என் மலர்
ஈரோடு
புதிதாக திருத்தி அமைக்கப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இந்த புதிய வாகன சட்டத்தின்படி போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு அபராதம் மூன்று மடங்காக உயர்த்தப்பட்டது.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இந்த சட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. தமிழகத்தைப் பொருத்தவரை இந்த சட்டம் இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. ஒரு குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இருப்பினும் ஆங்காங்கே ஒரு சில பகுதிகளில் புதிய வாகன ஓட்ட சட்டத்தின்படி போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
ஈரோட்டில் முதல் முறையாக திருத்தப்பட்ட புதிய வாகன மோட்டார் சட்டத்தின்படி குடித்து விட்டு மற்றும் வாகன ஓட்டுனர் உரிமையின்றி மோட்டார் சைக்கிளில் வந்த ஈரோடு வாலிபர் ராஜா என்பவருக்கு போலீசார் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
ஈரோடு டவுன் போலீஸார் ஈரோடு பஸ் நிலையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வாலிபர் ராஜா வந்தார்.
வாலிபர் ராஜாவை நிறுத்தி சோதனை செய்தபோது அவர் மது அருந்தி வந்திருப்பதும், வாகன ஓட்டுநர் உரிமம் இன்றி வந்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த வாலிபருக்கு ரூ . 15,000 அபராதம் விதிக்கப்பட்டது.
திருப்பூர், பொள்ளாச்சி ரோட்டில் வசிக்கும் சரவணகுமார் மனைவி மஞ்சு (வயது 30) இவருக்கு சொந்தமாக லாரி உள்ளது. இந்த லாரியை விருதுநகர் மாவட்டம், உலக்கொடி பகுதியில் வசிக்கும் மலைச்சாமி மகன் கார்த்திக் (வயது 28) டிரைவராக ஓட்டி வந்துள்ளார்.
கடந்த 12-ம் தேதி மாலை 5 மணிக்கு பல்லடம் மினி லாரி ஸ்டாண்டில் பெருந்துறைக்கு செல்ல வேண்டும் எனக் கூறி வாடகைக்கு வண்டி வேண்டும் என கார்த்திக்கியிடம் 4 பேர் கேட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து கார்த்திக் லாரியை ஓட்டி வர 4 பேர் அமர்ந்து கொண்டு பல்லடத்தில் இருந்து புறப்பட்டு ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகே விராலிமலை மேடு என்ற பகுதிக்கு வந்து கொண்டிருந்தபோது லாரியை நிறுத்தி கடைக்கு சென்றுள்ளனர்.
இதில், டிரைவருக்கு மயக்க மருந்து கலந்து கொடுத்த குளிர்பானத்தை வழங்கியதாக தெரிகிறது. இதனால் கார்த்திக் வாந்தி மற்றும் மயக்கம் வருவதாக கூறிய நிலையில் 4 நபர்களும் உடனே உதவி செய்வது போல் கார்த்தியை லாரியில் ஏற்றி சித்தோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்துள்ளனர். பின்னர் லாரியை கடத்தி சென்றுள்ளனர்.
இதுகுறித்து சித்தோடு போலீசாரிடம் கார்த்திக் கொடுத்த புகாரின் அடிப்படையில் சித்தோடு இன்ஸ்பெக்டர் கதிர்வேல் வழக்குப்பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று சித்தோடு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து சித்தோடு அருகில் உள்ள காஞ்சிகோவில் பிரிவு ரோட்டில் அதிகாலை 5.30 மணியளவில் இன்ஸ்பெக்டர் கதிர்வேல் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி விசாரணை மேற்கொண்டதில் டிரைவர் முன்னுக்கு பின்னாக பதிலளித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து அவரை போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் கோபி, பல்லகவுண்டன்பாளையம் பகுதியில் வசிக்கும் முருகேசன் மகன் பிரசாந்த் (வயது 21) டிரைவரான இவர் லாரியை ஓட்டி வந்துள்ளார். மேலும், லாரி கடத்தல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளான கிருஷ்ணமூர்த்தி, பவானி, அரவிந்த் ஆகிய 3 பேரும் தலைமறைவாக இருப்பது தெரியவந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து பிரசாந்த் சித்தோடு போலீசாரால் கைது செய்யப்பட்டு கோபி மாவட்ட கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.
மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை சித்தோடு இன்ஸ்பெக்டர் கதிர்வேல் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு ரெயில் நிலையம் முன்பு உள்ள பஸ் நிறுத்தம் பகுதியில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கி கிடப்பதாக ஈரோடு சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அந்த முதியவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அந்த முதியவருக்கு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற எந்த விவரம் தெரியவில்லை.
இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொடுமுடி:
கொடுமுடி அருகில் கொளாநல்லிகிராமம் பெரிய செம்மான்டாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 40) இவருக்கு பலமுறை திருமண ஏற்பாடு செய்தும் திருமண தடை ஏற்பட்டு வந்தது.
இதனால் மனமுடைந்த பத்மநாபன் கடந்த மாதம் 25-ந் தேதி மதியம் 11.30 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத போது தோட்டத்திற்கு அடிப்பதற்காக வாங்கி வைத்து இருந்த பூச்சிக்கொல்லி மருந்தினை எடுத்து குடித்து விட்டார்.
பின்னர் வாந்தி எடுத்துக் கொண்டு இருந்த அவரை அவரது சகோதரி மீனாட்சி பார்த்து விசாரித்த போது விஷ மருந்தினை குடித்துவிட்டதை அறிந்து ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த பத்மநாபன் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
இது குறித்து மீனாட்சி கொடுத்த புகாரின் பேரில் மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
நம்பியூர்:
நம்பியூர் பள்ளிகூடம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ்குமார் (வயது 28) டெய்லராக பணிபுரிந்து வந்தார். காதல் திருமணம் செய்தவர். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.
நேற்று மாலை 5 மணியளவில் பிரகாஷ் குமார் மோட்டார் சைக்கிளில் நம்பியூர்-கோபி ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.
கே.மேட்டுப்பாளையம் பகுதியில் வந்தபோது எதிரே வந்த ஒரு கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவரது உடல் மற்றும் கை-கால் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இந்த விபத்து குறித்து நம்பியூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டம் ரங்கநாதபுரம் அரிஜன காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் விகாசினி (வயது 14). விகாசினி நம்பியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள்.
மாணவிக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக நம்பியூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
மாணவிக்கு தொடர்ந்து காய்ச்சல் அடிக்கவே மீண்டும் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அப்போது டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது மாணவி விகாசினிக்கு விஷக்காய்ச்சல் இருப்பதாக கூறினர்.
உடனடியாக மாணவியை ஆம்புலன்சு மூலம் கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது மாணவி விகாசினி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
விஷக்காய்ச்சலுக்கு மாணவி பலியான சம்பவம் நம்பியூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மன்னார்குடியிலிருந்து கோவைக்கு செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. இந்த ரெயில் இன்று அதிகாலை 2.30 மணிக்கு ஈரோடு ரெயில் நிலையத்தில் வந்து நின்றது.
அங்கு ரெயில் பெட்டிகளில் தண்ணீரை நிரப்பி கொண்டிருந்தனர்.
பிறகு அதிகாலை 3.30 மணிக்கு மீண்டும் ரெயில் கோவைக்கு புறப்பட்டது. ரெயில் என்ஜின் அருகே உள்ள பொதுபிரிவு பெட்டியில் ஜன்னல் ஓரமாக அமர்ந்திருந்த ஒரு பெண்ணிடம் அங்கு பயணிகளோடு பயணியாக இருந்த மர்ம ஆசாமி திடீரென அந்த பெண்ணின் கழுத்தில் இருந்த 5 பவுன் நகையை பறித்தான்.
ரெயில் புறப்பட்டதும் அவன் நகையை பறித்து கொண்டு ஈரோடு லோகோ ஷெட் அருகே ரெயில் சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து குதித்த கொள்ளையன் இருட்டில் ஓடி மறைந்து விட்டான்.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் நகையை பறிகொடுத்த பெண் திருடன்.. திருடன் என சத்தம் போட்டார்.
ஆனால் ரெயில் ஈரோட்டிலிருந்து வேகமாக சென்று விட்டது. ரெயில் கோவை சென்றதும் அங்கு ரெயில்வே போலீசாரிடம் நகையை பறி கொடுத்த பெண்பயணி புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு-சேலம் வழியில் மாவேலி பாளையம் பகுதியில் பதுங்கி இந்த கும்பல் சிக்னல் பிரச்சனையை சாதகமாக பயன்படுத்தி ரெயில் ஜன்னல் ஓரமாக படுத்திருக்கும் பெண்களிடம் நகையை பறித்து வந்தனர். ரெயில்வே தனிப்படை பிரிவு போலீசார் இந்த கும்பலை கூண்டோடு கைது செய்தனர். 4 வடமாநில வாலிபர்களை பிடித்து ஜெயிலில் அடைத்தனர்.
