடுத்திருக்கும் இந்த அழைப்பை ஏற்க மறுப்பது அரசியல் அநாகரீகம் ஆகும். இவற்றை உணர்ந்து வாக்காளர்கள் வாக்களிப்பதே அரசியல் நாகரீகம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Farmers #BhavanisagarDam
கொடுமுடி:
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த வாழ நாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 45) தொழிலாளி.
சிவக்குமார் ஒரு அரசியல் கட்சியின் மாநில இளைஞர் அணி இணைச் செயலாளராகவும் உள்ளார். இவரது மனைவி பூங்கொடி (40). இவர்களுக்கு நவீன், சூர்யா என 2 மகன்கள், காயத்ரி என்ற ஒரு மகளும் உள்ளனர்.
கருத்து வேறுபாடு காரணமாக பூங்கொடி கணவர் சிவக்குமாரை பிரிந்து தனது மகன்கள் மகளுடன் பாசூரில் தனியாக வசித்து வருகிறார். சிவகுமார் வாழை நாயக்கன் பாளையம் பகுதியில் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை வடக்கு புதுப்பாளையம் சுடுகாடு கேட் அருகே உள்ள ஒரு புதரில் சிவக்குமார் தலையில் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாக கிடந்தார்.
பக்கத்து தோட்டத்தை சேர்ந்தவர்கள் இதனை பார்த்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிவகுமார் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே சிவக்குமார் பரிதாபமாக இறந்தார்.
சம்பவ இடத்திற்கு பெருந்துறை டிஎஸ்பி ராஜகுமார் வந்து விசாரணை நடத்தினர். மேலும் மோப்ப நாய் வீரா வர வழைக்கப்பட்டது.
கொலையுண்ட சிவகுமாருக்கு பெண்களுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. எனவே கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். பெருந்துறை டிஎஸ்பி ராஜகுமார உத்தரவின் பெயரில் கொடுமுடி இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மலையம் பாளையம் இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் சிவகுமாரின் கள்ளக்காதலி ஒருவரை போலீசார் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த கள்ளக்காதலி கொடுமுடி அருகே காசி பாளையத்தில் வசித்து வருகிறார். இவர் எழுமாத்தூரில் உள்ள தனியார் ஸ்பின்னிங் மில்லில் வேலை பார்த்து வருகிறார். கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து கடந்த 7 வருடமாக தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் அந்த பெண்ணுக்கும் சிவக்குமாருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதேபோன்று மொடக்குறிச்சி சேர்ந்த மற்றொரு பெண்ணுடன் சிவகுமாருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவருடன் சிவகுமார் கொடுமுடி அடுத்த ஒத்தக்கடை பகுதியில் தனியாக வசித்து வந்தார்.
சிவகுமார் பெண்களுடன் நெருக்கமாக பழகி அவர்களிடம் செலவுக்கு பணம் வாங்கி வந்ததாக கூறப்படுகிறது.
கொலை நடந்த இரவு முதல் கள்ளக்காதலி தனது செல்போன் எண்ணை சுவிட்ச் ஆப் செய்து விட்டார். அந்த பெண் தான் சில பேருடன் சேர்ந்து சிவகுமாரை வெட்டி கொலை செய்துள்ளது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ம.தி.மு.க. வேட்பாளர் கணேசமூர்த்தியை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
பிரதமர் மோடி ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுக்கப்படும் என தெரிவித்தார். அவர் 2,000 பேருக்கு கூட வேலை கொடுக்கவில்லை. வீட்டுக்கு வீடு ரூ.15 லட்சம் கொடுக்கப்படும் என தெரிவித்தார். ஆனால் 15 ரூபாய் கூட வந்து சேரவில்லை. கடந்த தேர்தலில் அளித்த வாக்கு உறுதிகளை மோடி நிறை வேற்றவில்லை.
ஜிஎஸ்டியால் தமிழகத்தில் 50,000 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் 5 லட்சம் பேர் வேலை இழந்து தவிக்கின்றனர்.