இப்போது ஈரோடு- கோவை இடையே ரெயில் கொள்ளையன் மீண்டும் கைவரிசையை காட்டத் தொடங்கி உள்ளான்.
சென்னை பள்ளிக் கரணையில் பெண் இன்ஜினியர் சுபஸ்ரீ பேனர் விழுந்து லாரியில் சிக்கி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தி உள்ளது.
பெண் இன்ஜினியர் சுபஸ்ரீ பலியானது தொடர்பாக சென்னை ஐகோர்ட் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பேனர் விவகாரத்தில் ஏராளமான உத்தரவுகள் புதுப்பிக்கப்பட்டு இருந்தும் அவை முறையாக கடைப்பிடிக்கப்படவில்லை என்று கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற வேண்டும் என்றும் இது தொடர்பாக முழு தகவல்களையும் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருந்தனர்.
இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த பேனர்கள் இரவோடு இரவாக அகற்றும் பணியை மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் போலீசார் ஒருங்கிணைந்து செய்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவின்பேரில் அனுமதி யின்றி வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றும் பணி இரவு தொடங்கியது. ஈரோடு மாநகர் பகுதியில் பன்னீர்செல்வம் பார்க்கில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள், பிரப் ரோடு, பெருந்துறை ரோடு, ஈரோடு காளைமாடு சிலை, ஈரோடு பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்வஸ்திக் கானர், வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளையம் உள்பட பகுதியில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்கள் அரசியல்கட்சி பேனர்களை சம்பந்தப்பட்டவர்கள் தாமாகவே முன்வந்து அகற்றினர். ஒரு சில இடங்களில் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.
இதைப்போன்று கோபி பகுதியில் அமைச்சர் செங்கோட்டையன் அ.தி.மு.க. சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்ற வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார்.
அதன் பேரில் நிர்வாகிகள் இரவோடு இரவாக பேனர்களை அகற்றினர். இதேபோன்று பவானி, அந்தியூர், சத்தியமங்கலம், மொடக்குறிச்சி , கொடுமுடி, பெருந்துறை உள்பட பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றப்பட்டு வருகின்றன.
நேற்று ஒரே நாளில் இரவு மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நடவடிக்கையை பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வரவேற்றுள்ளனர்.
பவானி அடுத்த குருப்பநாயக்கன்பாளையம் விதைப்பண்ணை அருகே வசித்து வரும் செல்லமுத்து மகன் சக்திவேல் (47). இவர் பவானியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தாவரவியல் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
ஆசிரியர் சக்திவேல் 11-ம் வகுப்பு மாணவிகளிடம் தவறான முறையில் நடப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக 11-ம் வகுப்பு பயிலும் இரண்டு மாணவிகளிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்ததுள்ளது.
இது குறித்து மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்ததையடுத்து ஆத்திரமடைந்த பெற்றோர் தங்களது உறவினர்களுடன் பள்ளியை முற்றுகையிட்டு தவறான முறையில் நடக்கும் ஆசிரியரை பணி நீக்கம் செய்திட வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் பவானி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்நிலையில் ஆசிரியர் சக்திவேல் தலைமறைவானார்.
புகாரின் பேரில் ஆசிரியரின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த சக்திவேலை தேடி வந்தனர்.
இந்நிலையில் லட்சிநகர் பஸ் ஸ்டாப்பில் சங்ககிரி செல்வதற்காக சக்திவேல் நின்று கொண்டிருந்தார். பவானி மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் வினோதினி அவரை கைது செய்தார். பின்னர் சக்திவேல் கோர்ட்டில் ஆஜர்படுத்தபட்டு கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
ஈரோடு:
கோவை மாவட்டம் வடபாவை காமராஜர் நகரைச் சேர்ந்தவர் பிரதீப் (வயது 32). இவருடைய பாட்டி வீடு ஈரோடு கருங்கல் பாளையத்தில் உள்ள திருநகர் காலனி ராஜாஜி புரத்தில் உள்ளது. இதனால் பிரதீப் அடிக்கடி ஈரோடுக்கு வந்து செல்வது வழக்கம்.