முல்லைப் பெரியாறு பிரச்சினையில் உச்சநீதி மன்றம் தீர்ப்பு அளித்த பிறகும் புதிதாக அணை கட்டுவோம். பென்னிகுக் கட்டிய அணையை உடைப்போம் என்று கூறும் கேரள அரசுக்கு மத்திய அரசு பச்சைக் கொடி காட்டுகிறது. தமிழகத்தை வஞ்சிக்கிறது.
கர்நாடக மாநிலத்தில் மேகதாது அணை கட்டினால் தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது. இதனால் தமிழகத்தில் 19 மாவட்டங்களில் 25 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் பாலைவனமாக மாறி விடும்.
தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடக்கிறது. முதல்வர் மீதே ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. தமிழக மக்களின் வாழ்வாதாரங்களை காக்க முயலாமல், மத்திய அரசுக்கு கைக்கூலியாக அதிமுக அரசு உள்ளது.
இந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவில் ஜனநாயகம் நிலைக்குமா? பாசிச சர்வாதிகாரம் நிலைக்குமா? என்பது தான். அதை நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும் என்றார்.
இவ்வாறு அவர் பேசினார். #vaiko #parliamentelection
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த வாழை நாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 45) தொழிலாளி. இவரது மனைவி பூங்கொடி (40). இவர்களுக்கு நவீன், சூர்யா என இரண்டு மகன்களும் காயத்ரி என்ற மகளும் உள்ளனர்.
கருத்து வேறுபாடு காரணமாக பூங்கொடி கணவர் சிவக்குமாரை பிரிந்து தனது மகன்கள், மகளுடன் பாசூரில் தனியாக வசித்து வருகிறார். சிவகுமார் வாழை நாயக்கன் பாளையம் பகுதியில் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில் இன்று காலை 8.30 மணி அளவில் வடக்கு புதுப்பாளையம் சுடுகாடு கேட் அருகே உள்ள ஒரு புதரில் சிவகுமார் தலையில் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாக கிடந்துள்ளார். பக்கத்து தோட்டத்தை சேர்ந்தவர்கள் இதனை பார்த்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.
108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிவகுமார் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இறந்த சிவகுமாருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கொலை நடந்திருக்கலாமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிவகுமார் எதற்காக சுடுகாடு அருகே உள்ள பகுதிக்கு வந்தார் என்று மர்மமாக உள்ளது. சம்பவ இடத்தில் மோப்பநாய் வீரா வரவழைக்கப்பட்டு உள்ளது.
மேலும் பெருந்துறை டி.எஸ்.பி நேரில் வந்து விசாரணை நடத்தினர்.
கோபி அருகே உள்ள உக்ரம்மில்மேடு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது32). மினி வேன் டிரைவர். இவரது மனைவி இந்துமதி.
இந்துமதியும் அவரது மாமியார் ராசாத்தியும் வீட்டின் முன்பு இட்லி கடை நடத்தி வருகிறார்கள். செந்தில்குமாரின் பக்கத்து வீட்டில் அவரது உறவினர் சின்னராஜ்(50) என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் சின்னராஜ் செலவுக்காக செந்தில்குமாரிடம் ரூ.1800 கடன் வாங்கி இருந்தார். பின்னர் செந்தில்குமார், சின்னராஜிடம் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அதற்கு சின்னராஜ் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது.
நேற்று மாலை 4 மணியளவில் செந்தில்குமார், சின்னராஜிடம் பணத்தை கேட்டுள்ளார். அதற்கு சின்னராஜ் பணத்தை கோவிலில் வைத்து விடுகிறேன். நீ போய் கோவிலில் எடுத்து கொள் என்றாராம். இதற்கு செந்தில்குமார் எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் செந்தில்குமார் வீட்டிற்கு சென்று விட்டார்.
இரவு 8.30 மணியளவில் செந்தில்குமார் வீட்டிற்கு சின்னராஜ், அவரது மனைவி பழனியம்மாள்(45), மகள் ரம்யா(22), மருமகன் பால்ராஜ்(25) ஆகியோர் வந்து பேசினார்கள். அப்போது அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த சின்னராஜ், பழனியம்மாள், ரம்யா, பால்ராஜ் ஆகியோர் கத்தியால் செந்தில்குமாரை மாறி மாறி குத்தியதாக கூறப்படுகிறது.
இந்த எதிர்பாராத தாக்குதலில் படுகாயம் அடைந்த செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். கொலை நடந்ததும் 4 பேரும் தலைமறைவாகி விட்டனர்.
இது குறித்து கடத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து செந்தில்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசுஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த கடத்தூர் போலீசார் தலைமறைவான சின்னராஜ், பழனியம்மாள், ரம்யா, பால்ராஜ் ஆகியோரை வலை வீசி தேடி வருகின்றனர்.
கோபி பஸ் நிலையம் அருகே தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
அ.தி.மு.க. கூட்டணி வெற்றி கூட்டணியாக அமைந்துள்ளது. இந்த கூட்டணி அமைய கூடாது என திமுக பல்வேறு சூழ்ச்சிகளை செய்தது. அதையெல்லாம் முறியடித்து வெற்றி கூட்டணியாக அமைந்துள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு அதிமுக, தேமுதிக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 40 தொகுதிகளிலும் இந்த கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்பதில் ஐயமில்லை. வெற்றி பெற்று செல்லும் எங்கள் கூட்டணி எம்.பி.க்கள் தமிழகத்திற்கான திட்டங்களை மத்திய அரசை வலியுறுத்தி செயல்படுத்துவார்கள்.
மத்தியில் மீண்டும் மோடி ஆட்சி தான் அமையும். அப்போது நதிகளை இணைக்க வலியுறுத்துவோம். ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால், பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதை எடுத்துக்கூறி மறுபரிசீலனை செய்ய வலியறுத்துவோம்.
உலக நாடுகளில் 4-வது வல்லரசு நாடாக இந்தியா வளர்ந்து வருகிறது. இதற்கு காரணமே பிரதமர் மோடி தான்.
இவ்வாறு அவர் கூறினார். #PremaLatha
ஈரோடு:
ஈரோடு வளையகார வீதி, குப்பிபாலம் அருகே காலிங்கராயன் வாய்க்காலில் ஒரு பெண் உள்பட 3 பேரின் சடலங்கள் மிதந்து வந்ததாக ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் அந்த பெண் தனது இரண்டு குழந்தைகளையும் துணியால் உடலில் கட்டியபடி வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது ஆனால் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியாமல் இருந்தது.
இந்நிலையில் தற்போது தற்கொலை செய்து கொண்டவர்களின் அடையாளம் மற்றும் அவர்களின் பற்றி விவரம் தெரிய வந்துள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் கள்ளக்குறிச்சி சாலையைச் சேர்ந்த மணிகண்டன் மனைவி தமிழ்செல்வி (வயது 30) இவர்களது மகள்கள் துர்கா ஸ்ரீ, தானுஸ்ரீ என தெரியவந்தது.
மணிகண்டன் எலக்ட்ரீ‘ஷியனாக வேலை பார்த்து வருகிறார்.
தமிழ்செல்வியின் சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஆகும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு மணிகண்டனும் தமிழ்ச்செல்வியும் திருப்பூர் பனியன் கம்பெனியில் பணியாற்றிய போது பழக்கம் ஏற்பட்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதேபோன்று கடந்த 26-ஆம் தேதி மீண்டும் இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த தமிழ் செல்வி தனது இரண்டு பெண் குழந்தைகளை அழைத்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு செல்வதற்தாக ஈரோடு வந்தார்.