அப்போது அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் பிரதீப் கருங்கல் பாளையம் திருநகர் காலனி கே.என்.கே ரோட்டில் ஒரு கடை முன்பு நின்று கொண்டிருந்த போது மணிகண்டன் தனது நண்பர்களான பாலமுருகன், சுலைமான், முத்து உட்பட சிலருடன் அங்கு வந்தார். பின்னர் அவர்களுக்குள் மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் மட்டும் அவருடைய நண்பர்கள் சேர்ந்து தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரதீப்பின் தலை, முதுகு, மார்பு பகுதிகளில் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த பிரதீப் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது எனினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை பிரதீப் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கருங்கல் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன் உள்பட 4 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணை முடிவில் தான் முன்விரோத காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு எதற்காக இந்த கொலை நடந்தது? என்பது போன்ற விவரம் தெரியவரும். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு:
ஈரோடு பஸ் நிலையத்தில் பிக் பாக்கெட் ஆசாமிகள் மற்றும் வழிப்பறி திருடர்களை போலீசார் கண்காணித்து ஒரு பக்கம் நடவடிக்கை எடுத்து வந்தாலும் மறு பக்கம் காதல் ஜோடி மற்றும் கள்ளக்காதல் ஜோடியினரும் தங்களது செக்ஸ் விளையாட்டில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
குறிப்பாக ஈரோடு மினி பஸ் நிலையத்தில் நடக்கும் சமூக விரோத செயல்கள் ஏராளம்... இதை யாரும் கண்டு கொள்ளாததால் அங்கு இப்போது காதல் விளையாட்டும் தாராளம்!
மினி பஸ் நிலையத்துக்கு பஸ் ஏற வருவது போல் சில ஜோடிகள் வந்து அங்குள்ள இருக்கையில் அமர்ந்து அங்கும், இங்கும் நோட்ட மிட்டு செக்ஸ் குறும்பில் ஈடுபடுவதை பலர் பார்த்து முகம் சுழித்து உள்ளனர்.
பொதுவாக மினி பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகம் வராததால் இது அவர்களுக்கு ‘செம’ குஷியாகி விடுகிறது. இதனால் மினி பஸ் நிலையம் மன்மத லீலைகளின் கூடாரமாகவே மாறி போனது என்று கூட கூறலாம்.
நேற்று இரவு ஒரு படி மேலே ஒரு இளம் ஜோடி மிகவும் வரம்பை மீறி நடந்து கொண்டது.
நேற்று இரவு 11 மணி அளவில் ஈரோடு மினி பஸ் நிலையத்துக்கு ஒரு வாலிபருடன் ஒரு இளம்பெண் வந்தார். இருவரும் போதையில் இருந்தனர்.
பஸ் ஏற வந்தது போல் வந்த இவர்கள் பிறகு மினி பஸ் நிலையத்தில் திடீரென படுத்து கொண்டனர். அதன் பிறகு தான் அவர்கள் வரம்பு மீறி நடக்க தொடங்கினர். இரவு நேரம் ஆள் நடமாட்டம் இல்லாத நேரம் போதை வேறு... கேட்கவா வேண்டும். அந்த பெண் முதலில் வாலிபர் மீது கையை போட்டு அணைத்தார். அந்த வாலிபர் கையை எடுத்து அப்புறப் படுத்தினாலும் அந்த போதை பெண் விடவில்லை. மீண்டும்... மீண்டும் அந்த வாலிபரை உசுப்பேற்ற சிறிது நேரத்தில் அந்த வாலிபரும் அந்த பெண்ணை அணைக்க சுமார் 1 மணி நேரம் அந்த ஜோடி செக்ஸ் உல்லாசத்தில் ஈடுபட்டது.
அந்த வழியாக வெளியூர் போய் பஸ்சில் திரும்பிய சில பயணிகள் இந்த கண்றாவியை பார்த்து முகம் சுழித்தப்படி சென்றனர்.
ஈரோடு பஸ் நிலையத்தில் திருட்டை தடுக்க சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. ஆனால் இப்படி செக்ஸ் உல்லாசத்தில் ஈடுபடுவர்களையும் போலீசார் கண்டறிந்து விரட்டியடிக்க வேண்டும். மினி பஸ் நிலையத்தையும் அடிக்கடி கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.