அப்போது கருங்கல் பாளையம் வண்டியூரான் கோவில் பஸ் நிறுத்தத்தில் தனது குழந்தைகளுடன் இறங்கியுள்ளார் பின்னர் அப்பகுதியில் உள்ள காலிங்கராயன் வாய்க்காலில் குழந்தைகளுடன் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் நேற்று மாலை தமிழ்ச்செல்வியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஈரோடு வந்தனர்.
அவர்களிடம் ஈரோடு டவுன் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து மணிகண்டனுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
பாராளுமன்ற தேர்தல் வேட்பு மனு தாக்கல் முடிந்த கையோடு தற்போது வேட்பாளர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஈரோடு பகுதிகளில் இன்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மாலை 5 மணி முதல் ம.தி.மு.க. வேட்பாளர் கணேசமூர்த்தியை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
அவர் மாலை 5 மணிக்கு ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் பிரசாரத்தை தொடங்கி சூளை, கனிராவுத்தர் குளம், வில்லரசம்பட்டி, நசியனூர் அக்ரகாரம் பகுதிகளில் பொதுமக்கள் கூடும் பகுதிகளில் பிரசாரம் செய்து பேசுகிறார்.
இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் இன்று மாலை 5 மணி முதல் கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் செய்கிறார்.
அவர் கோபி, கவுந்தப்பாடி, ஆர்.என்.புதூர் ஈரோடு கிருஷ்ணம் பாளையம் பகுதிகளில் பிரசாரம் செய்கிறார். #vaiko #premalatha
கோபி:
பாராளுமன்ற தேர்தலையொட்டி ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு பகுதிகளில் சோதனை மேற் கொண்டு வருகிறார்கள்.
கோபி அருகே உள்ள கெட்டி செவியூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை பிரிவு அதிகாரி அசோக், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் குட்டியண்ணன், சுந்தர வடிவேல் மற்றும் போலீசார், அதிகாரிகள் வாகன சோதனை மேற் கொண்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.2 லட்சம் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடம் விசாரணை செய்யப்பட்டது.
கோபியில் இருந்து கேரளா மாநிலம் எர்ணாகுளம் சென்றதாகவும், கேராளாவுக்கு பழைய இரும்பு சாமான்கள் வாங்க செல்வதாகவும் தெரிய வந்தது. ஆனால் அந்த பணத்துக்கு உரிய ஆவணம் இல்லாததது தெரிய வந்தது.
இதையடுத்து உரிய ஆவணம் இல்லாமல் பணம் எடுத்து சென்றதாக கூறி 2 லட்சம் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். உரிய ஆவணத்தை காண்பித்து பணத்தை பெற்று கொள்ளலாம் என தெரிவித்தனர்.
பறிமுதல் செய்த பணத்தை கோபி ஆர்.டி.ஓ. அசோகனிடம் ஒப்படைக்கப்பட்டது. #LokSabhaElections2019 #LSpolls
சத்தியமங்கலம் அடுத்த அரியப்பம்பாளையம், பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் காளியண்ணன். இவரது மகன் கவுதம் (வயது 17). கவுதம் தற்போது பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதியுள்ளார்.
கவுதம் தனது தந்தையிடம் பிளஸ்-2 பொதுத் தேர்வு தான் சரியாக எழுதவில்லை என்று கூறி வருத்தப்பட்டுள்ளார். அவருக்கு தந்தை காளியண்ணன் ஆறுதல் கூறி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காளியண்ணன் வேலை விஷயமாக வெளியே சென்று விட்டார். வீட்டில் கவுதம் மட்டும் தனியாக இருந்தார்.
அப்போது தற்கொலை செய்ய முடிவு எடுத்த கவுதம் வீட்டில் தூக்கு போட்டு தொங்கினார்.
வீட்டுக்கு திரும்பி வந்த காளியண்ணன் கதவை தட்டினார். ஆனால் எந்த ஒரு பதிலும் இல்லை.
இதனால் சந்தேகம் அடைந்த காளியண்ணன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே வந்து பார்த்தார். அப்போது கவுதம் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கவுதமை பரிசோதித்த டாக்டர் அவர் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






